முதல் பக்கம்

Showing posts with label பெரியகுளம் ஒன்றியக்கிளை. Show all posts
Showing posts with label பெரியகுளம் ஒன்றியக்கிளை. Show all posts

Sep 30, 2019

துளிர் அறிவியல் திருவிழா

பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிர் அறிவியல் திருவிழா நடைபெற்றது.. பாடல், கதை, எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா என முழு நாள் நிகழ்வாகத் திட்டமிடப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது.. கருத்தாளர்களாக நண்பர்கள் வீரையா, முத்துக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் மணிமேகலை, ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர். அவர்களுக்கு மாவட்ட மையத்தின் பாராட்டுகள்.. மாவட்ட, கிளை நிர்வாகிகள் பங்கேற்று இருக்க வேண்டும்.

Sep 20, 2019

பாவ்லோ பிரைரே பிறந்த நாள்

செப்.19 , மாற்றுக் கல்விச் சிந்தனையாளரான பாவ்லோ பிரைரே பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளம் கிளை சார்பில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நெல்லையப்பர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் ஞானசுந்தரி வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கருத்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் மணிமேகலை மற்றும் பெண் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். கிளைப் பொருளாளர் ராம்சங்கர் நன்றி கூறினார்.

Nov 10, 2017

கல்லூரியில் கருத்தரங்கு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரியகுளம் கிளை சார்பாக விஞ்ஞானி மேரி கியூரியின் பிறந்தநாள் கருத்தரங்கம், புனித அன்னாள் பெண்கள் கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. கிளைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். டிரயம்ப் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராம்சங்கர், ஆசிரியை மணிமேகலை முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்கம் மாநில தலைவர் மோகனா, விஞ்ஞானி மேரி கியூரியின் வாழ்க்கை வரலாறும், அவரது சாதனைகள் குறித்து மாணவிகளிடம் விளக்கினார். மாவட்ட செயலாளர் ஜெகநாதன், மாவட்ட தலைவர் மகேஷ், துணை செயலாளர் ராம்குமார், கல்லுாரி முதல்வர் பியூலா பிரக்ரன்ஸ், பேராசிரியர் போதுராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். அறிவியில் இயக்கம்கிளைச் செயலாளர் ஞானசுந்தரி நன்றி கூறினார்.

Jul 30, 2015

பெரியகுளம் ஒன்றியக்கிளை 3வது மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் ஒன்றியக்கிளை மாநாடு ஜூலை 29 2015 புதன்கிழமை அன்று மாலை மாலை 5 மணி அளவில் பெரியகுளம் நெல்லையப்பர் நடு நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை தாங்கினார். பெரியகுளம் கிளைச்செயலாளர் ஆர்.ராம்சங்கர் வரவேற்புரை ஆற்றி கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைப்பெற்றது. கிளையின் புதிய தலைவராக ஏ.எஸ்.பாலசுப்ரமணியம் அவர்களும் கிளைச்செயலாளராக ஆர்.ராம்சங்கர் ,பொருளாளராக எஸ்.ஏ.செல்வராஜ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக ஆர்.ஜெகநாதன் மற்றும் கார்த்திகேயன் அவர்களும் கிளைத் துணைத்தலைவர்களாக ஆர்.மனோகரன் மற்றும் கிருஷ்ணன் மற்றும் ஆர்.ரவிக்குமார் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். நிர்வாகக்குழுவை உள்ளடக்கி இருபது பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அம்மையப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கிளைப்பொருளாளர் எஸ்.ஏ.செல்வராஜ் நன்றி கூறினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மணிமேகலை மற்றூம் எஸ்.ஜெயந்தி ஆசிரியர் விஜயக்குமார் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Mar 8, 2015

பெரியகுளத்தில் தேசிய அறிவியல் தின விழா



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளை சார்பில் மார்ச் 6 பெரியகுளம் டிரயெம்ப் நடு நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா நடைப்பெற்றது.பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.கிளைச் செயலாளர் ஆர்.ராம்சங்கர் வரவேற்றார். நடு நிலைப்பள்ளி மாணவர்கள் அள்வில் மாணவர்களூக்கு ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைப்பெற்றன.ஒன்றிய அளவில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.

