முதல் பக்கம்

Showing posts with label தேனி ஒன்றியக்கிளை. Show all posts
Showing posts with label தேனி ஒன்றியக்கிளை. Show all posts

Mar 11, 2020

தேனி ஒன்றிய குழந்தைகள் அறிவியல் திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேனி ஒன்றிய அளவிலான குழந்தைகள் அறிவியல் திருவிழா முத்துத்தேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மார்ச்,11 அன்று நடைபெற்றது..

விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி ஒன்றிய கிளைத் தலைவர் தாழைக்குமரன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாமதி வரவேற்றுப் பேசினார்.. மாவட்ட செயலாளர் மு தெய்வேந்திரன் நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையாற்றினார்.. மாநில செயலாளர் தே.சுந்தர் தொடக்கி வைத்து பேசினார்..

தேனி வட்டார கல்வி அலுவலர்கள் வீராசாமி மற்றும் இளங்கோவன், அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் மகேஷ், இணைச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.. தொடர்ந்து மாநில கருத்தாளர் வீரையாவின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடந்தது.. மாநில செயலாளர் தியாகராஜன், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் எளிய அறிவியல் பரிசோதனைகள், காகிதக் கலை மடிப்பு பயிற்சியளித்தனர்.

அதனையடுத்து நெல்லை தாமிரபரணி கலைக்குழுவின் சார்பில் திரைக் கலைஞர் மதியழகன், கரிசல் குயில் பாடகர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் கல்வி, அறிவியல் மற்றும் சூழலியல் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அறிவியல் விழிப்புணர்வு பாடல்கள் பாடப்பட்டன..

நிகழ்ச்சியில் தேனி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.. நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி ஒன்றிய கிளைச் செயலாளர் ராம்குமார் ஒருங்கிணைத்தார்.. கிளையின் பொருளாளர் சௌந்திர பாண்டியன் நன்றி கூறினார்..

Aug 26, 2019

அன்னஞ்சியில் அறிவியல் திருவிழா

அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, அன்னஞ்சியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. மேனாள் மாவட்ட்த் தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார்.. சிறப்பு விருந்தினராக கள்ளர் சீரமைப்பின் இணை இயக்குநர் வை.குமார் அவர்கள் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் அன்பழகன், தேனி கிளைத் தலைவர் தாழைக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. நெல்லை தாமிரபரணி மதியழகன் குழுவினரின் அறிவியல் விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன் நன்றி கூறினார்..

Mar 26, 2016

விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி ஒன்றியக்கிளை சார்பாக குழ ந்தைகளுடான விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி தேனி ஒன்றியம் லட்சுமிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் மார்ச் 26 அன்று மதியம் 3 மணி அளவில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சென்னை சி.எஸ்.ஐ.ஆர் மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஐயப்பன் அவர்கள் கல ந்து கொண்டு குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறப்புடன் உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் தே.சுந்தர் மாவட்ட செயலாளர் வி,வெங்கட் மாவட்ட இணைச்செயலர் எஸ்.தெய்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி கிளைச் செயலர் டிருமிகு.ஜெகநாதன் மற்றும் கிளை செயற்குழு உறுப்பினர் கரியன் ஆகியோர் செய்திருந்தனர் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Mar 6, 2016

குழந்தைகள் வாசிப்பு முகாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் தேனி ஒன்றியக்கிளை சார்பாக குழந்தைகளுக்கான வாசிப்பு முகாம் நிகழ்ச்சி தேனி ஒன்றியம் லட்சுமிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் மார்ச் 5 சனி அன்று நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலர் எஸ்.தெய்வேந்திரன் கிளை செயற்குழு உறுப்பினர் கரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கொ.ம.க இளங்கோ அவர்கள் எழுதிய சிறுவர் இலக்கிய வரிசை புத்தகங்கள் வாசிப்பிறகு எடுத்துக்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி கிளைச் செயலர் திருமிகு.ஜெகநாதன் செய்திருந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Jul 30, 2015

தேனி ஒன்றியக்கிளை 3வது மாநாடு:

