ஜூன்,29,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி,பொம்மைய கவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் பேரா.எஸ்.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட மாநாடு, நிதி ஏற்பாடு, சூரிய கிரகணம் கருத்தரங்கம் ஆகிய பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலச்செயலாளர் திருமிகு. மு.தியாகராஜன் முன்னிலை வகித்தார். ப.மோகன் குமாரமங்கலம், கே.பெரியசாமி, அ.சதீஷ், மு.குமார் மற்றும் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல் பக்கம்
Jun 29, 2009
Apr 20, 2009
மாவட்ட செயற்குழு கூட்டம்
ஏப்ரல்,20,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் தேனி,பொம்மைய கவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட இணைச்செயலாளர் பேரா.மு.முகமது ஷெரீப் தலைமை வகித்தார். அமைப்பு மாநாடு-புதிய கிளைகள் மற்றும் உலக புத்தக தினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட மாநாட்டை ஜூன் மூன்றாவது வாரம் தேனியில் நடத்துவது எனவும் வாய்ப்புள்ள இடங்களில் புத்தக தின நிகழ்ச்சி நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. மாநிலச் செயலாளர் திருமிகு.அ.அமலராஜன் முன்னிலை வகித்தார். பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, பேரா.ஆர்.பாண்டி, ப.வாஞ்சிநாதன், பி.பிரேம்குமார், சி.உதயக்குமார், கே.பெரியசாமி, ப.செந்தில்மணி, கா.தேவன், மு.பாலகிருஷ்ணகுமார், பி.தனசேகரன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Feb 18, 2009
மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
பிப்ரவரி,18,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் போடி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. துளிர் இல்லம், டார்வின்-200 பயிற்சி, கல்வி உரிமை மசோதா, போடி கிளை அமைப்பு, தேசிய அறிவியல் தினம் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, பேரா.ஆர்.பாண்டி, ம.சரவணன், ஜி.ராஜாராம், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் பங்கேற்று வழிகாட்டினார்.
Subscribe to:
Posts (Atom)