முதல் பக்கம்

Mar 10, 2012

குருதியில் மலர்ந்த சர்வதேச பெண்கள் தினம்..!மார்ச் 8..

சரிபாதி..பெண்கள்..சமமானவர்களா..?


 மார்ச் 8 , சர்வதேச மகளிர்  தினம்..!  
உலகில் உருவாகும் உயிரினங்களில் நிச்சயமாய் சரிபாதி சதவீதம் பெண்கள்தான். ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஆணுக்குக் கிடைக்கும் அத்துணை உரிமையும் கிடைத்துவிடுகிறதா?  அந்த உரிமைகளைப் பெற, உயிரினங்கள் என்ற அடிப்படை உரிமைகள் பெற போராடிப் பெற்ற தினம்தான் பெண்கள் தினம்.  உலகின் பெரும்பாலான நாடுகளில் சர்வதேச பெண்கள் தினத்திற்கு விடுமுறை தினம்தான். உலகம் முழுவதிலும் உள்ள பெண்களின் சாதனைகளுக்கும், உழைக்கும் பெண்களின் போராட்டத்திற்கும்  மரியாதை தருவதற்காகவும், பாலின சமத்துவ முன்னேற்றத்திற்காகவும், நீதி, சமாதானம் போன்றவற்றில் கிட்டிய வெற்றிக்காகவும்,பெண்களின்றி எதுவும் நிறைவு பெறாது என்பதனை நினைவு கூறும்பொருட்டும்  உருவான தினம் இது. ஆனால் இப்போது கல்வி, உழைப்பு, பொருளாதாரம், பாலியல் என பன்முகத் தளங்களில் பெண் வர்க்கம் பாதிப்பும், சுரண்டலுக்கும் உள்ளாகிறது.  இப்போது கிடைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச விடுதலையைத் தக்க வைக்க வேண்டியது கால்த்தின் கட்டாயம்.

    சர்வதேச பெண்கள் தினம்..! 

 பெண்களின் பொருளாதார, அரசியல், சமூக சாதனைகளை முன்னிறுத்தி பல நாடுகளில் இதனை கொண்டாடுகின்றனர். கிழக்கு ஐரோப்பா,ரஷ்யா போன்ற நாடுகளில் அவர்களின் கலாச்சாரத்துடன் இணைத்து, பெண்களுக்கு மரியாதை செய்யும் முகமாக விடுமுறை நாளாக அனுசரிக்கின்றனர்.  பல நாடுகளில் கலாச்சாரத் தளங்களை ஒன்றிணைத்து, பெரிய அரசு, அரசியல் நிகழ்வாக நடத்தப்படுகிறது  சர்வதேச மகளிர் தினம், இன்று இந்தியாவில் பெரும்பாலும் அதன் உண்மை நிலை இழந்துவிட்டது. ஏதோ ஒப்புக்காக, டான்ஸ், பாட்டு, கோலப்போட்டி, அழகுப் போட்டி,  என்று பெண்களை கேலிக்கூத்தாக்கி, கேளிக்கை கொண்டாட்டமாக வணிக நோக்குடன் கொண்டாடப் படுகிறது. போராட்ட களத்தில், உயிர்ப் பலி கொடுத்து, போராட்ட உணர்வுடன் பிறந்தது, சமூக விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு சமர்ப்பணத்துடன் இந்த ஆண்டு சரிவ தேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவோம். சர்வதேச மகளிர் தினம். இதனையும் கூட, ஏதோ காதலர் தினம் போல சொல்பவர்களைப் புறந்தள்ளுவோம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஒரு வேதனை என்னவென்றால், இந்தியா போன்ற நாடுகளில், அரசின் ஆணைக்குப் பயந்து,  இப்போது அனைத்து அரசு அலுவலகங்கள் , கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்களால் அத்து மீறிய விளம்பரத்துடன் மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது .

பெண்மையும்.. ஆண்மையும்.! 

மரபணுவும், உடலியல் வேறுபாடும், பெண் ஆண் உருவத்தை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் பெண்மை, ஆண்மை என்ற சமூகக் கருத்தாக்கம்  சமூகத்தினரால் வழி வழியாக உருவாக்கப்பட்டதொன்றாகும். இதன் பின்னணியைப் பார்த்தால் அது  தாய்வழிச் சமூகத்தைப் புறந்தள்ளி, நிலவுடைமை சமுதாயமும்,அதன் ஆதிக்க சக்திகளும் ஏற்படுத்திய தாக்கத்தால், ஆணுக்கு முக்கியம் தரும் ஆணாதிக்க உணர்வும், பெண்ணினத்தின் மீதான அடக்கு முறையும், உருவானது. ஆணாதிக்க உணர்வு எனப்து ஆண்களிடம் மட்டுமல்ல, இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் உள்ளங்களிலும் ஆழ்ந்து பதிந்து கிடக்கிறது. அதன் வெளிப்பாடு பல இடங்களிலும் பிரதி பலிக்கிறது. இங்கு பெண்கள் அழகுப் பெட்டகங்களாக, பாரம்பரியத்தைப் பாதுக்காக்க பிறப்பெடுத்தவர்களாக,  தொலைக்காட்சித் தொடர்களின் அடிமைகளாக, உடலும், உழைப்பும் சுரண்டப்படுவதை அறியாதவர்களாக உருவாக்கப்படும் அவலத்தை நாம் துடைத்தெறிய சர்வ தேச மகளிர் தினததை சரியான பார்வையில் அனுசரிப்போம்.
   உரிமையின்...பின்னணி..! 
 1912 ல் நியூயாக்கில் நடந்த போராட்டம்.

உலகைக் குலுக்கிய மார்ச் 8 ம் நாள் போராட்டம் முடிந்து 102 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பின்மு, பெண்கள் மீது குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களும், பாலியல் பிரச்சினைகளும், நாகரிகம் முன்னேறிய  நாட்டில் நவீன முறையில் நடக்கிறது. இந்தப்பின்னணியில் . சர்வதேச மகளிர் தினத்தின்  பின்னணியை ஆராய்ந்தால், அது மிகவும் ஆச்சரியம் தருவதாகவும், சுவையாகவும், வியப்பளிப்பதாகவும், அதிர்ச்சி  தருவதாகவும்,வேதனை மிகுந்ததாகவும், போராட்ட உணர்வைத் தூண்டுவதாகவும்  உள்ளது. மெல்லியலாள் என வர்ணிக்கப்படும் ஒடுக்கப்பட்ட பெண்ணினமே, ஒடுக்கும் ஆண் துணையின்றி, தனியே நின்று போராடிப் பெற்ற உரிமைகள் ஏராளம்; ஏராளம். . இதில் எண்ணிலடங்கா உயிர் தியாகங்களும் உண்டு..! உயிரை காவு கொடுக்காமல் போராட்டமா? இரத்தம் சிந்தாமல் வெற்றியின் தடமா? இல்லவே இல்லை! எந்த சரித்திரமும் நமக்கு அதனைக் காட்டவில்லை. எனவே  இதில் பெண்களின் போராட்டமும் விதி விலக்கில்லை. இன்று உலகம் முழுவதும், போராட்ட குணம் மிக்க பெண்களின் அமைப்புக்கள் மகளிர் தினத்தை அதே உணர்வுடன்தான் கொண்டாடுகின்றன.

