முதல் பக்கம்

Showing posts with label அவசியம் படியுங்கள். Show all posts
Showing posts with label அவசியம் படியுங்கள். Show all posts

Mar 18, 2013

எம்மிடம் கிடைக்கும் நூல்கள்

ஏராளமான கேள்வி-பதில்களுடன்…
  • உங்களுக்கு தெரியுமா?
  • எதனாலே? எதனாலே? எதனாலே?
  •  யுரேகா! யுரேகா! யுரேகா!
  •  ஏன்? எதற்கு? எப்படி? 
  •   கேள்விக்கு நீ! பதிலுக்கு நான்!


உயிரினத்தோற்றம், நாளைய மாற்றங்களை அறிய…
  • உயிரியல் யுகம்
  • நீ எப்படித் தோன்றினாய்?
  • உயிர் தோன்றியது எப்படி?
  • பல்லுயிரியம்
  • நாராய்… நாராய்…
  • மனிதர்க்குத் தோழனடி
  • வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்
  • உயிர்க்கடிகாரமும் கைக்கடிகாரமும்
கடல், காற்று, ஆகாயம் அனைத்தையும் அறிய…
  • கோள்கள்
  • பூமியின்ரகசியங்கள்
  • மின்னும்மின்னும்விண்மீனே
  • பூமிஉருண்டைவடிவம்கொண்டதா?
  • கடல்கள்
  • செவ்வாய்க்கிரகமும்செவ்வாய்தோசமும்
  • ஏழரைச்சனி

ஆசிரியர், மாணவர்களுக்கான செயல்பாடுகளின் தொகுப்பாய்…
  • விளையாடுவோம் சிந்திப்போம்
  • அறிவியல் மகிழ்ச்சிகரமான விளையாட்டு
  • அறிவதின் ஆரம்பம்
  • அறிவியல் ஆனந்தம்
  • மந்திரமா? தந்திரமா?

விஞ்ஞானிகளை அறிமுகப்படுத்த உதவும்…
  • இளம் பருவத்தில் விஞ்ஞானிகள்
  • சார்லஸ் டார்வின்
  • மேரி கியூரி
  • நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்
  • கலகக்காரர் ஐன்ஸ்டீன்
  • அறிவியலில் பெண்கள்
வகுப்பறைகளை உங்கள் வசமாக்க,…
  • எனக்குரிய இடம் எங்கே?
  • ஏன் டீச்சர் எங்களைப் பெயிலாக்கினீங்க?
  • பள்ளிக்கூடத்தேர்தல்
  • ஆயிஷா
  • எது நல்ல பள்ளி
  • ஆளுக்கொரு கிணறு
  • கற்றது சிறையளவு

மேலும் எமது வெளியீடுகளாய்…

அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்காக… விஞ்ஞானச்சிறகு

தமிழ்வழி பயிலும் குழந்தைகளுக்காக  
                          அறிவியல் மாத இதழ்… துளிர்

ஆங்கிலத்தில் அறிவியல் இதழாய்… ஜந்தர் மந்தர்

ஆசிரியர்களுக்கான கல்வி இதழாய்… விழுது

மேலும் விபரங்களுக்கு…
தே.சுந்தர்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தேனி
அலைபேசி: 9488011128 / 9488683929 / 9443929250

புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை



அன்புடையீர்
வணக்கம்.

அறிவியல்… அறிவியல்… அறிவியல்… என தனது அனைத்துச் செயல்பாடுகளிலும் அறிவியல் பரப்புவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வ அமைப்பே தமிழ்நாடு அறிவியல் இயக்கமாகும்..

விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், படித்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என ஆர்வமுள்ள அனைவரும் உறுப்பினராகலாம். கருத்தாளராக, ஒருங்கிணைப்பாளராக, அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளராக ஆர்வமுள்ள யாரும்/நீங்களும் செயல்படலாம்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு, துளிர் அறிவியல் வினாடி-வினா, துளிர் அறிவியல் திருவிழாக்கள், எளிய அறிவியல் பரிசோதனைகள், கருவிகள் செய்வதற்கான பயிற்சிகள், மெட்ரிக் மேளாக்கள் என ஆண்டு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

அத்துடன் புத்தக விற்பனை என்பது வர்த்தகம் அல்ல! மாறாக மக்களின் அறிவைத் துலங்கச் செய்யும் அற்புதச் செயல்.. சேவை…! என்னும் இறையன்பு அவர்களின் சிந்தனைக்கேற்ப நல்ல பல அறிவியல் செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக சிறந்த புத்தகங்களையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டு வருகின்றது. அதற்காக UGC-ன் ஹரிஓம் விருதையும் பெற்றுள்ளது.

நண்பர்களே… ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம் என்கிறார் ஐசக் நியூட்டன்! புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது என்கிறார் பிளேட்டோ.! இருட்டறைக்குள் இருக்கின்ற நமக்கு வெளிச்சத்தை விநியோகிப்பவை புத்தகங்களே என்கிறார் இறையன்பு! உங்கள் வீட்டை அழகுபடுத்துவதற்கு புத்தகங்களை விட சிறந்த பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார் அறிஞர் கார்லைல். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கித்தருகின்ற மிகச் சிறந்த பரிசு புத்தகங்களே என்கிறார் சர்ச்சில்..!

புத்தகங்கள்…..
இதயங்களை இணைக்கின்ற நட்புப்பாலம்!
புத்தகங்கள்….
அறியாமை இருளை விரட்டும் சூரியன்!
புத்தகங்கள்….
அறிவுத்தாகத்தை தணிக்கும் அதிசய நீரூற்று!
புத்தகங்கள்….
அண்டவெளிகள் கடந்தும் ஆழ்கடல் நுழைந்தும் நம்மை
அழைத்துச் செல்லும் விநோதக் கப்பல்கள்!

வாசிப்போம்! அதுவே மனிதனின் சுவாசிப்பு!