Jan 10, 2015

இளம் விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா


2014 ஆம் ஆண்டிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பெங்களூரில் நடைப்பெற்றது.இதில் தேனி மாவட்டத்தின் சார்பில் பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மாணவர்கள் குழு தேர்வு பெற்றது. சிறப்பான ஆய்வினை மேற்கொண்டு தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஜனவரி 9 வெள்ளி அன்று ஊர் பொதுமக்கள் சார்பில் நடைப்பெற்றது.உதவித்தொடக்க க்ல்வி அலுவலர் திலகவதி கல் ந்து கொண்டு இளம் விஞ்ஞானிகளை வாழ்த்திப்பேசினார்.மாவட்ட இணைச்செயலர் திருமிகு.ஞானசுந்தரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் மணிமேகலை மற்றும் ஜெயந்தி மாநிலச்செயலர் தியாகராஜன் மாவட்ட செயலர் வெங்கட் பெரியகுளம் கிளைச்செயலர் ராம்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

Nov 20, 2014

பெரியகுளம் கிளைச்செயற்குழு


நவம்பர் 19 பெரியகுளம் கிளைச் செயற்குழுக்கூட்டம் பெரியகுலம் டிரயெம்ப் நடு நிலைப்பள்ளியில் மாலையில் நடைப்பெற்றது.கிளைத்தலைவர் ஏ.எஸ் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.செயலர் ஆர்.ரம்சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலர் வெங்கட் மற்றும் மாநிலச் செயலர் தியாகராஜன் கலந்து கொண்டு கிளைச்செயல்பாடுகள் குறித்து பேசினர்.உறுப்பினர் சேர்க்கையினை தீவிரப்படுத்த முடுவு எடுக்கப்பட்டது.கிளைச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்,கார்த்திக்கேயன் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 5, 2014

உலக சுற்றுச்சூழல் தினம்-2014

ஜூன் 5 சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னட்டு பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலர் திருமிகு.ஞான சுந்தரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பிஅனர் திருமிகு,மணிமேகலை ஆகியோர் செய்திரு ந்தனர்.

Sep 22, 2013

ஆசிரியர் தினவிழா-பெரியகுளம்

டி.வாடிப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. 8 ஆசிரியர்கள், 150க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டனர். ஆசிரியர் இணைய ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஞானசுந்தரி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்

Aug 22, 2013

ஜி.கல்லுப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:


ஆக.6 பிற்பகல் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட முகாம் இணைந்து நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகேசன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் திருமிகு. பா.செந்தில்குமரன் கருத்தரங்கைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.


100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு.நாகராஜன் துவங்கிவைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அம்மையப்பன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Aug 8, 2013

டி.வாடிப்பட்டியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி:


பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.வாசுகி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.எம்.கே.மணிமேகலை வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்டத் துணைச்செயலாளர் திருமிகு.எஸ்.ஞானசுந்தரி ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஜெயந்தி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக அமைதியை வலியுறுத்தி மாணவர்கள், ஆசிரியர்களின் பேரணி நடைபெற்றது. 170 பேர் கலந்துகொண்டனர்.

Apr 13, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: பெரியகுளம் கிளை மாநாடு

2ஆவது கிளை மாநாடு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் ஒன்றியக்கிளையின் 2ஆவது கிளை மாநாடு இன்று-ஏப்ரல்,13,2013- காலை 10 மணிக்கு பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.  கிளைச்செயற்குழு உறுப்பினர் எஸ்.கார்த்திகேயன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் மாநாட்டைத் துவங்கி வைத்துப் பேசினார். கிளைச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் செயலறிக்கையினை சமர்ப்பித்துப் பேசினார். அதன் மீதான விவாதம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.




