முதல் பக்கம்

Showing posts with label கம்பம் ஒன்றியக்கிளை. Show all posts
Showing posts with label கம்பம் ஒன்றியக்கிளை. Show all posts

Nov 2, 2017

அறிவியல் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் கிளை சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஆர்.சுரேஷ்கண்ணன் வரவேற்றார். முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் த.சாரதா முன்னிலை வகித்தார். 



அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் பேரணியைத் துவக்கிவைத்தார். மாவட்டத் துணைத்தலைவர் ஜி.பாண்டியன் நன்றி கூறினார். பேரணி கம்பம் தேவபாலா திரையரங்கம் அருகில் துவங்கி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உழவர் சந்தை வழியாகச் சென்று துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. சுமார் 200 மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். கம்பம் நகராட்சி ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

Aug 9, 2017

கம்பத்தில் வினாடி வினா போட்டி

ஆக.9 அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் ஒன்றியக் கிளை சார்பில் வினாடிவினா போட்டி கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பெரோஷ், வளையாபதி, தலைமை ஆசிரியர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 பள்ளிகள் கலந்துகொண்டன. நிறைவாக மாநிலச் செயலாளர் தே.சுந்தர் ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், ஜி.பாண்டி, மருத்துவர் இன்பசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தனசேகரன், சோமநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Jun 9, 2016

கம்பம் கிளை செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளைச் செயற்குழு கூட்டம் ஜூன் 9 அன்று மாலை ஆறு மணி அளவில் கம்பம் கோட்டை மைதானத்தில் நடைப்பெற்றது. கம்பம் கிளைத்தலைவர் திருமிகு.ஜி.பாண்டி தலைமை தாங்கினார். பெருளாளர் மொ.தனசேகரன் வரவேற்றார். கிளையின் கட ந்த கால பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிளையின் இணைச்செயலாளர் திருமிகு சுரேஷ் கண்ணன் அவர்களது பள்ளீயில் நடைப்பெற்ற மேம்பாட்டு பணிகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி ஓவியப்பணியில் ஈடுபட்ட கிளைத்தலைவர் ஜி.பாண்டி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அடுத்த கட்ட பணிகளாக துளிர் இல்ல மாண்வர்களூக்கான அறிவியல் படங்கள் திரையிடல், துளிர் இல்ல மாணவர்களுக்கான அறிவியல் நாடக பயிற்சி மற்றும் கம்பம் கிளை அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி குறித்து விவாதிக்கப்பட்டது.. மாவட்ட செயலாளர் வெங்கட், மாநிலச் செயலாளர் தே.சுந்தர் மற்றும் சோமனாதன் சரவணன் உட்பட செயற்குழுஉறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 12, 2016

புத்தகக் கண்காட்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் ஒன்றியக்கிளை சார்பில் மார்ச் 12 சனி அன்று கம்பம் குலாலர் மண்டபத்தில்ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைப்பெற்ற சேமநலநிதி விழாவில் புத்தகககண்காட்சி நடைப்பெற்றது.கமபம் கிளைத்தலைவர் ஜி,பாண்டி கிளை இணைச்செயலர் சுரேஷ்கண்ணன் கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் மொ.ஜெகநாதன் மற்றும் ஆர்வலர் கோகுல் ஆகியோர் புத்தககண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

Aug 7, 2015

கம்பம் ஒன்றிய அளவில் துளிர் அறிவியல் வினாடி வினா-2015

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் இன்று ஆகஸ்ட் 7 வெள்ளி அன்று துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான துளிர் அறிவியல் வினாடி வினாப் போட்டி கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது. இரண்டு பிரிவுகளில் இருபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் சார்பாக அறுபது மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் பங்கேற்றனர்.அறிவியல்,தமிழ் மற்றும் பொதுஅறிவு ஆகிய சுற்றுகளின் கீழ் வினாக்கள் கேட்கப்பட்டன.மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற பள்ளிகள்: துவக்க நிலை(ஐந்தாம் வகுப்பு)

முதலிடம்: அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி சுருளிப்பட்டி
இரண்டாமிடம்:கஸ்தூரிபாய் நடுநிலைப்பள்ளி-கே.கே.பட்டி
மூன்றாமிடம்: அரசு ஆரம்பப்பள்ளி-லோயர்கேம்ப


நடுநிலை(6,7,8 வகுப்பு)
முதலிடம்: அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளி- கம்பம்
இரண்டாமிடம்:இலாஹி ஓரியண்டல் அரபி உயர்நிலைப்பள்ளி-கம்பம்
மூன்றாமிடம்: ஸ்ரீ எம்.பி.எம்.உயர்நிலைப்பள்ளி-கம்பம்


