பிப்ரவரி,18,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் போடி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. துளிர் இல்லம், டார்வின்-200 பயிற்சி, கல்வி உரிமை மசோதா, போடி கிளை அமைப்பு, தேசிய அறிவியல் தினம் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, பேரா.ஆர்.பாண்டி, ம.சரவணன், ஜி.ராஜாராம், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் பங்கேற்று வழிகாட்டினார்.
முதல் பக்கம்
Feb 18, 2009
Jan 25, 2009
மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
ஜனவரி,25,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா, போடி, தேனி, ஆண்டிபட்டி கிளைகள் அமைத்தல், டார்வின்-200 நிகழ்ச்சி, ஆசிரியர் இணையம், துளிர் இல்லம் ஆகிய தலைப்புகளில் பேசப்பட்டது. பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, ப.வாஞ்சிநாதன், பி.பிரேம்குமார், மு.பாலகிருஷ்ணகுமார், எம்.சரவணன், ப.மோகன்குமாரமங்கலம், ராஜ மகேந்திரன், தே.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் திருமிகு.அ.அமலராஜன் பங்கேற்றார்.
Nov 28, 2008
மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
நவம்பர்,28,2008 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை, வட்டாரக்கிளைகள், கல்லூரிக்கிளைகள் அமைத்தல், குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு, பெற்றோர்-ஆசிரியர் இணையம், துளிர் இல்லங்கள் அமைத்தல், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் மாநாடு-ஜார்கண்ட், புத்தக விற்பனை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, எஸ்,சிவாஜி, மு.பாலகிருஷ்ணகுமார், மலைச்சாமி, தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Posts (Atom)