பூவும்...போராடும்..!  

ஆயத்த ஆடைப்பணியில் 1903   புரட்சி என்றதும், நம் நினைவுக்கு வருவது ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி, பிரெஞ்சு புரட்சி, ஐரோப்பிய புரட்சி, கியூபப் புரட்சி போன்றவையே..! அடுப்பங்கரையில் கரண்டி பிடித்த கரங்கள், போர்க்கொடி ஏந்தி, கோரிக்கை முழங்கி, தெருவில் இறங்கி போராடி,தொழிற்சாலையை முற்றுகையிட்டு, வெற்றி வாகை சூடியது  பலருக்குத் தெரியாது. அமெரிக்காவில், அமெரிக்க பெண்களிடம் புரட்சி விதை போட்டது நியூயார்க்கின் ஜவுளி மாவட்டத்தில் உள்ள  பஞ்சாலை தொழிற்சாலையின், சாதாரண பெண்களே..!பெண்கள் புரட்சியின் பூர்வீகம்/தாய்வீடு அமெரிக்காதான். அமெரிக்காவில் தோன்றி,உலகம் முழுவதும் பரவிய இயக்கம்தான் பெண்களின் தொழிற்சாலைப் புரட்சி. உலக வரலாற்றில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாதது. அவர்களின் இரண்டாம் இடத்தைத் தவிர்த்து, தோள் கொடுத்து மேலேற்றி, வெற்றியில், பல உயிர்களின் இரத்தக் கறைபடிந்த வெற்றிக்காவிய வீரவரலாறுதான்  சர்வதேச மகளிர்தினம். அமெரிக்காவில் நடந்த இருபெரும் பஞ்சாலைப் போராட்டங்களுக்கு மரியாதை தருவதற்காகவும், உலக உழைக்கும்  பெண்களின் பணியை மதிப்பதற்காகவும் உருவானதுதான் சர்வதேச மகளிர் தினம். 1857 ல் அதிகமான பணிப் பளுவுக்காவும்  ,கூலி உயர்வுக்காகவும்,நியாயமான வாழ்க்கைத் தரத்திற்காகவும், நடைபெற்ற போராட்டம்தான் இந்த தினத்தை பெற்றுத்தந்தது. 1908 ல் பெண்களில் ஓட்டுரிமை வேண்டியும்   பரிணாமம்  பெற்றது. 
  நசுக்கும்.. கரங்கள்..கீழ் ..பூவினம்.!
போராட்ட களத்தில் தையல் தொழிலின் தையல்கள்
அமெரிக்க போராளிகளின் போராட்டம் 1800 களில் பரபரப்பாக பேசப்பட்டது. நியூயார்க்கில் உள்ள ஜவுளி மாவட்டத்தில், ரஷ்யா, இத்தாலி, போலந்து போன்ற ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பணி புரிந்தனர்.அவர்கள் ஒரு நாளில் 15 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தனர். அது மட்டுமல்ல. அவர்கள் பயன்படுத்தும் ஊசி, நூல், மின்சாரம், நாற்காலி மற்றும் கைப்பெட்டி போன்றவைக்கும் அவர்கள் கூலியிலிருந்தே பணம் எடுத்துக்கொள்ளப்படும். தாம்தாக வந்தாலோ, கழிப்பறையில் அதிக நேரம் ஆனாலோ அபராதம் விதிக்கப்படும். பெண்கள் ஆசைப்பட் எதுமே இல்லை. என்ற உணர்வுடன் அவர்கள் இருந்தார்கள்..உலகில் எங்கு எந்த போராட்டம் நடந்தாலும் அது ஆண்களை மையப்படுத்தியே இருந்தது. பெண்களின் பங்கேற்பும், பணிச்சுமையும், கருத்தும் ஆண்களுக்கு ஒப்பாக எண்ணப் படாத காலம் அது..! (இப்போதும் கூட அப்படித்தானே  பெரும்பான்மையான  இடங்களில் உள்ளது)
    சக போராளிகளின் பாராமுகம்:! 
பணி புரியும் ஆண் வர்க்கமும், பெண்களின் பணிப் பளுவை, கஷ்டத்தை, வேதனையை பாராமுகத்துடன் கீழே தள்ளியது. தொழிற்சாலை முதலாளிகளாலும், சக ஆண் தொழிலாளர்களாலும் வேதனைப் படுகுழியில் தள்ளப்பட்டனர் பெண் தொழிலாளிகள்.இவர்கள் மனம் தாங்களே மனம் நொந்து, தங்களுக்கு ஒரு தீர்வினைத் தேடுவதற்காக , தங்களின் உரிமையை கேட்பதற்காக ஓர் அமைப்பை உருவாக்கினர். இந்த நிலை,1820 களில் புதிய இங்கிலாந்தில் "தையல் தொழிலாளிகளிடையே"   நிகழ்ந்ததுதான் அதிசயமும், வியப்பளிக்கும் விஷயமுமாகும்.நல்ல வாழ்நிலை, நியாயமான கூலி, குறைவான பணி நேரம் மூன்றையும் கோரிக்கைகளாக முன் வைத்தனர். அத்துடன், தங்களின் அமைதியான வாழ்வுக்காக துளியூண்டு போழுபோக்கும் கேட்டு தெருவில் இறங்கிப் போராடினார்கள் நம் சகோதரிகள்,. அவர்களின் உணர்வு, வேதனை, நியாயம் அப்போது நியாயமாக கவனிக்கப் படவில்லை. காவலர்களால் பலமாக கவனிக்கப் பட்டது ; அடித்து, உதைத்து, உடைத்து நொறுக்கப்பட்டது..
பூங்கொடியா..போர்க்கொடியா ..?  
உழைக்கும் பெண்களின் போராட்டம் பிறந்த  இடம், அமெரிக்க மான்சூசெட் நகரின் லோவெல் மில்லில் பணி புரியும்  பஞ்சாலைத் தொழில்  பெண்களிடம்தான்.இதன் காரணம் என்ன தெரியுமா? இளம் பெண்கள், வெறும் 3 டாலர் பணத்திற்காக வாரம் முழுதும்  81 மணி நேரம் உழைத்தனர். உழைப்பின் கால்பங்கு பணம் உறைவிடத்திற்கே பறிபோனது.  ஆண்களின் பணி துவக்க நேரம் காலை மணி 7 . ஆனால் பெண்கள் விடிகாலை 5 மணிக்கே வேலைக்கு வந்து விடவேண்டும். ஏன் தெரியுமா? பெண்கள் பலவீனமானவர்களாம்  . ஆற்றல்/சக்தி குறைந்தவர்களாம். எனவே சாப்பிட்ட பின், அவர்களால் சரியாக வேலை பார்க்கமுடியாது என எண்ணிய முதலாளிகள், உணவு உட்கொள்ளுமுன்பே பணிக்கு 
வரவழைத்தனர். இது எப்படி இருக்கு? மேலும் பெண்களின் பணி நேரம் ஆண்களைவிட அதிகம் என்பது மட்டுமல்ல, கூலியும்  குறைவு..!  
உலகப்..பெண்கள்..சங்கமமான..சங்கம்..!
பெண்களின் கூலி பல நிலைகளில் வெட்டப்பட்டது லோவெல் மில்லில்தான். மனம் கொதித்த பெண்கள் 1834 ல் கூலி உயர்வு கோரி வெளிநடப்பு செய்தனர். ஆனால் ஆள் பலமும், பண பலமும் கொண்ட அதிகார  வர்க்கம் இறங்கி வரவில்லை; அடிபணிய வைத்தது.நீண்ட நாள் போராட்டத்திற்குப் பின் வேறு வழியின்றி பணிக்கு திரும்பினர்.போராடிய பெண்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் 1836 ல் வெளிநடப்பு. நகரின் தெருக்களில் பாடிக்கொண்டே அணிவகுப்பு செய்தனர். என்ன பாட்டு அது? "சுறுசுறுப்பான சுட்டிப்பென்கள் , தொழிற்சாலை இரும்புக் இயந்திரங்களால் நசுக்கப்பட்டு, ஒடுங்கி, சிதைந்து, செத்துப் போவது பாவமில்லையா? இது நியாயமா..?" என்ற பாட்டுதான்.  1844 ல், லோவெல் உழைக்கும் பெண்கள் மறுசீரமைப்புக் கழகம் தோன்றியது. மீண்டும் அமைப்புரீதியான போராட்டம் நடத்தினர் அதன் முதன்மைக் கோரிக்கையே, ஒரு நாளுக்கு 10 மணி நேர பணி என்பதே..!.
மகளிர்..தின..கரு..!    