பரிசளிப்பு விழா

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கம்பம் கிளைத்தலைவர் ஜி.பாண்டி தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலர்விழி முன்னிலை வகித்தனர்.கம்பம் கிளை இணைச்செயலாளர் எஸ்.சுரேஷ் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச்செயலாளர் தே.சுந்தர் துவக்கவுரை ஆற்றினார்.மருத்துவர் ஆர்.இன்பசேகரன் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.காளிதாஸ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.கம்பம் கிளை துணைத்தலைவர் அ.பெரோஸ் மற்றும் பாளையம் கிளைத்தலைவர் எ.வளையாபதி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் வாழ்த்திப் பேசினார்.கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



மேலும் தொடர்புக்கு: வி.வெங்கட் மாவட்ட செயலர்.9488683929

May 30, 2015

கம்பம் ஒன்றியக்கிளை 4வது மாநாடு

கம்பம் ஒன்றியக்கிளை நான்காவது மாநாடு மே 29 வெள்ளிக்கிழமை அன்று மாலை மாலை 6 மணி அளவில் கம்பம் அக்குபஞ்சர் அகாடமியில் நடைப்பெற்றது. கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். பிறகு அறிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. புதிய தலைவராக ஆசிரியர் ஜி.பாண்டி தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச் செயலாளராக முத்துக்கண்ணன், பொருளாளராக மொ.தனசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இணைச்செயலாளர்களாக மொ.ஜெகநாதன் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக மருத்துவர் இன்பசேகரன் மற்றும் கம்பம் வேலி பெரோஸ் கான் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பதினைந்து பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச்செயலாளர் தே.சுந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூடலூர் நகரக்கிளைப்பெருளாளர் ஆர்.ராஜ்குமார் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை செய்து காட்டினார். பாளையம் கிளைத் தலைவர் வளையாபதி மற்றும் மாணவர் சரவணன் வைரவன் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Feb 21, 2015

கம்பம் கிளைச்செயற்குழு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளைச் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 20 மாலை ஆறு மணி அளவில் கம்பம் கோட்டை மைதானத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத்தலைவர் திருமிகு.மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.பெருளாளர் மொ.தனசேகரன் வரவேற்றார்.பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.மாவட்ட செயலாளர் வெங்கட் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார்,ஓவியர் பாண்டி உட்பட செயற்குழுஉறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 5, 2014

சுற்றுச்சூழல் தினம் 2014

கம்பம் கிளைக்கு உட்பட்ட சுருளிப்பட்டி அரசுகள்ளர் துவக்கப்பள்ளியில் சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. கமபம் கிளை செயலர் திருமிகு,முத்துக்கண்ணன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் தொடர்பாக குழந்தைகளுடன் கலந்துரையாடினார். சுந்தர் மற்றும் தனசேகரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Mar 22, 2014

மார்ச் 21 உலக வன நாள் நிகழ்ச்சி-2

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பாக கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் சர்வதேச காடுகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு.ஆ.ஜெகநாதன் தலைமை தாங்கினார். தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளர் திரு. ச.சுருளிராஜ் வரவேற்றார். மரக் கன்றுகள் நடுவது மற்றும் வன நாள் தொடர்பான கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் ”எல்லா மரங்களும் போதி மரங்களே” எனும் தலைப்பிலும், மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் “காடும் நீரும்” எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கூடலூர் நகரக்கிளை செயலாளர் தி. சூர்யப் பிரகாஸ் நன்றி கூறினார்.

மார்ச் 21 உலக வன நாள் நிகழ்ச்சி-1


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை சார்பாக கம்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வன நாள் கருத்தரங்கம் மற்றும் கவிதைப் போட்டி மார்ச் 21 அன்று காலை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. உபதி அந்தோனி அம்மாள் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றியக்கிளை செயலாளர் க. முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் அவர்கள் “ மரம் நமக்கு வரம்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். காடுகளின் முக்கியத்துவம் குறித்தும் உலக நாடுகளில் காடுகளின் பரவல் குறித்தும் படக்காட்சி திரையிடப்பட்டது. கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியை. திருமதி. கீதா அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.இறுதியில் பள்ளி ஆசிரியை மு.வேணி நன்றி கூறினார்.

