முதல் பக்கம்

Oct 26, 2010

அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010

கம்பம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டிகள்ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர்ஸ்ரீராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அனுசுயா பேசினார். போட்டிகளில் 6,7,8 வகுப்பு பிரிவுகளில் முதல்இடத்தை கூடலூர் வ.உ.சி. பள்ளியும், இரண்டாம் இடத்தை ராயப் பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளியும், மூன்றாம் இடத்தை க.புதுப்பட்டி ஏ.எல்.வி பள்ளியும்பெற்றது. 9, 10 ம் வகுப்புகளுக்கான பிரிவில், முதல் இடத்தை கூடலூர்என்.எஸ்.கே.பி. பள்ளியும், இரண்டாம் இடத்தை திருவள்ளுவர் பள்ளியும், மூன்றாம்இடத்தை கம்பம் அரசு பெண்கள் பள்ளி, எஸ்.யூ.எம். பள்ளிகளும் பெற்றன. 11, 12 ம்வகுப்பு பிரிவில் கே.கே.பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் பள்ளி முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை என்.எஸ்.கே.பி., பள்ளியும், மூன்றாம் இடத்தை திருவள்ளுவர்பள்ளியும் பெற்றது.

மதுரை துளிர் அறிவியல் இயக்கத்தின் இயக்குனர் தியாகராஜன், மாநில கல்விக் குழுஉறுப்பினர் அமலராஜன் பரிசுகளை வழங்கினர். பேராசிரியர்கள் வாணி, சந்திரா,ஆசிரியர்கள் சுரேந்தர், முத்துக்கண்ணன் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர்வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர், கம்பம்

பறவைகளைப் பாதுகாப்போம்


Dear All,
Many Birds die in summer without water. Save them..
Please put water pots for thirsty Birds at Balcony / Window etc...
Please forward to friends.

Oct 25, 2010

இளைஞர் அறிவியல் மாநாடு_2010-11

ஆய்வுகளைச் சமர்ப்பிக்க அழைப்பு:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விஞ்ஞானிகள், பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள், பெண்கள் மற்றும் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஓர் தன்னார்வ அமைப்பாகும்..

அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழுக்கள்,பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.

தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. அகில இந்திய வானொலி முலம் மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் அறிவியல் நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வாரந்தோறும் நடத்தி வருகிறது.

மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்ச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வுப் பணிகளுக்காக UNICEF_ன் பாராட்டையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெற்றுள்ளது. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டைப்போல ஒவ்வொரு ஆண்டும் இளைஞர் அறிவியல் மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

இந்திய திருநாட்டின் இளைஞர்கள் நமது சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது புரிதலுக்கு நமது நாட்டின் கல்வி,அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் துணைநிற்கின்றன. பள்ளி,கல்லூரி போன்ற முறைசார் கல்வி நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் அனுபவங்கள் அவர்களுக்கு உதவி புரிகின்றன. ஆனாலும் கள ஆய்வுகள்,அனுபவங்கள், பரிசோதனைகள் மூலமாக மட்டுமே அவர்களது புரிதல் வலுப்படும். எனவேதான் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர் அறிவியல் மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.




கடந்த ஆண்டு முதலாவது இளைஞர் அறிவியல் மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. 2வது மாநாடு மதுரையில் வருகின்ற 2011,பிப்ரவரி மாதம் 28ந்தேதி தேசிய அறிவியல் தினத்தன்று நடைபெற உள்ளது. பொதுத்தலைப்பு: இயற்கை,அறிவியல் மற்றும் சமூகம்

தகுதி: 17–21 வயது வரையுள்ள கலை,அறிவியல்,பொறியியல்,தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். உயர்கல்வி தொடர முடியாத ஆர்வமுள்ள இளைஞர்களும் பங்கேற்கலாம்.

குழு: 2 முதல் 4 பேர் வரையிலான குழுவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இக்குழுவிற்கு கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள் வழிகாட்டியாகச் செயல்படலாம். ஒரு கல்லூரியிலிருந்து அதிகபட்சம் 3 ஆய்வுகள் பங்கேற்கலாம்.

17-21 வயது வரையிலான இளைஞர்கள் தங்களது படைப்பாற்றலை, புதுமையாகச் சிந்திக்கும் திறனை, அறிவியலை சமூகத்தோடு தொடர்புபடுத்தும் ஆற்றலை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் இம்மாநாடு அமையும். இளைஞர்கள் செய்யும் ஆய்வுகள் பின்வரும் துணைத்தலைப்புகளுக்குள் அடங்கவேண்டும்.

  1. • கல்வி முறைகள்
  2. • அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகள் 
  3. • மக்கள் வாழ்வும் மூடநம்பிக்கைகளும்- அதற்கான தீர்வுகள்
  4. • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  5. • நகரமயமாதல் மற்றும் தொழில்மயமாதல்
  6. • ஊரக மேம்பாடு
  7. • சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்
  8. • பெண்கள் மேம்பாடு
சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது, பிரச்சினைகளை அறிவியல் பார்வையுடன் உற்றுநோக்கச் செய்வது, முன்மாதிரிகளை உருவாக்குவது, களச்செயல்பாடு, ஆய்வு,சோதனைகளின் அடிப்படையில் நடைமுறை சாத்தியமான புதிய மாற்றுக்களை உருவாக்குவது ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் இம்மாநாடு அமையும்.

எனவே ஆய்வுகள் புதியதாக, எளிமையாக, நடைமுறைக்கு உகந்ததாக இருக்கவேண்டும். அன்றாட வாழ்வியல் நடைமுறை சார்ந்ததாக இருக்கவேண்டும். அறிவியல் அணுகுமுறையோடு தீர்வுகளைச் சொல்வதாகவும் தொடர்செயல்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும். ஒவ்வொரு துறையிலிருந்தும் 50 ஆய்வுகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படும். அதிலிருந்து துறைவாரியாக 10 ஆய்வுகள் விருதிற்காக தேர்வு செய்யப்படும். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். 

எனவே ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 10ம் தேதிக்குள் பதிவுப்படிவத்தையும்ஆய்வுச்சுருக்கத்தையும் அனுப்பி வைக்கவும். மேலும் பதிவுக்கட்டணமாக ரூ.100க்கு TAMILNADU SCIENCE FORUM என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்கதாக Demand Draft எடுத்து அனுப்பி வைக்கவும்.

மேலும் விபரங்களுக்கு: முனைவர்.ஜி.செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், இளைஞர் அறிவியல் மாநாடு(YSF-TNSF), HKRH கல்லூரி, உத்தமபாளையம். செல்:9865073411 மின்னஞ்சல்: rajseldr_1960@yahoo.com

“Let us Discover our Society”
Youth Science Festival-2010-11
Organised by: Tamil Nadu Science Forum (TNSF)





Registration Form

1. Title of the Project:
Area of Study: Natural Science/ Social Science/ Engineering/ Technology
(Tick the appropriate study area)
3. Name Class Age
----------------------------------------- -------------- --------
------------------------------------------ --------------- --------
----------------------------------------- ---------------- --------
----------------------------------------- --------------- -------
4. Contact Person of the Team:
Name, address, email, mobile/phone :



5. Name of the Institution/Organisation :

6. Name, address, email, mobile/phone of the Guide
--------------------------------------------------------------------
7. Fee details: DD------------------------------------
8. Signature of the Team Members:

9. Signature of the Guide:

(This form may be duplicated) www.tnsftheni.blogspot.com