 உலகம் முழுவதும்,உள்நாட்டுப் போர்களைத் தொடர்ந்து பெண்களின் விதவைத் தன்மை அதிகரித்தது. ஆயிரக்கணக்கான பெண்களை உழைப்பு நாடி தொழிற்சாலைகளுக்குத் துரத்தியது. ஆண்களோ,தங்களுக்குப் போட்டியாக பெண்கள் பணிக்கு வருவதாக கருதினர். எனவே பெண்களை தேசிய தொழிற் சங்கத்திலிருந்து விலக்கி வைத்தனர். பெண்கள் தங்களுக்குள் தனியாக அல்லாடி, போராடிக்கொண்டிருந்த தோல் தொழில், குடைத் தொழில்,தையல் ஆடைத்தொழில்,இயந்திரத் தொழில்,குடை தயாரிக்கும் தொழில், துணி துவைப்பவர்கள் என அனைத்து தொழில்களிலும்  ஈடுபட்டிருந்த  அனைத்து உழைக்கும் பெண்களும்  ஒன்றாகத் திரண்டனர். புகழ்பெற்ற தொழிற்சங்க அமைப்பாக அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக "சர்வதேச ஆடைப் பணியாளர்கள் சங்கம்" உருவானது. 1857 ல்,மார்ச்  8 ம் நாள், ஆயத்த ஆடை நெய்யும் பெண்கள் பணி மேம்பாடு ,10 மணி நேர வேலை, சம உரிமை என மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பேரணி, முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மிகக் கொடூரமான வேலை முறைக்கும், குறைந்த சம்பள்த்திற்கும் எதிர்ப்பு தெரிவிததனர். முதலாளிகளால் ஏவப்பட்ட காவலர்கள், பெண்களையும், குழந்தைகளையும் நசுக்கினர்.போராட்டம் ஒடுக்கப்பட்டது. மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து பெண்கள் தங்கள் சங்கத்தைப் புதுப்பித்தன்ர். பின்னரும் அதே மார்ச் 8 ம் நாள் போராட்டங்கள் நடைபெற்றன.
  எலும்பை குலுக்கும் குளிரிலும், வெடித்த போராட்டம்.! 
<photo21></photo21>
அமெரிக்க சரித்திரத்தில் பெண்கள், அதுவும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து சர்வதேச பெண்கள் ஆடைப் பணியாளர் சங்கம் நிறுவினர். பெண்களின் நிலையோ,ஆலைகளில் பரிதாபம்..! எந்நேரமும் தீ பிடிக்கும் அபாயம், ஒளியைத் தேடும் அறைகள், செவியை செவிடாக்கும் இயந்திர ஒலி, மோசமான சூழல், இவற்றில் பின்னிப் பிணைத்து உழைத்தனர். அதிகார வர்க்கம் தொட்டதிற்கெல்லாம் அபராதம் விதித்தது. குலேபகாவலி  படத்தில் வரும் குனிஞ்சா வரி,நிமிர்ந்த  வரி, இட்லி வரி, சட்னி வரி போலத்தான் இங்கும், பேசினால், சிரித்தால்,பாடினால்,துணி கறையானால் என அனைத்திற்கும் அபராதம்தான். நொந்து நூலானார்கள் சகோதரிகள். இதன் விளைவாக, 1903 ல்,சர்வதேச பெண்கள் தொழிற்சங்க இயக்கமும் பற்றிக் கொண்டது.சட்டை தைக்கும் தொழிலாளர்கள் 20 ,000 பேர் திரண்டனர். உலகின் மிகப் பெரிய, மிகவும் நீண்ட காலம் தொடர்ந்த பெண்களின் போராட்டம் இது. எலும்பைக் குலுக்கும் குளிரிலும் 13 வாரங்கள், போராட்டம் தகித்தது.இவர்களில் பெரும்பாலோர் 13 -25 வயதுக்குட்பட்ட பெண்கள்.
    நீதியின்...மறு பக்கம்..பேரம் ..!
முற்றுகைப் போராட்டத்தின் போது, காவலர்கள் பெண்களை  அள்ளிச் சென்றனர்.அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது,நீதியரசர் அவர்களைப் பார்த்து,"ஆண்டவன் உங்களை நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபடவும், உழைக்கவும், அதன் பின் வயிற்றை நிரப்பவுமே, உங்களைப் படைத்துள்ளான். நீங்கள் இயற்கைக்கும் ,கடவுளுக்கும்  எதிராக செயல்படுகிறீர்கள்..!" என்றார்.போராட்டம் நொறுக்கப்பட்டது. அடுத்த ஆண்டும் போராட்ட களத்தில் பெண்கள்..!காரணம் ஆபத்துக் காலத்தில் வெளியேர்றும் கதவு பூட்டப்பட்டதால், கிடங்கு தீப்பற்றி சுமார் 146 தொழிலாளிகளின் உயிரை தீக்கங்கு குடித்தது; சாம்பலாயினர். இவர்களில் பெரும்பாலோர் 13-25 வயது பெண்பிள்ளைகள.அவர்கள் அனைவரும்  உடல் கரிக்கட்டையாய் மாறியதுதான்..! ஆனால் இந்த உயிர்களின் விலையும் 75 டாலர் என அதிகார வர்க்கம் பேரம் பேசி முடித்தது. 
 கிளாரா ஜெட்கினும்...மகளிர்..தினமும். !  
அமெரிக்க உழைக்கும்பெண்கள் கதையில் அடிக்கடி, மதர் ஜோன்ஸ், எல்லார்வ் ஃப்ளூர் முள்ளாணி, சொஜர்னர் ட்ரூத் எல்சபெத், ஹர்ப்ளின் பொன்ற இயக்கம் சார்ந்த வீரப் பெண்மணிகள் மூலமாகத்தான் அடையாளம் காண்முடிகிறது.1880 ல் பஞ்சாலைப் பெண்கள் மீண்டும் அணி வகுத்தனர், வீதியில் இறங்கினர், முதல் சர்வதேச பெண்கள் தினம் பிப்ரவரி 28, 1908 ல் அமெரிக்கா முழுவதும் அதிகார பூர்வ அரசு விடுமுறை தினமாக் அறிவிக்க்ப்பட்டது. அதுவும் கூட உயிர் நீத்த பெண்களின் நினைவாக உருவானது. பின் 1910-ல் கோபன் ஹேகனில், ஜெர்மனின் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரும். சர்வ தேச அளவில் பெருமையுடன் பேசப்பட்டவருமான,சோசலிசவாதியான 'கிளாரா ஜெட்கின்'தான் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து போராட வேண்டி, ஒரு வரைவுத்திட்டததை மார்ச் 8 ம் நாளில்முன் மொழிந்தார். அதனை அந்த மாநாடு ஏற்றுக்கொண்டது. பெண்ணுரிமை இயக்கத்தை மதிப்பதற்கும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் வாக்களிப்பதற்கும் உரிமை கோரிய அந்த நாள் பெண்களின் பொன்னான நாள். அந்த மார்ச் 8 ம் நாளை கோபன்ஹேகன் மாநாடு சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று உலகம் சர்வ தேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.ஆனாலும் கூட 1913 வரையிலும் சர்வ தேச பெண்கள் தினத்தை வேறு வேறு தினங்களில் நடத்தினர்.
   வரலாறு எழுதிய வர்க்கப் போராட்டம்..!
1911-1915 வரை சோசலிஸ்டுகளின் உதவியுடன். பல ஐரோப்பிய நகரஙகளில் சர்வ தேச பெண்க்ள் தினத்தன்று பெண்களின் ஊர்வலங்களையும், அணிவகுப்புகளையும் நடத்தி வந்தனர். தொழிலாளர் தினமான், மே 1 ம் தேதிக்கு இணையாக பெண்கள் தினம் விளங்கியது.1911 ல் 1,000,000 மக்களை இணைத்த மாநாடும், பேரணியும் நடந்தது.தலைமை தாங்கியவர் கிளாரா ஜெட்கின் தான்.ஐரோப்பிய அரசுகளுக்கு கிளாரா ஜெட்கின் சவாலாகவும், சிம்ம சொப்பனமாகவும்தெரிந்தவர். .இவரை ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் மிகப் பெரிய மாந்திரிகர்/மந்திரவாதி  என அதிகார வர்க்கம் வருணனை செய்தது. ஒரு பெண்ணைக் கண்டு, ஐரோப்பிய அரசு மிரண்டது என்றால் , எத்துணை பெண்கள் சக்தி அவர் கையில் இருந்திருக்கும்? சுமார்100 ஆண்டுகளுக்கு முன், உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த பெண்களும், சாதி, மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் என்ற அனைத்து வேறுபாடுகளையும் உடைத்து, வெற்றிகண்டு, வரலாறு  எழுதிய வர்க்கப் போராட்டம்தான் மார்ச் 8 ..!
   ரொட்டியும்..ரோஜாவும்..!  
புரட்சிகர 1917 ன் மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினம்
1908 ,ல் பெண்கள் ரொட்டியும், ரோஜாவும் வேண்டி கோரிக்கை வைத்து போராடினர். ரொட்டி உயிர் வாழ்தலுக்காகவும், ரோஜா அமைதிக்காகவும் வைத்தனர். இந்த போராட்டங்களில் நாம் அறிந்தவர், தெரிந்தவர் மிகச் சிலரே..! தெரியாதவர், மறைக்கப்பட்டவர், மறைந்துபோனவர், மறந்து போனவர், பெயர் தெரியாதவர்.. என ஏராளமான பெண்கள் உண்டு.  1917 ல் நடந்த பெண்கள் தினமதான் ரஷ்யப்புரட்சிக்கு முடிவு கட்டியது. பெண்கள பசி,குளிர், யுத்தததின் அடையாளங்கள் விவசாயப் பெண் தொழிலாளர்கள் பொறுமையை வெடிக்கச் செய்தன. இராணுவ வீரர்களின் மனைவிகள், எங்கள் குழந்தைகளுக்கு ரொட்டி வேண்டும், எங்களின் கணவர்கள் கந்தகத்திலிருந்து எழுந்து வர வேண்டும் என்று போராடினர். மார்ச் 8-12 பரவிய கலவரங்களில் பெண்கள் தின வேலை நிறுத்தம் இரண்டறக் கலந்தது. ஜார் மன்னன் வலுக்கட்டாயக்மாக பதவி இறக்கம் செய்யப்பட்டார். 1917, மார்ச் 8 ன்   ரஷ்யாவின் பெட்ரோகிரேடு உழைக்கும் பெண்கள் தினத்திற்கு சரித்திரத்தில் என்றும் நீங்காப் புகழ் உண்டு.
  இன்றும் தொடரும் பிரச்சினைகள்..!