Feb 28, 2014

தேசிய அறிவியல் தின விழா -2014

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் ஒன்றியக்கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியப்போட்டிகள் கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பேச்சு,ஓவிப்போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் மிக ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் துவக்க உரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கம்பம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமிகு.அங்கயர்க்கண்ணி பதக்கம் அணிவித்து பாராட்டினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை திருமிகு.எம்.சிந்தாமணி அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.அறிவியல் இயக்க ஆர்வலர். திருமிகு. செ.செல்லப்பாண்டியன் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் திருமிகு தே.சுந்தர் அவர்கள் தேசிய அறிவியல் தின கொண்டாட்டத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திருமிகு.வி,வெங்கட்ராமன் அவர்கள் சர்வதேச படிகவியல் ஆண்டு -2014 குறித்து கருத்துரை வழங்கினார்.கம்பம் கிளை பொருளாளர் திருமிகு மொ.தனசேகரன் அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவியர் பாண்டி, நந்தகுமார், தி. சூரிய பிரகாஷ், ரா.ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 180 க்கும் மேற்பட்ட மாணவர்களும், 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.அதே தினத்தன்று தேசியஅறிவியல்தினவிழா தேனி அன்னஞ்சி அரசு கள்ளர் உயர் நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் திருமிகு.பா.செந்தில் குமரன் அவர்களது ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.பல்வேறு அறிவியல் தலைப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் கல ந்துரையாடினர்.

Feb 24, 2014

கம்பம் கிளை செயற்குழு கூட்டம்

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை செயற்குழு கூட்டம் பிப்ரவரி 19 புதனன்று மாலை 7 மணி அளவில் கம்பம் மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கிளையில் நடைப்பெற்ற வேலைகளை கிளைச் செயலர் க.முத்துக்கண்ணன் எடுத்துக்கூறினார்.கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக புத்தக விற்பனை மேற்கொண்டு வரும் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு நந்தகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நமது அறிவியல் வெளியீடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவது உணரப்பட்டது.பாரதி புத்தகாலாயம் மற்றும் மாநில மையத்தில் இருந்து புத்தகங்களை மேலும் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.வருகின்ற பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கம்பம் கிளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு,ஓவிய போட்டிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.மாநிலச்செயலாளர் தே.சுந்தர், மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,கிளைப்பொருளர் திருமிகு மொ.தனசேகரன்,கிளை இணைச்செயலாளர் ஓவியர் பாண்டி,கூடலூர் நகரக்கிளை செயலர் திருமிகு சூரியபிரகாஷ்,கிளை செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அறிவியல் இயக்கத்தின் கூடலூர் கிளை துவக்க விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு கூடலூர் நகரக்கிளைத் துவக்க விழா கூடலூர் வி.கேன் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் திருமிகு தே.சுந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றியக்கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் வி.வெங்கட்ராமன் துவக்கவுரை வழங்கினார். மாநில செயலாளர் மு.தியாகராஜன் அவர்கள் ’’அறிவியல் இயக்கம் அன்று முதல் இன்று வரை’’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கூடலூர் கிளையின் தலைவராக கு.மோகன் அவர்களும், துணைத்தலைவராக நா.கண்ணன் அவர்களும், செயலாளராக தி.சூர்யபிரகாஸ் அவர்களும், துணைச் செயலாளராக நவீன் அவர்களும், பொருளாளராக ரா.ராஜ்குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கம்பம் ஒன்றியக்கிளை செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி வாழ்த்துரை வழங்கினார். கம்பம் ஒன்றியக் கிளை செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் நன்றி கூறினார்.

Jan 17, 2014

கம்பம் கிளை செயற்குழு கூட்டம்:

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை செயற்குழு கூட்டம் ஜனவரி-9 வியாழனன்று மாலை 7 மணி அளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கிளையில் நடைப்பெற்ற வேலைகளை கிளைச் செயலர் க.முத்துக்கண்ணன் எடுத்துக்கூறினார்.செயல்பாடுகள் குறித்து கிளை செயற்குழு உறுப்பினர்கள் விவாதித்தனர்.கிளை பொருளாளர் மொ.தனசேகரன் பொருளறிக்கை சமர்ப்பித்தார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,மாநிலச்செயலாளர் தே.சுந்தர் கிளை இணைச்செயலாளர் ஓவியர் பாண்டி,கிளை செயற்குழு உறுப்பினர்கள் நந்த குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ,ஸ்ரீராமன்,ஆசிரியர் சோமநாதன், உள்ளிட்டோர் கல ந்து கொண்டனர் உறுப்பினர் சேர்க்கை வலியுறுத்தப்பட்டது.

