முதல் பக்கம்

Feb 28, 2014

தேசிய அறிவியல் தின விழா -2014

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் ஒன்றியக்கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியப்போட்டிகள் கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பேச்சு,ஓவிப்போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் மிக ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் துவக்க உரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கம்பம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமிகு.அங்கயர்க்கண்ணி பதக்கம் அணிவித்து பாராட்டினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை திருமிகு.எம்.சிந்தாமணி அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.அறிவியல் இயக்க ஆர்வலர். திருமிகு. செ.செல்லப்பாண்டியன் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் திருமிகு தே.சுந்தர் அவர்கள் தேசிய அறிவியல் தின கொண்டாட்டத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திருமிகு.வி,வெங்கட்ராமன் அவர்கள் சர்வதேச படிகவியல் ஆண்டு -2014 குறித்து கருத்துரை வழங்கினார்.கம்பம் கிளை பொருளாளர் திருமிகு மொ.தனசேகரன் அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவியர் பாண்டி, நந்தகுமார், தி. சூரிய பிரகாஷ், ரா.ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 180 க்கும் மேற்பட்ட மாணவர்களும், 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.அதே தினத்தன்று தேசியஅறிவியல்தினவிழா தேனி அன்னஞ்சி அரசு கள்ளர் உயர் நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் திருமிகு.பா.செந்தில் குமரன் அவர்களது ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.பல்வேறு அறிவியல் தலைப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் கல ந்துரையாடினர்.

Feb 24, 2014

பிப்ரவரி-28 தேசிய அறிவியல் தினம்-போட்டிகள்

வணக்கம்.. இந்தியர்களின் அறிவியல் சாதனையை இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னரே தனது இராமன் விளைவு எனும் அற்புத கண்டுபிடிப்பின் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறியவர் சர்.சி.வி.இராமன்.1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று வானம்,கடல் ஆகியவை நீல நிறமாக இருப்பதற்கான காரணத்தை தனது இராமன் விளைவு எனும் தத்துவத்தின் மூலம் சி.வி.இராமன் கண்டுபிடித்தார்.அவரது சாதனையை போற்றும் வகையில் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் வெகு சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் தேசிய அறிவியல் தினத்தை தேனி மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெகு சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானித்துள்ளது.அதன் ஒரு பகுதியாக பள்ளி.கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய,கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.வகுப்புகள்,தலைப்புகள் பின்வருமாறு…..

ஓவியம்:  5,6,7,8 ம் வகுப்பு : அறிவியலும் சுற்றுச்சூழலும் : A4 அளவு சார்ட்


கட்டுரை: 9.10,11,12 ம் வகுப்பு : உள்ளூர் வளர்ச்சியில் அறிவியல் : 4 பக்கம் மிகாமல்

கட்டுரை: கல்லூரி :சமூக வளர்ச்சியில் அறிவியலின் பங்கு : 6 பக்கம் மிகாமல்

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
வருகிற பிப்ரவரி 28(வெள்ளிக்கிழமை) 

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்படும்…..

மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

க.முத்துக்கண்ணன்(தேசிய அறிவியல் தினம்-போட்டிகள்)

வார்டு-20 கதவு எண்-2,வ.உ.சி தெரு,

கூடலூர்.625518.தேனி மாவட்டம்..

அன்புடன் 

வி.வெங்கட்ராமன்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.தேனி மாவட்டம்.

கம்பம் கிளை செயற்குழு கூட்டம்

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை செயற்குழு கூட்டம் பிப்ரவரி 19 புதனன்று மாலை 7 மணி அளவில் கம்பம் மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கிளையில் நடைப்பெற்ற வேலைகளை கிளைச் செயலர் க.முத்துக்கண்ணன் எடுத்துக்கூறினார்.கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக புத்தக விற்பனை மேற்கொண்டு வரும் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு நந்தகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நமது அறிவியல் வெளியீடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவது உணரப்பட்டது.பாரதி புத்தகாலாயம் மற்றும் மாநில மையத்தில் இருந்து புத்தகங்களை மேலும் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.வருகின்ற பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கம்பம் கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு,ஓவிய போட்டிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.மாநிலச்செயலாளர் தே.சுந்தர், மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,கிளைப்பொருளர் திருமிகு மொ.தனசேகரன்,கிளை இணைச்செயலாளர் ஓவியர் பாண்டி,கூடலூர் நகரக்கிளை செயலர் திருமிகு சூரியபிரகாஷ்,கிளை செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போடி கிளைச் செயற்குழு கூட்டம்

தேனி மாவட்டம் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் போடிகிளைச் செயற்குழு கூட்டம் 12-02-14 அன்று மாலை 5 மணி அளவில் போடி மூட்டா அலுவலகத்தில் நடைப்பெற்றது.போடி கிளைத் தலைவர் திருமிகு காளிதாஸ் தலைமை வகித்தார் மாவட்ட துணைத்தலைவர் திருமிகு சிவாஜி முன்னிலை வகித்தார்.செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலர் திருமிகு ஜேசுராஜ் கல ந்து கொண்டார்.கிளைப் பொருளாளர் திருமிகு ஜெகதீசன் உட்பட 10 கிளை உறுப்பினர்கள் செயற்குழுவில் கல ந்து கொண்டனர்.கிளை உறுப்பினர்களிடம் ஆயுள் சந்தா பெறுவது,தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகளை நடத்துவது, சர்வதேச படிக வரைவியல் ஆண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது வரும் மே மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான மார்றுக்கல்விக்கான வாசிப்பு முகாமை போடி கிளை மேற்பார்வையில் நடத்த மாவட்ட கிளையிடம் அனுமதி பெறுவது குறித்தும் பேசப்பட்டது….