புதிய நிர்வாகிகள்:

கிளையின் தலைவராக ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், துணைத்தலைவர்களாக எஸ்.மனோகரன், ஞானசுந்தரி ஆகியோரும் கிளைச்செயலாளராக எஸ்.ராம்சங்கர் இணைச்செயலாளர்களாக என்.அப்பாஸ், எஸ்.கார்த்திகேயன் ஆகியோரும் பொருளாளராக எஸ்.ஏ.செல்வராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.ஸ்ரீராம், ராதாமணாளன், டி.கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ராமகுரு, கே.ஜி.பாலாஜி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். கிளை ஆலோசகர்களாக வி.ரமேஷ், ஏ.எஸ்.ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன், தேனி கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.


உலகை மாற்றிய அறிவியல் நூல்கள் கருத்துரை:



கிளை மாநாட்டினை முன்னிட்டு உலகை மாற்றிய அறிவியல் நூல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் கருத்துரையாற்றினார். இறுதியாக செயற்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.

 


Apr 15, 2012

திறனறிதல் தேர்வு: பரிசளிப்பு விழா-2012


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளையின் சார்பில் கடந்த பிப்ரவரி,25 ஆம் தேதி 6,7,8 மாணவர்களுக்கான அறிவியல் திறனறிதல் போட்டி நடைபெற்றது. அத்தேர்வில் சுமார் 1200 மாணவர்கள் பங்கேற்றனர். சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் 100/100 மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா ஏப்ரல், 14,2012 அன்று பெரியகுளம் எட்வர்டு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றுப் பேசினார். சாதனை புரிந்த மாணவர்களுக்கு பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் திரு.ஓ.ராஜா பரிசுகள் வழங்கி பாராட்டினார். வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.ப.ஜிந்தா மதார் மைதீன், எட்வர்டு நடுநிலைப்பள்ளி செயலாளர் திரு.எம்.வி.கிருஷ்ணமூர்த்தி, பெரியகுளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எ.விஜயகுமார், அரிமா.எ.சி.சிவபாலு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர்   ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.மனோகரன் நன்றி கூறினார். கிளைத் துணைத்தலைவர் எஸ்.எ.செல்வராஜ், பொருளாளர் பெ.ஆண்டவர், துணைச்செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் நண்பர்கள் கார்த்திகேயன், ஸ்ரீராம் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர். நகர்மன்ற பிரதிநிதிகள், 43 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 100 ஆசிரியர்கள் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் என மிகத்திரளாகப்  பங்கேற்றனர்.


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Mar 30, 2012

கிளைச் செயற்குழு-பெரியகுளம்

இன்று -மார்ச்,27-மாலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளையின் செயற்குழுக் கூட்டம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் எஸ்.ராம்சங்கர், பொருளாளர் பெ.ஆண்டவர் மற்றும் கிளை நண்பர்கள் செல்வராஜ், இரமேஷ், நவநீதன், ஜெயராமன் ஆகியோரும் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திறனறிதல் போட்டி பாராட்டுவிழா, கிளை நிதி மேம்பாடு, சுய உதவிக்குழுக்கள் துவங்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Feb 27, 2012

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் திறனறிதல் போட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரியகுளம் கிளையின் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி,25,2012-சனிக்கிழமையன்று பெரியகுளம் வி.எம்.நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறனறிதல் போட்டி நடைபெற்றது. ஒன்றியம் முழுவதுமிருந்து 44 நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6,7,8 வகுப்பு மாணவர்கள் 1160 பேரும் ஆசிரியர்கள் 88 பேரும் கலந்துகொண்டனர். தேர்வு இரண்டு மணிநேரம் நடைபெற்றது. அந்தந்த வகுப்பிற்குரிய அறிவியல் பாடங்களிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகக்  கண்காட்சி மற்றும் அன்றாட வாழ்வில் வேதியியல் குறித்த போஸ்டர் கண்காட்சியும் நடைபெற்றது. பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன். கிளைச் செயலாளர் எஸ்.இராம்சங்கர், கிளைப்பொருளாளர் பெ.ஆண்டவர் மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் எஸ்.எ.செல்வராஜ், வி.ரமேஷ், கார்த்திகேயன் மற்றும் சிவா ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சேசுராஜ், வி.வெங்கட்ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.மனோகரன், முத்துமணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Feb 17, 2012