அன்று தொடங்கிய போராட்டத்தின் வேர்கள் இன்று ஆலமரமாய் பரவி நிற்கின்றன. அன்றைய போராட்டத்தின் கோரிக்கைகள் இன்றும் கூட பொருத்தமாகவே உள்ளன. அதே அவல் நிலைகல் இன்றும் தொடருகின்றன. வாக்குரிமை இருப்பினும் தீர்மானிக்கும் திறன் பெண்களிடம் கிட்டவில்லை. 33% சத இடஒதுக்கீடு இன்னும் எட்டாக் கனிதான். இந்தியத் தொழிலாளிகளில் 93%பேர் முறைசாராத் தொழிலாளிகள். இதில் கணிசமானவர்கள் பெண்கள். இவர்களுக்கும் நவீன தாராளமயக் கொள்கையால், நிரந்தரப் பணிகள் உடைந்து ஒப்பந்த காஷூவல் பணிகளாகிவிட்டன. எந்த விதநிரந்தர ஏற்பாடும் இல்லை.. வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகிவ்ருகிறது. ஆனால் வேலைக்கு வரும் பெண்களில் எண்ணிக்கை பெருகுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலததால், பணி நேரம் 12 மணியாக அதிகரிக்கிறது. சங்க உரிமை மறுக்கப்படுகிறது. கூலிக்கோ உத்திரவாதம் இல்லை. பணியிடங்களில் பாலியல் தொல்லைகள், சம்பளப்பிரச்சினை என பிரச்சினைகள் தொட்ர்ந்த வண்ணம் உள்ளன. பென்கள் மீதான வன்முறைகள் புதிய மற்றும் பல கோர வடிவங்களில் மோதுகின்றன..
  சமூகக் கட்டமைப்பில் பெண்கள்..!

