தினமலர்:
பதிவு செய்த நாள் : மே 03,2011
கம்பம் :
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள 60 வகையான புத்தகங்கள் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5 வகுப்பு வரை வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு,
துளிர் அறிவியல் வினாடி வினா,
துளிர் அறிவியல் திறனறிதல் போட்டிகள்,
எளிய கருவிகள் செய்தற்கான போட்டிகள்,
அறிவியல் பரிசோதனைகள் என பல்வேறு
அறிவியல் ரீதியான நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது.
அத்தோடு சிறந்த புத்தகங்களை
அறிவியல் இயக்கம் வெளியிட்டு வருகிறது.
தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர்
சுந்தர் கூறியதாவது:
இந்த ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களில் 60 வகையான புத்தகங்களை, அனைவருக்கும் கல்வி இயக்கம்,தொடக்க கல்வி மாணவர்களுக்கு ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கேள்வி பதில்,
அறிவியல் தொடர்பான சந்தேகங்கள்,புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல வகையான தலைப்புகளில் பொது அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் இந்த புத்தகங்கள் உதவிகரமாக இருக்கும், என்றார்
முதல் பக்கம்
May 30, 2011
பள்ளிகளில் கல்வியாண்டு முழுவதும் மாணவர் சேர்க்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்
தினகரன்
கம்பம்,மே 15 ஒரு கல்வியாண்டில் மாணவர்கள் எப்பொழுது
வேண்டுமானாலும் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம்
என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கம்பம் நகரில் முக்திவிநாயகர் நடுநிலைப்பள்ளியில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கல்விசார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சுந்தர் வரவேற்றார்.
முக்திவிநாயகர் நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார்.
குள்ளப்பகவுண்டன் பட்டி ராமகிருஷ்ணா ஆசிரியர்
பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார்.
'குழந்தைகளும் தண்டனைகளும்' என்ற தலைப்பில்
கல்வியாளர் அமல்ராஜ், 'கல்வி உரிமைச்சட்டத்தின் மறுபக்கம்'
என்ற தலைப்பில் பாண்டியராஜன் கருத்துரை வழங்கினர்.
அதனை தொடர்ந்து தண்டனைகள்,பாராட்டுதல்களால்
தங்களது மாணவர்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள்
குறித்த அனுபவங்களை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகண்ணன்
நன்றி கூறினார்.
கூட்டத்தில் பொதுக்கல்வி முறையை
உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சட்டத்தில் கூறியுள்ளபடி
அண்மைப்பள்ளிகளை திறப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
6 முதல் 14வயது வரையுள்ள
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் 3முதல் 5வயது வரையுள்ள
குழந்தைகளுக்கும் தரமான,சமமான இலவசக்கல்வி கிடைப்பதற்கு
உறுதிசெய்ய வேண்டும்.
கிராமப்புற அரசுப்பள்ளிகளின் தரத்தையும்
பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தவேண்டும்.
ஆசிரியர் நியமனங்களை உடனடியாக
மேற்கொள்ள வேண்டும்.
வசதிகளை மேம்படுத்தாத தனியார் பள்ளிகளுக்கான
அங்கீகாரத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கல்வியாண்டில் மாணவர்கள் எப்பொழுது
வேண்டுமானாலும் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம் என்னும்
அதே வேளையில் அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதற்கான
வழிமுறைகளை வகுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

May 27, 2011
அறிவியல் இயக்கக் கருத்தரங்கம்
Last Updated :
கம்பம்,மே 14: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், பள்ளி குழந்தைகளும் தண்டனைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.கம்பம் ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்தில், அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பா.செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தே.சுந்தர் வரவேற்றார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்.குழந்தைகளும் தண்டனைகளும் என்ற தலைப்பில், கல்வியாளர் அ.அமல்ராஜும், மொ.பாண்டியராஜனும் கருத்துரையாற்றினர். இதில், தண்டனை குறித்தும், இதனால் மாணவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், வகுப்பறை அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.கருத்தரங்கில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)