தேனி ஒன்றியக்கிளையின் மூன்றாவது மாநாடு ஜூலை 27 2015 திங்கள்கிழமை அன்று மாலை மாலை 5 மணி அளவில் தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது. ஆர் .அம்மையப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைப்பெற்றது. புதிய தலைவராக எஸ்.முருகேசன் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச்செயலாளராக ஈ.ஜெகநாதன், பொருளாளராக அ.சதீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக எஸ்.ஜேசுராஜ் மற்றும் கிளைத் துணைத் தலைவர்களாக ஆர்.அம்மையப்பன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பத்து பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத்தலைவர் பா.செந்தில் குமரன் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாவட்டப்பொருளாளர் ஜெ.மெஹபூப் பீவி போடி கிளைத்தலைவர் ஆர்.காளிதாஸ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்

Sep 22, 2013

ஆசிரியர் தினவிழா- அன்னஞ்சி

அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் திருமிகு செந்தில்குமரன் தலைமை தாங்கினார். முத்தனம்பட்டி கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். திருமதி விஜயா வாழ்த்துரை வழங்கினார். தமிழாசிரியை திருமதி. சாந்தி வரவேற்றார். இப்பள்ளி தொடர்ந்து5ஆண்டுகள் 100% தேர்ச்சி அடைய காரணமாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கல்வி வளர்ச்சி கழகத்தின் மாவட்ட செயலர்.திருமிகு. இதயகீதன் சிறப்புரை வழங்கினார். அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு. சுந்தர் நிறைவுரையாற்றினார். ஆசிரியர் திருமிகு. மோகன்குமாரமங்கலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுமன் நன்றி கூறினார். சமகால கல்வி தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. ”போயிட்டு வாங்க சார்” நூல் அறிமுகம் செய்யப்பட்டது.இந்நூல் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

–க.முத்துக்கண்ணன்.tnsf

மந்திரமா தந்திரமா @தேனி

31-08-13 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தேனியில் உள்ள துளிர் இல்லத்தில் மாநில கருத்தாளர் திருமிகு வீரையா பங்கேற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு ஜேசுராஜ் தலைமை தாங்கினார்.தேனி கிளைச் செயலாளர் திருமிகு தெய்வே ந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.துளிர் இல்ல பொறுப்பாளரும் தேனி கிளை செயற்குழு உறுப்பினருமான திருமிகு ஆசிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.குழந்தைகள் மத்தியில் வீரையா அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சியை வழிநடத்தினார். 42 துளிர் இல்ல குழந்தைகள் கலந்து கொண்டனர்.இறுதியல் தேனி கிளை பொருளாளர் திருமிகு சதீஸ் நன்றி கூறினார்.ஒரே நாளில் இரு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைப்பெற்றது.

Aug 8, 2013

அன்னஞ்சியில் கருத்தரங்கம் & பேரணி:

தேனி ஒன்றியம் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ப.மோகன்குமாரமங்கலம் தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அன்னஞ்சி, ஊஞ்சாம்பட்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மாணவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். 170 பேர் கலந்துகொண்டனர். ஆசிரியர் திருமிகு.சுமன் ஒருங்கிணைத்தார்.

Apr 12, 2013

அறிவியல் இயக்கம் : தேனி வட்டாரக்கிளை மாநாடு



3ஆவது கிளை மாநாடு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி வட்டாரக்கிளையின் 3ஆவது மாநாடு ஏப்ரல் 11 அன்று மாலை தேனி மேத்ஸ் அகடமியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் மா.மகேஷ் தலைமை வகித்தார். கிளைச் செயற்குழு உறுப்பினர் முகமது ஆசிக் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் துவக்கிவைத்துப் பேசினார்.

கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் செயலறிக்கை சமர்ப்பித்தார். பின்னர் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் தேர்வு:

அதனைத் தொடர்ந்து கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளையின் தலைவராக மா.மகேஷ், துணைத்தலைவர்களாக சேசுராஜ், ஜெ.மகபூப் பீவி, செயலாளராக மு.தெய்வேந்திரன் இணைச்செயலாளர்களாக முகமது ஆசிக், கோபிநாத் ஆகியோரும் கிளைப்பொருளாளராக அ.சதீஷ் மற்றும் கிளைச்செயற்குழு உறுப்பினர்களாக பாலகிருஷ்ணகுமார், பிரேம் குமார், மலைச்சாமி, மோகன்குமாரமங்கலம், மோகன், பிருந்தா தேவி, திவ்யசுந்தரம், அருண், குமார் உள்ளிட்ட நண்பர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன், போடி கிளைத்தலைவர் காளிதாஸ் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப்பேசினர்.