அறிவியல் இயக்கத்தின் கூடலூர் கிளை துவக்க விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு கூடலூர் நகரக்கிளைத் துவக்க விழா கூடலூர் வி.கேன் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் திருமிகு தே.சுந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றியக்கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் வி.வெங்கட்ராமன் துவக்கவுரை வழங்கினார். மாநில செயலாளர் மு.தியாகராஜன் அவர்கள் ’’அறிவியல் இயக்கம் அன்று முதல் இன்று வரை’’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கூடலூர் கிளையின் தலைவராக கு.மோகன் அவர்களும், துணைத்தலைவராக நா.கண்ணன் அவர்களும், செயலாளராக தி.சூர்யபிரகாஸ் அவர்களும், துணைச் செயலாளராக நவீன் அவர்களும், பொருளாளராக ரா.ராஜ்குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கம்பம் ஒன்றியக்கிளை செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி வாழ்த்துரை வழங்கினார். கம்பம் ஒன்றியக் கிளை செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் நன்றி கூறினார்.

கிளைச்செயலர்கள் கூட்டம்

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியக்கிளைச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 31(வெள்ளிக்கிழமை) அன்று தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் திருமிகு பா செந்தில் குமரன் தலைமை வகித்தார்.மாவட்ட இணைச்செயலர் திருமிகு ஜேசுராஜ் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் கம்பம் கிளைச் செயலர் திருமிகு க.முத்துக்கண்ணன்,பெரியகுளம் கிளைச் செயலர் திருமிகு ராம்சங்கர்,போடி கிளைச் செயலர் திருமிகு ஸ்ரீதர்,கடமலை செயலர் திருமிகு இரத்தினசாமி மற்றும் பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி மாவட்ட செயலர் வி.வெங்கட் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன் கல ந்து கொண்டு கிளைகளின் கட ந்த கால செயல்பாடுகளை மதிப்பிட்டு பேசினார்.கிளைச் செயற்குழுவை கூட்டுவது,உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது,தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது சர்வதேச மகளிர் தன நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவை குறித்து விரிவாக திட்டமிடப்பட்டது.

மாவட்டசெயற்குழு கூட்டம்-4

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஜனவரி 12ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர் திருமதி ஞானசுந்தரி முன்னிலை வகித்தார்.மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலை அறிக்கை செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.உடனடியாக அனைத்து கிளைகளையும் கூட்டுவது,உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது,தேசிய அறிவியல் தினம்,சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுவது ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்பட்டன.மாநிலச் செயலாளர் திருமிகு.தியாகராஜன் மற்றும் தே.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வதேச படிகவியல் ஆண்டு-2014 குறித்து மாநிலக்கருத்தாளர் முனைவர் தினகரன் கருத்துரை ஆற்றினார்.செயற்குழு உறுப்பினர் ஓவியர் பாண்டி மாகடிகாரம் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.20 க்கும் மேற்பட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Feb 11, 2014

கூடலூர் நகரக்கிளை முதல் மாநாடு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு (பிப்ரவரி 10) கூடலூர் நகரக் கிளைத் துவக்க விழா கூடலூர் வி.கேன் பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி 10 அன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் திருமிகு தே.சுந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். கம்பம் செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் வி.வெங்கட்ராமன் துவக்கவுரை வழங்கினார். மாநில செயலாளர் மு.தியாகராஜன் அவர்கள் ’’அறிவியல் இயக்கம் அன்று முதல் இன்று வரை’’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கூடலூர் கிளையின் தலைவராக கு.மோகன் அவர்களும், துணைத்தலைவராக நா.கண்ணன், செயலாளராக தி.சூர்யபிரகாஸ், துணைச் செயலாளராக நவீன், பொருளாளராக ரா.ராஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கம்பம் செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி வாழ்த்துரை வழங்கினார். கம்பம் செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் நன்றி கூறினார்.

Feb 3, 2014

கிளைச்செயலர்கள் ச ந்திப்பு:

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியக்கிளைச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 31(வெள்ளிக்கிழமை) அன்று தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் திருமிகு பா செந்தில் குமரன் தலைமை வகித்தார்.மாவட்ட இணைச்செயலர் திருமிகு ஜேசுராஜ் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் கம்பம் கிளைச் செயலர் திருமிகு க.முத்துக்கண்ணன்,பெரியகுளம் கிளைச் செயலர் திருமிகு ராம்சங்கர்,போடி கிளைச் செயலர் திருமிகு ஸ்ரீதர்,கடமலை செயலர் திருமிகு இரத்தினசாமி மற்றும் பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி மாவட்ட செயலர் வி.வெங்கட் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன் கல ந்து கொண்டு கிளைகளின் கட ந்த கால செயல்பாடுகளை மதிப்பிட்டு பேசினார்.கிளைச் செயற்குழுவை கூட்டுவது,உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது,தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது சர்வதேச மகளிர் தன நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவை குறித்து விரிவாக திட்டமிடப்பட்டது.