பெரியகுளத்தில் கருத்தரங்கம் மற்றும் வான்நோக்கல் நிகழ்ச்சி

பெரியகுளம், தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பில் 2012,பிப்ரவரி,1 அன்று டிரையம்ப் நடுநிலைப்பள்ளியில் வானவியல் தொடர்பான கருத்தரங்கமும் எட்வர்டு பள்ளியில் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநிலத் துணைத்தலைவரும், கருத்தாளருமான பேரா.சோ.மோகனா அவர்களின் அனுபவப்பகிர்வு...
  • பெரியகுளம் அறிவியல் இயக்க நண்பர்களுக்கும அங்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும்  சிறப்பான பாராட்டுக்கள்..
  • அந்த பள்ளி அரசு நடுநிலைப் பள்ளி என்பதும், அவர்களுக்குத்தான் அறிவியல் இயக்க செய்திகள் சென்றடைவதும சிறப்பும், மகிழ்ச்சியுமாகும்.
  • இன்னொரு சிறப்பு தகவல் என்னவென்றால், பெரியவர்களே குறிப்பு எடுக்கத் தயங்கும் காலகட்டத்தில், அந்த பிஞ்சுகள் நோட்டில், நான் பேசும் தகவல்களை குறிப்பு எடுத்தனர். 
  • சுமார் 400 மாணவர்கள் என்றார் தலைமை ஆசிரியரும், பெரியகுளம் அறிவியல் இயக்க செயலருமான திருமிகு.ராம்சுந்தர். அனைவரும் கட்டுக்கோப்புடன், ஈடுபாட்டுடன் PPT  ஐ கவனமாக   கவனித்தனர் என்பது ஆச்சரியமான விஷயமே. 
  • வானவியல் கதையைப் பேசி முடித்ததும், நிறைய வினாக்கள் கேட்டனர். ஆனால் 8 ம வகுப்புகுட்பட்ட  குழந்தைகளே. 
  • நான் வானில் படம் எடுத்து இணைத்திருந்த நிலா, வியாழன்,வெள்ளி படங்களைப் பார்த்து இந்த கோள்களை ராக்கெட்டில் சென்றா. அல்லது விமானத்தில் சென்று படம் எடுத்தீர்களா என்றும் கேட்டனர். 
  • வீட்டுக்குச் செல்லும்போது, ஒவ்வொருவரும் நெருங்கி வந்து மெதுவாக, ரொம்ப நல்லா இருந்துச்சி மிஸ் , interesting ஆ இருந்ததுச்சி, ரொம்ப நன்றி, ரொம்ப தேங்க்ஸ், திரும்ப வருவீங்களா என்றனர்.. அரசுப் பள்ளி குழந்தைகள் . 
  • நலல விஷயங்களை, நன்றி சொல்லும் உணர்வு ஏற்படும்படி, ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு சொல்லிதந்திருக்கின்றனர்.  கற்றுக்கொடுத்த ஆசான்களுக்கு,  பாராட்டுக்கள்.
  • மனசுக்கு ரொம்பவே நிறைவாக இருந்தது. அவர்களின் செயலும், ஈர்ப்பும், கட்டுப்பாடும், ஆர்வமும். 