 புவி கணித ஆண்டு கருத்துரை:

கிளை மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் ஜெ.மகபூப் பீவி புவி கணித ஆண்டு குறித்து கருத்துரையாற்றினார். கருத்துரையில் பூமி சூடேறுதல், காலநிலை மாற்றம், பூமி எதிர்நோக்கி இருக்கும் அபாயங்கள், நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் எனப் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசினார்.

Mar 7, 2013

அறிவியல் மாலை


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளையின் சார்பில் இன்று (மார்ச்,4,2013) மாலை தேனி துளிர் இல்லத்தில் அறிவியல் மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் வரவேற்றுப் பேசினார். கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் துவக்கவுரையாற்றினார். கிளைப் பொருளாளர் அ.சதீஷ் காந்தவிசையும் அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். 40 மாணவர்கள் பங்கேற்றனர்.

Mar 31, 2012

கிளைக்கூட்டம், தேனி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி ஒன்றியக்கிளைக்கூட்டம் இன்று-மார்ச்,31- மாலை தேனியில் புதுவிதமாக தேநீர் விருந்துடன் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு, மாவட்டச் செயற்குழு முடிவுகள், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வுகள், புதிய ஆர்வலர்களைக் கொண்டுவருதல் மற்றும் உலகப் புத்தக தினம் நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.. செயலாளர் மு.தெய்வேந்திரன், பொருளாளர் அ.சதீஷ் மற்றும் ஜெயமுருகன், சேசுராஜ், முகமது ஆசிக் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்..
-தகவல்: தெய்வேந்திரன்

Nov 28, 2011

கூடங்குளம் அணுமின்நிலையம்- விஞ்ஞான விளக்கக் கருத்தரங்கம்,தேனி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேனி வட்டாரக்கிளையின் சார்பில் கடந்த நவம்பர்,22ம் தேதி மாலை 6 மணிக்கு தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த விஞ்ஞான விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயற்குழு எஸ்..சேசுராஜ் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றுப்பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் இந்தியாவின் அணுசக்தி வரலாறு, சர்வதேச அளவில் அணு ஆராய்ச்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அணுமின்நிலையங்களின் செயல்பாடுகள், கூடங்குளம் அணுமின்நிலையத்தின் நிலைமை ஆகியவை குறித்து கருத்துரை வழங்கினார். தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் இயக்க ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் பேசினார். கிளைப்பொருளாளர் அ.சதீஸ் நன்றி கூறினார்.

Sep 16, 2011

புகைப்படக் கண்காட்சி & கருத்தரங்கம்

சர்வதேச வனவள ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளையின் சார்பில் வனம் அறக்கட்டளையோடு இணைந்து செப்டம்பர் 3,2011 அன்று பிற்பகல் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சேசுராஜ் முன்னிலை வகித்தார். தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட வன அலுவலர் திரு.கணேசன் கண்காட்சியைத் துவங்கிவைத்துப் பேசினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல்துறைப் பேராசிரியர் முனைவர்.எஸ்.கண்ணன், வனம் அறக்கட்டளையின் தலைவர் திரு.சி.பி.ராஜ்குமார்,வனம் கருத்தாளர் திரு.எஸ்.ராம்குமார் ஆகியோர் காடுகள் உலகின் கருப்பை,மரங்கள் தரும் வரங்கள் ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி கிளைப் பொருளாளர் அ.சதீஸ் நன்றி கூறினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன்,கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் உள்ளிட்ட அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களும் மாணவர்களும் திரளாகப் பங்கேற்றனர்.வன உயிரினங்கள் பற்றிய அரிய புகைப்படங்களின் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர்.

ஆசிரியர் தினச் சிறப்பு நிகழ்ச்சி

செப்டம்பர்,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளை மற்றும் த.மு.எ.க.ச. ஆசிரியர் கிளை ஆகியவை இணைந்து தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் செப்.5 மாலை எனக்கு இல்லையா கல்வி? ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.. த.மு.எ.க.ச.ஆசிரியர் கிளையின் தலைவர் ப.மோகன் குமார மங்கலம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றார். பின்னர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் ஆவணப்படம் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.முனைவர்.வனராசா இதயகீதன் விவாதக் கருத்துகளைத் தொகுத்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் செ.சிவாஜி, சேசுராஜ், வெங்கட்ராமன், அம்மையப்பன், ஓவியாதனசேகரன் ,ஸ்ரீதர்,ஜெகதீசன், வாஞ்சிநாதன்,சதீஸ் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என  40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் நன்றி கூறினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மிகச்சிறப்பானதொரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்ட மகிழ்ச்சியோடு அனைவரும் விடைபெற்றனர்.

