தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 6வது தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டிற்கான தென்மண்டல பயிற்சிமுகாம் செப்டம்பர்,18,2011 அன்று ஆண்டிபட்டி எஸ்.கே.எ.பள்ளியில் ஆண்டிபட்டி கிளையின் ஒருங்கிணைப்பில் ஒருநாள் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி கிளையின் தலைவர் எஸ்.மாதவன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றுப்பேசினார். ஆசிரியர் இணையத்திற்கான தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் ஆசிரியர் அறிவியல் மாநாட்டின் நோக்கம், ஆசிரியர் இணையம் அமைக்கவேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்த அறிமுகவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலக் கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் மாநாட்டின் மையக்கருத்து, கற்றல் கற்பித்தலின் நுணுக்கங்கள், வகுப்பறைகளில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான கருத்துரையாற்றினார்.கல்வியாளர்.திரு.மொ.பாண்டியராஜன் ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய சில முன்மாதிரி ஆய்வுகள் குறித்துப் பேசினார். நெல்லை மாவட்டச்செயலாளர் திரு.கணபதி அறிவியல் கல்வியும் ஆசிரியர்களும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் திரு.மு.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். ஆண்டிபட்டி கிளைச்செயலாளர் ஆர்.அம்மையப்பன் நன்றிகூறினார். இராமநாதபுரம்,திருநெல்வேலி,விருதுநகர்,மதுரை,தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த முப்பது நண்பர்கள் கலந்துகொண்டனர். மதுரையில் செப்டம்பர் 21ந் தேதியும், திருநெல்வேலியில் அக்டோபர் 9ந் தேதியும் ஆசிரியர் இணையக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
முதல் பக்கம்
Showing posts with label ஆண்டிபட்டி ஒன்றியக்கிளை. Show all posts
Showing posts with label ஆண்டிபட்டி ஒன்றியக்கிளை. Show all posts
Sep 19, 2011
Aug 23, 2011
ஆண்டிபட்டி ஒன்றியக்கிளை மாநாடு
2011,ஜுலை 18 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
ஆண்டிபட்டி ஒன்றியக்கிளை மாநாடு ஆண்டிபட்டி மேலப்பேட்டை
இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கிளைத்தலைவராக எஸ்.மாதவன் செயலாளராகஆர்.அம்மையப்பன்,
பொருளாளராக கு.ரத்தினம் துணைத்தலைவராக சாமுவேல்மோகன்
துணைச்செயலாளராக ஜான்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் கலந்துகொண்டார்.
Aug 8, 2011
ஹிரோஷிமா தின கருத்தரங்கு,ஆண்டிபட்டி கிளை
ஆகஸ்ட் 5,2011 அன்று காலை 11.30 மணிக்கு
ஆண்டிபட்டி வட்டாரக் கிளையின் சார்பாக
ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
ஆதிக்கப்போரால் அதிர்ந்த உலகம் என்ற
தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு
உறுப்பினர் திருமிகு.மு.தியாகராஜன்
கருத்துரை வழங்கினார்.
மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர்
வெங்கட்ராமன் எளிய அறிவியல்
பரிசோதனைகள்
செய்து காட்டி பின்னர் விழுது இதழை
அறிமுகப்படுத்திப் பேசினார்.
பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர்,
ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கிளைச்செயலாளர் ஆர்.அம்மையப்பன்
துணைச்செயலாளர் ஜான்சன் ஒருங்கிணைத்தனர்.
சுமார் 400 மாணவியர் கலந்து கொண்டனர்.
பிற்பகலில் மேலப்பேட்டை இந்துநாடார்
உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்
அதே கருத்தரங்கம் நடைபெற்றது.
300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.
ஆண்டிபட்டி வட்டாரக் கிளையின் சார்பாக
ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
ஆதிக்கப்போரால் அதிர்ந்த உலகம் என்ற
தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு
உறுப்பினர் திருமிகு.மு.தியாகராஜன்
கருத்துரை வழங்கினார்.
மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர்
வெங்கட்ராமன் எளிய அறிவியல்
பரிசோதனைகள்
செய்து காட்டி பின்னர் விழுது இதழை
அறிமுகப்படுத்திப் பேசினார்.
பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர்,
ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கிளைச்செயலாளர் ஆர்.அம்மையப்பன்
துணைச்செயலாளர் ஜான்சன் ஒருங்கிணைத்தனர்.
சுமார் 400 மாணவியர் கலந்து கொண்டனர்.
பிற்பகலில் மேலப்பேட்டை இந்துநாடார்
உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்
அதே கருத்தரங்கம் நடைபெற்றது.
300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)