நம் இந்திய நாட்டின் ஜான்சிராணி, கேப்டன் லட்சுமி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், ஜானகி அம்மையார்,பாப்பா உமாநாத் என ஏராளம் பேர் பெண்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் உள்ளனர். ஆனால் எழுத்திலும், மக்கள் மனத்திலும் நின்றவர் குறைவானவர்களே..! தன் முகமே தெரியாமல், உயிர்த் தியாகம் தந்து தான், காலச்சக்கர சுழற்சியில் மகளிர் உரிமை பெறப்பட்டது. ஆனால் இன்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், மைய அரசு பெண்களுக்கு 33 % கொடுப்பதிற்கு, குரங்கும் அப்பமும் கதையாக வேலை செய்கிறது..!.இன்னொரு பக்கம் , இந்த சமூக கட்டமைப்பில், பெண்களின் மூளைப் பெட்டகத்தை அஞ்சறைப் பெட்டியிலிருந்து அகல விடாமல் பார்த்துக் கொள்ள அனைத்து முயற்சி களையும் மேற்கொள்கிறது. இதற்கிடையில் நாம் பெண். ஆண் உழைக்கும் வர்க்கப் போராட்டத்தில் உழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களின் சர்வதேச ஒற்றுமையை முன்னெடுத்து செல்வோம். அப்பொதுதான்  ண்கள் சுயமாக ,அறிவியல் அலசலுடன், சிந்தித்து செயல்பட அனுமதிக்கபடும்போதுதான், உண்மையான பெண் உரிமை கிட்டும்.   .





பேரா.சோ.மோகனா



--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

சமம் அமைப்பின் மாநில பயிற்சி முகாம், மதுரை


சமம் இயக்கம் சார்பில் மார்ச்,2,3 ஆகிய தினங்களில் மதுரை மூட்டா அரங்கத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் ”நுண் நிதி நிறுவனங்களும் சுய உதவிக்குழுக்களும்” என்ற தலைப்பில் மாநிலக் கருத்தரஙகம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 200 பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கில் நபார்டு வங்கியின் உதவிப்பொது மேலாளர் திரு.ஆர்.சங்கர் நாராயணன் ”நுண் நிதி ஒரு பரந்த பார்வை” என்ற தலைப்பில் உரை ஆற்றித் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச்செயலரும் சென்னை பாரத ஸ்டேட் வங்கி ஊரக சேவைப்பிரிவு மேலாளரும் ஆன திரு டி.தாமஸ் பிராங்கோ ”நுண்நிதிச்சட்டம்” குறித்துப் பேசினார்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் என்.லலிதா “நுண் கடன் உதவிகளும் சுய உதவிக்குழுக்களும்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கப் மாநிலப்பொருளாளர் திருமிகு.ராதா முருகேசன், சமம் குழுக்களும் நுண் நிதி நிறுவனஙகளும் என்ற தலைப்பில் பேசினார்.

இக் கருத்தரங்கத்திற்குப் பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தீபம் மாவட்டச்செயலர் பி.பத்மா வரவேற்புரை ஆற்றினார். சம்ம இயக்க மாநில ஒருங்கிணைப்பாளார் ஜான்சிலிபாய் நோக்க உரை ஆற்றினார்.ஏக்தா சார்பில் அனிதா அவர்களும், உழைக்கும் பெண்கள் சார்பில் பாண்டிச்செல்வி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தீபம் மாவட்டத்த் தலைவர் முத்துலட்சுமி நன்றியுரை நிகழ்த்தினார்.

சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வசதிகளை பொதுத்துறை வங்கிகளே செய்ய வேண்டும், குறைந்த வட்டியில் கடன் தர வேண்டும், அதிக வட்டி வாங்கும் தனியார் நுண்நிதி நிறுவனஙகளைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கருத்தரஙகம் தனியார் நுண் நிதி நிருவனஙகளின் கொடுமைகளை அரசிடமும் மக்களிடம் விரிவாக எடுத்துச்செல்லப் பல்வேறு இயக்கங்களைத் திட்டமிடும் கருத்தரஙகமாக நடத்தப்பட்டது. 

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், சூழல் மற்றும் ஊரக வளர்ச்சி மையமும் இக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தன. நமது தேனி மாவட்ட சமம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் உள்ளிட்ட மூன்று நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Mar 7, 2012

சமையல் பிறந்த கதை..


விலங்கு ..மனிதன்..!
   மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு என்பது உணவைச் சமைத்து உண்பதும், மனித இனத்தின் தகவல் பரிமாற்ற மொழியும்தான். முக்கியமாக சமைப்பது என்பது, மொழியையும் விடவும் கூட தனித்துவமானதாக, சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் எந்த விலங்கும் உணவை சமைத்து உண்பதில்லை.கிடைப்பதை அப்படியே விழுங்கி வைக்கிறது. மனிதன் மட்டுமே விலங்கினத்தில் உணவை சமைத்து உண்கிறான்.மொழி/குரல்வளம் விஷயத்தில், மற்ற விலங்குகள், தொடர்புக்காக, மிரட்ட, தன் உணர்வைக்காட்ட குரைக்கின்றன,கனைக்கின்றன, உறுமுகின்றன, ஊளையிடுகின்றன/ ஏதாவது ஓர் ஒலியை எழுப்பி தனது இருப்பிடம் குறித்து தகவல் தருகின்றன. இதுதான் இயற்கை. சமைத்து உண்பது இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று.

சமைத்தலும், கலாச்சாரமும்..!