Aug 28, 2011

ரைட் சகோதரர்கள்,ஐசக் நியூட்டன் துளிர் இல்லங்கள் துவக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி கிளையின் சார்பில் ஆகஸ்ட்,21,2011 அன்று இஸ்லாமிய மாணவர்களின் உண்டு உறைவிடப் பள்ளியில் ரைட் சகோதரர்கள், ஐசக் நியூட்டன் துளிர் இல்லங்களின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.  ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் வரவேற்றார். கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் தலைமையில் துவங்கியது. கிளைப்பொருளாளர் அ.சதீஸ் துளிர் இல்லச் செயல்பாடுகள் குறித்த அறிமுக உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றி விளக்கி பின்னர் மாணவர்களுக்கு எளிய குழு விளையாட்டுகள் மற்றும் ஓரிகாமி பயிற்சி அளித்தார்.மாவட்டக் கருத்தாளர் வி.வெங்கட்ராமன்  நிறைவாகப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சேசுராஜ் நன்றி கூறினார்.சுமார் 50மாணவர்கள் பங்கேற்றனர்.

Aug 27, 2011

ஹிரோஷிமா தினக் கருத்தரங்கம்,தேனி


மிழ்நாடு அறிவியல் இயக்கம்,தேனி ஒன்றியக் கிளையின் சார்பாக ஆகஸ்ட்,6, 2011 அன்று மாலை தேனி,அல்லிநகரம் நகராட்சி துவக்கப் பள்ளியில் உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கிளைத் தலைவர் மா.மகேஷ் தலைமை வகித்தார்.கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றுப்பேசினார். தேசியகுழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஆய்வு ஒருங்கிணைப்பாளர் பேரா.எஸ்.மோகனா படக் காட்சிகளுடன் கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளரும் சிறுகதை எழுத்தாளருமான திரு.மா.காமுத்துரை வாழ்த்துரை வழங்கினார். கிளைப் பொருளாளர் அ.சதீஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில்முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

Aug 23, 2011

தேனி ஒன்றியக்கிளை மாநாடு

2011,ஜுலை,1 அன்று தேனி அரசு ஊழியர் கட்டிடத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி ஒன்றியக்கிளை மாநாட்டில் கிளைத்தலைவராக மா.மகேஷ், கிளைச் செயளாளராக மு.தெய்வேந்திரன்,பொருளாளராக அ.சதீஷ் ஆகியோரும் துணைத் தலைவர்களாக எஸ்.சேசுராஜ், கார்ல்மார்க்ஸ், துணைச் செயலாளர்களாக செந்தில்மணி, முகமது ஆசிக் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் செ.சிவாஜி கலந்துகொண்டனர்.

Aug 8, 2011

பேரணி,மனிதச்சங்கிலி: தேனி கிளை

ஹிரோஷிமா நாகசாகி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி வட்டாரக் கிளையின் சார்பாக ஆகஸ்ட்,5,2011 காலை 11 மணிக்கு அன்னஞ்சி அரசுகள்ளர் உயர்நிலைப்பள்ளி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் மனிதச்சங்கிலி நடைபெற்றது. மக்களின் கவனத்தை ஈர்த்த இந்நிகழ்வில் 200க்கு மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேனி வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.ஜெயமணி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் பங்கேற்றனர். கிளைத்தலைவர் மா.மகேஷ் கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் ஒருங்கிணைத்தனர்.

Mar 6, 2008

தேனி கிளை அமைப்பு

மார்ச்,6,2008 அன்று தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு தேனி கிளை அமைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைத்தலைவராக பா.செந்தில்குமரன், செயலாலராக கே.பெரியசாமி, பொருளாளராக ப.செந்தில்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் மாநிலச்செயலாளர்கள் திருமிகு. மு.தியாகராஜன், திருமிகு.அ.அமலராஜன், கவிஞர்.இதயகீதன், பேரா.ஆர்.பாண்டி, மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவாஜி, மாவட்டக் கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் மு.பாலகிருஷ்ணகுமார், ப.மோகன்குமாரமங்கலம், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.