ஐசான் வால்நட்சத்திரம் குறித்து பிரச்சாரம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 29 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கூடலூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு ராஜ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் கருத்தாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது. கணினி ஆசிரியர் திருமிகு பிரபாகரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திரு ந்தார்.350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.100 ரூபாய் அளவிற்கு புத்தக விற்பனையும் நடைப்பெற்றது…

ஐசான் வீதிப்பிரச்சாரம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 28 அன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அள்வில் கம்பம் நகரில் ஐசான்வால் நட்சத்திரம் குறித்த துண்டு பிரச்சுரமானது வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு வி நியோகம் செய்யப்பட்டது.இந்த அறிவியல் பிரச்சார பணியில் மாநிலச் செயலாளர் தே.சுந்தர்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி,கம்பம் கிளை கே.நந்தகுமார், மற்றும் கணித மேதை இராமாணுஜம் துளிர் இல்ல மாணவர்கள் பங்கேற்றனர்.ஐசான் குறித்து பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Dec 23, 2013

புத்தகக் கண்காட்சி -2

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கம்பம் கிளை செயலாளர் திருமிகு.ஜெ.முருகன் அவர்களது இல்ல விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி 27-10-13(புதன்கிழமை) அன்று கூடலூர் நகரில் நடைபெற்றது.கம்பம் கிளை செயலாளர் திருமிகு க.முத்துக்கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன் , அறிவியல் இயக்க ஆர்வலர் நந்த குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் புத்தக விற்பனை செய்தனர்.ஆசிரியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், விழாக்களில் தொடர்ந்து இலக்கினை கணக்கில் கொள்ளாமல் புத்தக விற்பனை செய்வது ஆரோக்கியமான விசயம் ஆகும்…

Oct 4, 2013

அறிவியல் மாலை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் அக்டோபர் 3 அன்று மாலை 4 மணி அளவில் அறிவியல் மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.கம்பம் கிளை தலைவர் திருமிகு மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.ஜி.பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் ஆய்வு செயல்பாடுகளையும் வழிமுறைகளையும் மாநிலக் கருத்தாளர் திருமிகு மொ.பாண்டியராஜன் அவர்கள் விளக்கிப் பேசினார்.மேலும் ஓரிகாமி மற்றும் எளிய அறிவியல் பரிசோதனைகளையும் மாணவர்களிடம் செய்து காட்டினார்.மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறினார்.கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு. நந்தகுமார் நன்றி கூறினார்.50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் மாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Sep 25, 2013

அறிவியல் கொண்டாட்டம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கம்பம் முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் கணிதமேதை ராமானுஜன் துளிர் இல்லம் செப்டம்பர் 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துவக்கப்பட்டது.கம்பம் கிளைத் தலைவர் திருமிகு.மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கம்பம் கிளை இணைச் செயலாளர் ஓவியர் ஜி.பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.அறிவியல் கல்வியின் அவசியம் குறித்தும் அறிவியல் அணுகுமுறை குறித்தும் மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் குழந்தைகளிடம் பேசினார்.அறிவியல் புனைக்கதைகளை அறிமுகம் செய்து குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகளை மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் செய்து காட்டினார்.குழந்தைகளுக்கு காகிதமடிப்புக்கலை பயிற்சியை(ஓரிகாமி) கம்பம் கிளை செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் வழங்கினார்.இறுதியில் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு.பா.சிவசக்தி நன்றி கூறினார். 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.


Sep 22, 2013

மென்பொருள் விடுதலை நாள்(software freedom day)கருத்தரங்கம்-செப்டம்பர் 21

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கூடலூர் வீ-கேன் பயிற்சி மையத்தில் மென்பொருள் விடுதலை நாள்(software freedom day) கருத்தரங்கம் செப்டம்பர் 21 அன்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் தே.சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெ.முருகன் முன்னிலை வகித்தார்.கம்பம் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கருத்தாளர் ஓவியா தனசேகரன் கணினியில் மென்பொருள்களின் பயன்பாடு குறித்தும் கட்டற்ற மென்பொருள்களின்(Free software)அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார். விலை கொடுத்து வாங்க வேண்டிய இயங்குதளத்திற்கு மாற்றாக(operating system)இலவச இயங்குதளத்தின் பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினார்.இலவச மென்பொருள்கள்,இலவச இயங்குதளம் அடங்கிய குறுந்தகடை மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் வெளியிட்டார். கம்பம் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் துளிர் இல்ல மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் அனைவருக்குமானது,அறிவியல் மக்களுக்கானது, என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.