 


எந்த விலங்குக்கும்  உணவை சமைப்பது பற்றிய   எந்தவித எண்ணமும் இல்லை  , சமைப்பதும்  இல்லை .என்பது தெளிவாகவே தெரிகிறது. அப்படி எதுவுமே இல்லை. நாம்தான், மனித இனம்தான்,  கொதிக்க வைக்கிறோம், சுடுகிறோம், பொரிக்கிறோம், வறுக்கிறோம்,இத்யாதி..இத்யாதி எல்லாம் செய்கிறோம். இந்த விஷயம்தான் நாகரிகத்தின் இதயமாக வரலாற்றில் உலவி வருகிறது.  எனவே உணவுக்கும், சமைத்தலுக்கும் , கலாச்சாரத்திற்கும் இடையே ஒரு மெல்லிய் பாவு நூல போன்ற நெருங்கிய நூலிழைக்கண்ணியான தொடர்பு உருவாகி   இருக்கிறது.இந்த தொடர்பை நிரூபணம் செய்யும் விஷயமும் தகவலும் இதுவேதான்.. இதனை அடித்தளமாக வைத்தே,வரலாறும்  எழுதப்பட்டுள்ளது.  நாகரிகமும், உணவுப்பழக்கமும், இதற்கிடையே உள்ள உறவு முறையும்தான்  ஓர் இடத்தின் அரசியல், பொருளாதாரம், உடல்நலம், இனம், தகவல் தொடர்பு போன்றவற்றின் மூலம் நாகரிகம்/கலாச்சாரத்தை  நிர்ணயித்து அதனைப் பதிவு செய்யும் காரணிகளாக இருந்திருக்கின்றன. 


குயூநிபாரம்..பதிவு.!

மனித நாகரிகம் பிறந்ததும், நாகரிகத்தொட்டில் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுவதும் மெசபடோமியாதான்.( இன்றைய ஈராக்). மனிதனின் அனைத்து  செயல்பாடுகளையும்  பதிவு செய்வது என்பதும் பழங்கால மத்திய கிழக்கு நாடுகளில்தான் பெரும்பாலும் நடந்தது. அங்கு குயூநிபாரம் என்ற எழுத்து முறை கண்டுபிடிக்கப்பட்டது, இதில் கிட்டததட்ட முக்கோண வடிவிலான நீண்ட குச்சி ஒன்றின் மூலம்  , பச்சைக் களிமண் பலகையில் கருத்துக்களை பதிவு செய்வார்கள். பின்னர் இதனைக் காயவைத்து தீயில் சுட்டு எடுப்பார்கள் . இதுதான் குயூநிபாரம் எழுத்து முறையாகும்.  இம்முறை மூலம் பலவகையான மொழிகள் கி.மு 4,000- 100 வரை எழுதப்பட்டன. இந்த எழுத்து முறையை கி.மு 5,000 களில்  துவக்கியவர்கள் மெசபடோமியாவைச் சேர்ந்த சுமேரியர்கள்தான். அந்த எழுதுபொருளின் பெயர் ஸ்டைலஸ் (stylus)என்பதே.
 
C001/8605 Cuneiform clay tablet and stylus. Reproduction of a typical cuneiform clay tablet showing a wooden stylus, (though often a reed was used) being used to write in cuneiform letters and numbers. The late-Assyrian form characters depicted here have been copied from a Neo-Babylonian stela (about 900-800BC) from Babylon, now in the British Museum. SHEILA TERRY/SCIENCE PHOTO LIBRARY

அதனை மாற்றி மாற்றிப் பதித்து வார்த்தைகள், வரிகள் உருவாக்கி. அதனைப் படித்தனர்.இதனை சுமேரியர்கள், அக்காடியன்கள், பாபிலோனியர்கள், எலாமைத்ஸ், ஹிட்டிட்ஸ் மற்றும் அசிரியன்கள் பயன்படுத்தினர். உலகில் அகர வரிசை எழுத்து முறை வரும் வரை (கி.பி முதலாம் நூற்றாண்டு வரை), இந்த் வகை எழுத்து முறையே அனைத்து இடங்களிலும் எழுதும் முறையாக பயன்பட்டது. . 
 
     காலம் அறியும் அறிவியல்..!

   
  
துவக்க காலத்தில் பச்சை இலை தழைகளையும்.பழங்களையும் உண்ட மனிதன் எப்போது சமைத்து உண்ணத் தொடங்கினான் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அதில்தான் மனிதனின் தேடல் இருக்கிறது. இனறைய நவீன நாகரிகத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதில் முக்கியமானது, பழைய காலத்தையும், அதன் வயதையும் கூட துல்லியமாக அறிவியல் மூலம் கண்டுபிடிக்க முடிவதுதான்.. எப்படி ஒரு குழந்தையின் உடலிலுள்ள டி என் ஏ வை எடுத்து அதன் மூலமாக  அந்தக் குழந்தையின் பெற்றோரைக் கண்டறிய முடியுமோ அப்படியே, அது போலவே, நமக்கு கிடைக்கும் பொருள்களிலிருந்து அதன் காலத்தையும் அறிவியல் மூலம் கண்டறிய முடிகிறது என்றால் வியப்பான மற்றும் மகிழ்வான செய்திதானே..! சில சமயம் கிடைக்கும் பொருள்களிலிருந்து அந்த காலத்தின் காலநிலையையும் கூட அறியமுடிகிறது. 


 சமையல். .எப்போது?
   சமைத்தல் என்ற செயல் எப்போது துவங்கியது என்று சரியாகத் தெரியவில்லை. துவக்க கால மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் முதன் முதலில் எப்படியோ மாமிசத்தை நெருப்பிலிட்டு உண்டிருக்கிறான். பின் சுட்டிருக்கிறான்.. அவன்  கொன்ற விலங்கு காட்டுத்தீயில் மாட்டி சுடப்பட்டு இருக்கலாம்.  அப்படி சுடப்பட்ட மாமிசம் பல்லுக்கு மிக மெதுவாக இருந்ததுடன், நாவுக்கும் சுவையாகவும் இருந்திருக்கிறது. அது மட்டுமா? அந்த மாமிசம் வழக்கமான பச்சை மாமிசத்தைவிட, மிக எளிதில் சீரணமும் ஆகிவிட்டது. ஆனாலும் கூட, அவர்கள் நெருப்பை வெளிச்சத்திற்கும், வெப்பத்திற்குமே மட்டுமே நீண்ட காலம்  பயன் படுத்தினர்.  சமைப்பதிற்கு  ரொம்ப காலம் வரை நெருப்பின் பக்கம் கூட உணவு எட்டிப்பார்க்கவில்லை.நெருங்கவில்லை.; பயன்படுத்தப்படவில்லை.இதெல்லாம் வரலாற்றுக்கு முற்பட்ட கால கட்டங்கள்.

முதல் விவசாயம்....!
   