  • அதன்பின், மதுரை அறிவியல் இயக்க,சிறகு பொறுப்பாளர் திருமிகு. நாராயணசாமி உதவியுடன் இரவு வான் நோக்கல்  நிகழ்வு எட்வர்ட் நடுநிலைப் பள்ளியில்சிறப்பாக  நடந்தது. 
  • நாராயணசாமி தொலைநோக்கி மூலம் வியாழன்,வெள்ளி கோள்களையும், நிலாவையும் காண்பித்தார். 
  • நான் வானில் தெரியும் விண்மீன்களைக் பச்சை லேசர் உதவியுடன் காண்பித்து அவற்றின் பின்னணி, தொலைவு, வெப்பம், அளவு போன்றவற்றை சொன்னேன்.
  • பொதுவாக வானில் 20 பிரகாசமான விண்மீன்கள் உண்டு.அவற்றில் 9 விண்மீன்களை 01 .02 .12 அன்று இரவு பார்த்தோம். 
  • வேட்டைக்காரன்,பெரிய நாய், சிறிய நாய், ரிஷப விண்மீன் படலம், மிதுன விண்மீன் படலம், கார்த்திகை கன்னிகள், அகஸ்தியர், திருவாதிரை, மிருகசீரிஷம், ரைகல், பெல்லாட் ரிக்ஸ்,லீபஸ்,பெரும் சதுரம் எல்லாம் பார்த்தோம். 
  • நிலவின் ஒளி அதிகம் இருந்ததால், மேஷம் தெரியவில்லை.
  • எத்தனை பேர் வந்தனர் தெரியுமா? யாரும் மயக்கம் போட்டு விழுந்துவிட வேண்டாம்.சுமார் 900 பேர் வந்தனர். பெற்றோரும்,ஆசிரியர்களும் வந்தனர்.
  • அனைவரையும், கட்டுக்கோப்புடன் தொலை நோக்கி பார்க்க வைத்தார், திரு. ராம்சுந்தர் அவர்கள்.சபாஷ் சாரே  ..!
  • அவருக்கு சிறப்பான பாராட்டுக்கள். நண்பரே, உங்களின் உதவியுடன், இயக்கம் மேலும் செழிக்கும்,,உங்களின் குழந்தைகளும்,, எளிதில் வளையக்கூடியவர்களாய்  இருக்கின்றனரே..குழந்தைகளின் நெஞ்சில் வாழ்கிறீர்கள் என்பது நிதர்சனமாய் தெரிந்தது..இதோ பிடியுங்கள்..இன்னும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை.. தங்களின் குழுவுக்கும், மணிகண்டன்,ஆண்டவர், ஆனந்த கிருஷ்ணன் போன்றோருக்கும்.   மற்றும் அங்கிருந்த அனைவருக்கும்..
  • நண்பர்களே.. மீண்டும், மீண்டும் மிக்க நன்றியும், மகிழ்ச்சிப் பகிர்வும் பெரியகுளம் டீமுக்கும், அவர்களை வழி நடத்தும் தேனி மாவட்ட செயலர் சுந்தருக்கும். 
  • நன்றி..நன்றி..நன்றி..மனதுக்கு மகிழ்வும், நிறையும் தந்தமைக்கும், அன்பான, ஆர்வம் மிக்க கட்டுக்கோப்பான குழந்தைகளை உருவாக்கியதற்கும்   .
என்றும் அன்புடன்,
மோகனா

