முதல் பக்கம்

Sep 30, 2014

செப்.5 ஆசிரியர் தின போட்டி முடிவுகள் அறிவிப்பு -2014

அன்புடையீர், வணக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்கான கவிதை, கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:

9-12 வகுப்பு மாணவர்களுக்கான என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர் கட்டுரைப்போட்டியில் சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.கிருபமதிவதனி முதலிடத்தையும் ஜி.கல்லுப்பட்டி புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.திவயதர்ஷினி இரண்டாமிடத்தையும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவன் அ.தீபக் ராஜ் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆசிரியர்களுக்கான வகுப்பறையில் வசந்தம் கட்டுரைப்போட்டியில் பழனிசெட்டிபட்டி ஆசிரியை கெ.மணிமாலா முதலிடத்தையும் கூடலூர் அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தெ.அழகேசன் இரண்டாமிடத்தையும் சீலையம்பட்டி பாரதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை த.ச.பத்மாவதி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கான இப்படித்தான் இருக்கவேண்டும் வகுப்பறை என்ற கவிதைப்போட்டியில் வீரபாண்டி தேனி கலை அறிவியல் கல்லூரி மாணவி ஈ.பாண்டீஸ்வரி முதலிடத்தையும் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி ரேவதி விஸ்வநாதன் இரண்டாமிடத்தையும் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி எ.அரபத் நிஷா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். ஆர்வலர்களுக்கான அரசுப்பள்ளிகள்: நேற்று இன்று நாளை கட்டுரைப்போட்டியில் ஆண்டிபட்டி ஜெ.எட்வர்டு இன்பராஜ் முதலிடமும் தேவாரம் இரா.வே.இளங்கோவன் இரண்டாமிடமும் மொட்டனூத்து துரை.சுப்ரமணியன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

வெற்றிபெற்ற, போட்டிகளில் பங்குபெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் தே.சுந்தர், மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச்செயலாளர் வெங்கட்ராமன், மாவட்டப்பொருளாளர் மஹபூப் பீவி, மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணன் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Sep 23, 2014

மாவட்ட பொதுக்குழு கூட்டம்: 1

செப்டமபர் 20 சனி அன்று மாலை தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார். தேனி கிளைச்செயலர் தெய்வேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். ஜூன் 23 2013 மாவட்ட மாநாட்டிற்க்குப்பிறகு தேனி மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலைகளை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் அறிக்கையாக சமர்ப்பித்தார்.பிறகு அறிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது.மாட்டத்தில் நடைப்பெற்ற வேலை குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.அனைத்து கிளைகளிலும் செயல்பாடுகளை எடுத்துச் செல்வதன் அவசியம் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநிலச் செயலர் தியாகராஜன், சுந்தர் ஆகியோர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து கருத்துகளை வழங்கினர். மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் குறித்து எடுத்துரைத்தனர்.முப்பதுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்