வளம் மிக்க மத்திய கிழக்கின் பிறைநிலத்தில்தான் முதன் முதல் விவசாயம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது..இந்தப்பகுதிதான் மனித நாகரிகத்தின் தொட்டில்.. இனறைய போர்க்களமான ஈராக் தான் அன்றைய நாகரிகம் வளர்ந்த இடம். அப்பகுதி யூப்ரடிஸ் , டைக்கிரிஸ் நதிகளுக்கிடையே இருந்ததால் வளமானதாக இருந்தது.விவசாயம் செய்யப்பட்டது. எங்கு விவசாயம் நடந்ததோ அங்கே பயிர் வகைகளுடன், நாகரிகமும் சேர்ந்தே வளர்ந்தது. மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மிளகு, தானியம், பொன்னாங்கண்ணிக்கீரை , சுரை,பாகல் போன்றவைகளைப் பயிரிட்டனர் . அப்போது எகிப்தில் பெரிய பிரமிடுகளைக் கட்டிய எகிப்தியர்கள், உண்வில் பூண்டு, வெங்காயம் போன்றவை இருந்தன. அதே சமயத்தில் அங்கிருந்த சீதோஷ்ணநிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். 

  நெருப்பும்..சமையலும்..!

   
 
 சமைப்பது என்பது பொதுவாக நெருப்பைப் பயன்படுத்தி செய்வதாகும் . . சமைக்கும  முறையும், அதற்குப்பயன்படுத்தப்படும் உட்பொருட் களும், 
உலகம் முழுவதுக்கும்  வேறுபடுவதுடன், அவை அப்பகுதியின் கிறது அத்துடன் அது கலாச்சாரத்தைப் பறைசாற்றுவதாகவும், அவர்களின் பொருளாதாரச் சூழல் மற்றும் இயற்கைச் சூழலியலைக் குறிப்பதாகவும் கூட உள்ளது. சமைத்தலில் உள்ள மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நெருப்பைக்கண்டுபிடித்ததும், அதனைக்  கட்டுப்படுத்தியதும்தான். முதல் சமையல்காரர் என்பவர் தற்செயலாக எதிர்பாராமல்தான்  உருவாகி இருப்பார். அது பெண்ணா, ஆணா, என்பதும் தெரியவில்லை. ஆனால் சமைத்து உணவை உண்பது என்பதை மனிதன் தவிர வேறு எந்த விலங்கும் செய்யவில்லை. இந்த் சமையல்தான் மனிதனின் பரிணாமப் பாத்திரத்தில் பெரும் பங்கு வகிப்பதாகும். பெரும்பாலான மனிதவியலாளர்கள் கருதுவது போல, மனிதன் தீயைப் பயன்படுத்தி சமைப்பது என்பது சுமார் 2,50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. ஆனால் . விவசாயத்தின் வளர்ச்சியும், வணிகம் மற்றும் போக்குவரத்துக்கு இடையிலான கலாச்சார இணைப்பு போன்றவையும்  உணவுக்கான புதிய உட்பொருள்களைத்  தந்தன. புதிய புதிய கண்டுபிடிப்புகளும்,தொழில்நுட்பங்களும் சமைக்கும் வகைகளை விரிவுபடுத்தி உள்ளன. மனித நாகரிகப் பிறப்பின் பிற்காலத்தில் செய்யப்பட்டமண் பானைகளும், நீரைக் கொதிக்க வைப்பதும் புதிய சமையல் முறையை அறிமுகப் படுத்தியது. இன்று பல்வேறு வகை உணவுகளை சமையல்கலை களத்தில் இறக்கி உள்ளது.

சமையல் கலையின்..சரித்திரம்?      


என்னதான் இதுவரை நடந்திருந்தாலும், யார் முதலில் சமைத்தது என்றோ எந்த கால கட்டத்தில் சமைப்பது உருவானது என்பது பற்றிய தகவல்  சரிவரத்  தெரியவில்லை.ஆனால் வானரவியலாளரான ரிச்சர்ட் வ்ரான்காம் (Primatologist Richard Wrangham ), சமைக்கும் கலை சுமார் 1 ,800,000 -2 ,300,000  ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார். ஆனால் மனிதவியலாளர்கள், 2 ,50,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சமைப்பது பற்றி மனிதன் உருவாக்கினான் என்று கூறுகின்றனர். நமது ஆராய்ச்சியாளர்களோ   சுமார் 40,000  - 10,000      ஆண்டுகளுக்கு முன்புதான் மனித சமைக்க கற்றுக்கொண்டான் என்று கூறுகின்றனர். 
  
அனுபவம்..அறிவியல்..!    
 
E438/0065 Early use of fire. Illustration of Homo erectus using fire to cook meat. At upper right, a Homo erectus man is igniting a stick from a tree that has been struck by lightning. This could be the way that man learnt to harness fire. The name Homo erectus translates to "erect man". The erect standing H. erectus stood 1.68 metres tall, perhaps more. Living 1.8 million years to 200,000 years ago, it was the first human type to spread from Africa to Asia. They had a mixed diet and were nomadic hunter-gatherers. CHRISTIAN JEGOU PUBLIPHOTO DIFFUSION/ SCIENCE PHOTO LIBRARY
எது எப்படியோ, எப்போது மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தான், எப்போது உருவாக்கினான் என்பது சரிவரத் தெரியாததால், சமைக்கத் துவங்கியது எப்போது என்பதும் சரியாகத் தெரியவில்லை. முதன் முதலில் எதிர்பாராமல் நெருப்பில் சுட்டதுதான் நடந்திருக்கவேண்டும். அந்த அனுபவத்தின் விளைவாக ஒரு குச்சியில் பறவையோ, விலங்கையோ மாட்டி அதனை நெருப்பில் சுட்டுத் தின்றிருப்பார்கள். அப்போதுதான், பச்சை மாமிசத்தைவிட சுட்டது மிகச் சுவையாய் இருந்ததை உணர்ந்திருப்பார்கள்.அதன்பின்னர் தான், அந்த மாமிசத்தைப் பிளந்து சுட்டால், சீக்கிரம் வேகும் எனபது அறியப்பட்டிருக்கும். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஓர் அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைந்தது.அறிவியலாக இருந்தாலும் சரி, சமையலாக இருந்தாலும் சரி.. இதுதான் வகைப்பாடு. எல்லாவற்றையும் விட  இது சமையலுக்கு மிக மிக முக்கியம்.உயிர் காக்கும் உணவாயிற்றே  இன்றும் கூட, சமைப்பதும், அதன் ருசியை வாசனை மூலம் சொல்வதும்கூட  அனுபவத்தில்  விளைந்தது  தான்...இதுதான் சமையல் பிறந்த கதை..! 

பாட்டி .. சொல்வதும..முன்பு ..நடந்ததும்.!  