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Nov 16, 2011

19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு-நவம்பர்,13,2011 மாநில அளவிலான மாநாட்டிற்கு தேனி மாவட்டத்தில் இருந்து 7 ஆய்வுகள் தேர்வு



துவக்கவிழா:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளையின் ஒருங்கிணைப்பில் குழந்தை விஞ்ஞானி விருதிற்கான 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில் நவம்பர் 13,2011 அன்று பெரியகுளம் எட்வர்டு நினைவு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.மாநாட்டிற்கான துவக்கவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  பெரியகுளம் கிளையின் தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணி முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றுப்பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தே.சுந்தர் மாநாட்டின் மைய நோக்கம் பற்றி அறிமுக உரையாற்றினார்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் துவக்க உரையாற்றினார். திருமிகு.எம்.வி.கிருஷ்ணமூர்த்தி, திருமிகு. எல்.சசிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலக்கருத்தாளர் முனைவர். எஸ்.தினகரன் சர்வதேச காடுகள் ஆண்டு-2011 பற்றி சிறப்புரையாற்றினார். பெரியகுளம் கிளைப்பொருளாளர் பெ.ஆண்டவர் நன்றி கூறினார்.

 
சிறந்த ஆய்வுகள் தேர்வு:

ஆண்டிபட்டி, தேனி, போடி, பெரியகுளம், கம்பம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 30 பள்ளிகள் மற்றும் துளிர் இல்லங்களைச் சேர்ந்த சுமார் 280  குழந்தைகள் 57 குழுக்களாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். அதில் சிறந்த 7 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.தமிழ்- இளையோர் பிரிவில் கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி மற்றும் பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி  மாணவர்களும் தமிழ்-மூத்தோர் பிரிவில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லம், கம்பம் முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்  மற்றும் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரும் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆங்கிலம்-இளையோர் பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலம்-மூத்தோர் பிரிவில் தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். முனைவர்.மு.முகமது செரீப், திரு.அழகு, திரு.சேசுராஜ், திரு.எம்.மணிகண்டன், திரு.எஸ்.மனோகரன் திரு.ப.ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
 
நிறைவு விழா:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முனைவர். ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். எட்வர்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.ஜெயலட்சுமி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் திரு.முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.  தேனி மாவட்ட வன அலுவலர் திருமிகு. வி.கணேசன் குழந்தை விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி சிற்ப்புரையாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் முனைவர்.எஸ்.கண்ணன் பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் பதக்கம் அணிவித்து  நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப் பொருளாளர் செ.சிவாஜி நன்றி கூறினார். மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அறிவியல் இயக்கப் பொறுப்பாளர் அ.சதீஷ் மற்றும் வனக்காப்பாளர் வி.இராஜசேகரன் ஆகியோர் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். பேராசிரியர்கள், கருத்தாளர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள், குழந்தை விஞ்ஞானிகள் என 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச காடுகள் ஆண்டை முன்னிட்டு வன உயிரினங்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சி, சர்வதேச வேதியியல் ஆண்டை முன்னிட்டு வேதியியல்-நம் வாழ்க்கை,நம் எதிர்காலம் என்ற தலைப்பில் போஸ்டர் கண்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

குறிப்பு: மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகின்ற நவம்பர் 24,25,26 தேதிகளில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர்  அவர்கள் துவங்கிவைக்கின்றார். தேசிய அளவிலான மாநாடு இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டிசம்பர்,27-31 தேதிகளில் நடைபெறவுள்ளது.

Oct 27, 2011

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்-3,பெரியகுளம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரியகுளம் வட்டாரக்கிளையின் சார்பில் 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் அக்டோபர்,22 அன்று பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பெரியகுளம் கிளைச்செயலாளர் எஸ்.ராம்சங்கர் தலைமை வகித்தார். கிளைச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் வரவேற்றார். கிளைப்பொறுப்பாளர் எ.எஸ்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் திரு.மு.தியாகராஜன் மற்றும் கல்வி உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மையநோக்கம், ஆய்வு மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து கருத்துரை வழங்கினர். பாரதி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார். பெரியகுளம் பகுதியில் இருந்து பத்து பள்ளிகளைச் சேர்ந்த இருபது ஆசிரியர்கள் மற்றும் எழுபது மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.

Aug 23, 2011

பெரியகுளம் ஒன்றியக்கிளை மாநாடு

 2011,ஜுலை,2 அன்று பெரியகுளம் நெல்லையப்பர்
நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தின் பெரியகுளம் ஒன்றியக்கிளை மாநாட்டில்
 கிளைத்தலைவராக எ.எஸ்.பாலகிருஷ்ணன் செயலாளராக
எஸ்.ராம்சங்கர், பொருளாளராக பெ.ஆண்டவர்
துணைத்தலைவராக எஸ்.எ.செல்வராஜ் துணைச்
செயலாளர்களாக எஸ்.மனோகரன், எம்.ஆனந்தகுமார் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர்.மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன்
மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர் கலந்துகொண்டனர்