முதல் பக்கம்

Showing posts with label வந்த பாதை... Show all posts
Showing posts with label வந்த பாதை... Show all posts

Jul 11, 2009

7-வது மாவட்ட மாநாடு

ஜூலை,11,2009 அன்று தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஏழாவது மாவட்ட மாநாடு தேனி,பொம்மையகவுண்டன்பட்டி, அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேனி கிளைச்செயலாளர் கே.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மு.குமார் வரவேற்றார். 
மதுரை துளிர் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.மு.தியாகராஜன் துவக்கவுரையாற்றினார். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் வேலையறிக்கை மற்றும் பொருளறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசினார். அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. சின்னமனூர் அன்பழகன், ஆண்டிபட்டி வெங்கடேசன் மற்றும் ஓவியாதனசேகரன் ஆகியோர் விவாதத்தில் பங்கெடுத்தனர். 
மதுரை, கள்ளர் சீரமைப்புத்துறையின் கல்வி அலுவலர் திருமிகு. எம்.அசோகன், மாவட்ட கல்வி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கவிஞர். வனராசா இதயகீதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர் பேரா.சோ.மோகனா சூரிய கிரகணம்-அறிவியலும் மக்களும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாநிலக் கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு. அ.அமலராஜன் நிறைவுரையாற்றினார். கிளைப்பொருளாளர் பா.செந்தில்குமரன் நன்றி கூறினார். 
மோகன்குமார மங்கலம், ஜெயமுருகன், பா.ரமேஷ், ஆர்.ராஜீவ், கே.சுகாசினி, எல்.உமாதேவி, ஐயப்பன், போடி.சரவணன், ரட்சகன் மற்றும் சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கோகிலாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான துளிர் இல்லக் குழந்தைகள் கலந்துகொண்டனர். 
புதிய மாவட்டத் தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளராக தே.சுந்தர், மாவட்டப் பொருளாளராக எஸ்.வெங்கடேஸ்வரி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்டத் துணைத் தலைவர்களாக பேரா.மு.முகமது ஷெரீப், அழகுகணேசன் மாவட்டத் துணைச் செயலாளர்களாக முனைவர். ஜி.செல்வராஜ், பேரா.எஸ்.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, பேரா.எஸ்.கண்ணன், பேரா.ஆர்.பாண்டி, டாக்டர்.சுரேஷ், திரு.ஜவகர், திரு.சேவியர் ஆகியோரும் மாவட்டச்செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.சிவாஜி, ஹ.ஸ்ரீராமன், கே.பெரியசாமி, மலர்விழி, மு.பாலகிருஷ்ணகுமார், கே.சுகாசினி, பிரேம்குமார், மலைச்சாமி, எஸ்.சரவணன், வெங்கடேஷ், வாஞ்சிநாதன், உதயக்குமார், போடி.சரவணன், ரட்சகன், ரமேஷ், மகேஷ், தேவன், ஓவியாதனசேகரன், செந்தில்மணி, முரளிகிருஷ்ணன், ராஜமகேந்திரன், குணசேகரன், முத்து.மணிகண்டன், மு.குமார், அ.சதீஸ், ஆர்.குமார், பாலமுருகன், நாகராஜ், எஸ்.ராஜூ, எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர்.

Aug 4, 2007

6வது மாவட்ட மாநாடு-ஆகஸ்ட்,4,2007


தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆறாவது மாவட்ட மாநாடு, போடி தென்றல் நகர், சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேரா.கே.பத்ருதீன் தலைமை வகித்தார். போடி ஒன்றிய கிளைச்செயலாளர் மு.பாலகிருஷ்ணகுமார் வரவேற்றார். இயக்கத்தின் செயல்பாட்டறிக்கையை மாவட்டச் செயலாளர் ஹ.ஸ்ரீராமன் சமர்ப்பித்துப் பேசினார். மாவட்டப் பொருளாளர் வி.பழனிராஜ் வரவு செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார். 

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் முனைவர்.எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் பூமி வெப்பமடைதல் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.அ.அமலராஜன், பி.எஸ்.என்.எல். துணைக்கோட்ட அதிகாரி திருமிகு.என்.ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவாஜி நன்றி கூறினார். 

புதிய நிர்வாகிகள்: மாவட்டத் தலைவராக பேரா.கே.பத்ருதீன், மாவட்டச் செயலாளராக ஹ.ஸ்ரீராமன், மாவட்டப் பொருளாளராக எஸ்.சிவாஜி ஆகியோரும் மாவட்டத் துணைத் தலைவர்களாக பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, பேரா.எஸ்.ராஜா, கே.ராமகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர்களாக எஸ்.சரவணன், ராம்குமார், பேரா.மு.முகமது ஷெரீப், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக டி.ராஜேந்திரன்-ஆண்டிபட்டி, வி.பழனிராஜ்-போடி, வி.எஸ்.நாகராஜ்-பெரியகுளம், தே.சுந்தர்-கம்பம், மு.பாலகிருஷ்ணகுமார்-போடி ஆகியோரும் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக பேரா.அஜ்மீர் காஜா-போடி, மா.வைரமுத்து-கம்பம், இராஜமகேந்திரன்-ஆண்டிபட்டி, மலைச்சாமி-தேனி, பிரேம்குமார்-தேனி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். 

முன்னதாக ஜூலை,19,2007 அன்று சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் கம்பம் வட்டாரக்கிளை மாநாடு நடைபெற்றது. மாவட்டச் செயலாலர் ஹ.ஸ்ரீராமன் கலந்துகொண்டார். கிளைத்தலைவராக பிரபு அலெக்ஸாண்டர், செயலாளராக தே.சுந்தர், பொருளாளராக லோகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் ஜெயமுருகன், மோகன்குமாரமங்கலம், செந்தில்வேல், நாகரத்தினம், மா.ராஜேஷ், ஓவியாதனசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர். 

போடி வட்டாரக்கிளை மாநாட்டில் தலைவராக சரவணன், செயலாளராக மு.பாலகிருஷ்ணகுமார், பொருளாளராக ரட்சகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச்செயலாளர் ஹ.ஸ்ரீராமன், எஸ்.சிவாஜி உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.