 

 நம் பாட்டியைக் கேட்டால், இப்போதுள்ள பெண்டுகள், சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை என நக்கல் அடிக்கின்றனர்.குறைபட்டு கொள்கின்றனர். இன்று சமையல் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.. ஏராளமான சமையல் குறிப்புகள், சமையல் புத்தகங்கள் வந்து விட்டன. அதனை வாங்கி வைத்துக் கொண்டால், சமைப்பது எளிது என்றும் பெரும்பாலோர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட.. நெசம்மாவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப் படுவதில்லையா?.. அதெல்லாம் இல்லை. பழங்காலத்திலும்  கூட இந்த சாதாரண விஷயங்களெல்லாம் கூட பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. சமையலின் கதையை, வரலாற்றை  பழங்கால கற்படிமங்கள் கதைக்கின்றன என்ற உண்மையை, நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். 

இதோ..உங்களுக்காக , சமையலின் சரித்திரம் 
  உலகின்.. பழமையான..சமையல் ..புத்தகம்..!    இப்படிப்பட்ட சமையல் குறிப்பு எத்தனை ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கும்.. யாராவது உத்தேசமாக சொல்ல முடியுமா? . உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஒன்றை நம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபித்துள்ளனர். ஆனால் அது உலகின் மிகப் பழமையான சமையல் கலைகளை சுமந்து, பாபிலோனிலிருந்து கிடைத்திருக்கிறது.அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள் ஆனால் அது இன்றுள்ள புத்தகம் போல காகித தாளில் இல்லை. ஆதிகால களிமண் பலகைகளால் ஆனது.அந்த புத்தகம் என்பது அந்தக் காலத்திய சுட்ட களிமண். அப்படிப்பட்ட களிமண் பலகைகள் மூன்று கிடைத்துள்ளன. அந்த சுட்ட களிமண் பலகையில் குயூநிபாரம் எழுத்துக்களில், அந்தக் கால மெசபடோனியர்களின் மொழியான அக்காடியன் என்ற செமிடிக்(Akkadian, an Semitic language spoken) மொழியில் குறித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் பலவகையான பாஸ்தா தயாரிப்பது, (அதான் நம்ம நூடுல்ஸ் மாதிரிதாம்பா )என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் பழங்கால பாபிலோனுக்கு சொந்தமானவை. 

சரித்திரம் பேசும்.. சமையல் பலகை..!   

நாம் பழங்கால நாகரிக மக்களான எகிப்தியர்கள், போனிசினியன்கள், ஹிப்ரூக்களின் உணவு பொருட்கள், உணவு முறை பற்றி அறிந்துள்ளோம்.ஆனால் அவர்களின் சமையல் குறிப்பு பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் யேல் பலகலைக்கழகத்தின்  கோதிக் ஸ்டைல் நூலகத்தில் உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம், பழங்கால சமையல் கலையின் திறமையின் மேல் ஒளியை அள்ளி வீசிக்கொண்டு,ஓர்  இருட்டு அறையில் படுத்திருக்கிறது.அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதால்  , அவை யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. மெசபடோமியாவைச்  சேர்ந்த சின்ன களிமண் பலகைகளில் உலகின் பழங்கால சமையல் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன என்று, பாபிலோனியன் பலகைகள் மற்றும் இலக்கியங்கள் சேகரிக்கும் பேராசிரியர். வில்லியம்.வ.ஹாலோ(William W.Haalo) சொல்கிறார்..

   பழமையில்..புதுமை..! 
   பாபிலோனிய பெரிய களிமண் பலகையின்  அளவு7 "  X 9 .5 " .அதில் குட்டி குட்டியாய் குயூநிபாரம் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதும் இருக்கிறது.அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, அதில் சுமார் 35 வகை மெசபடோமியன் உணவு வகைகளுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள், புறா, வெள்ளாட்டின் மண்ணீரல், கோழி சமையல், டர்னிப்பு  போன்றவற்றின் சூப் தயாரிப்பது தொடர்பாய் அனைத்து தகவல்களும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிகி சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.  அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான  ஒன்றுதான் ஏனென்றும், மேலும் சுமார், 4,000 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நவீன  சமையல் குறிப்பை நாங்கள் நினைத்துப்பார்க்கக்கூட தயாராக வில்லை, ஆனால் அப்படி இருப்பதுதான உண்மை, என்று,,அசிரியன்கள் பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கிறார். 
  .  அரிதான சமையல் பொருட்கள்..!
   இந்த சமையல் குறிப்புகள் செய்யத்தக்கதாகவும், முக்கியமாய் தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கின்றன. இந்த குயூநிபாரம் இலக்கிய காலத்துக்கு முன் இவை வந்திருக்க வாய்ப்புஇல்லை என்று ஹாலோ (Mr. Hallo ) தெரிவிக்கிறார் . அவற்றில் ஏராளமாய் கொழுப்பும் எண்ணெயும் இருந்ததாக ஹாலோ சொல்கிறார். மேலும் அனைத்து உணவிலும் வெங்காய குடும்ப பொருள்கள் இருந்தன. ஆனால் உப்பு மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது.இந்த களிமண் பலகைகள், பல பத்தாண்டு கால சேமிப்பாக இருந்தாலும் கூட, அவற்றைப் பற்றிய முழுமையான தகவல்கள்,  5ஆண்டுகளுக்கு முன்தான் தெளிவாகத் தெரியவந்தது.இவை விசேஷ கால சிறப்பு சமையல்களாக இருக்கலாம் என்றும், மேல் தட்டு வர்க்கத்தினருக்கான உணவு வகை என்றும் தெரிகிறது.அவை அனைத்தும் அரிதான சமையல் பொருட்களைக் கொண்டே தயாரிககப்பட்டுள்ளன .
  ச்மையல்..பொருட்கள்..!
  களிமண் பலகையிலுள்ள மாமிசத்தில் மாட்டுக்கறி, வெள்ளாடு, செம்மறியாட்டுக்கறி, பன்றிக்கறி , மான்கறி மற்றும் கோழி போன்றவையும் முட்டையும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் ஆமை சிப்பிகள் போன்றவை மீனுடன் சேர்த்து சமைத்து உண்ணப்பட்டது. பலவகை தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் திராட்சை  , அத்திப்பழம், பேரீச்சை, மாதுளை போன்றவையும் உண்ணப்பட்டன.  தேனும், பேரிச்சை,திராட்சை சாறு போன்றவை இனிப்பு பொருள்களாக பயன்பட்டன. ஏழைகளுக்கு பார்லியில் செய்த ரொட்டியும், செல்வந்தர்களுக்கு இனிப்பும் வாசனையும் உள்ள மெதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டது.

  புரியாத மொழியும்.. தெரிந்த தகவலும்..!

  களிமண் பலகை ஒவ்வொன்றிலும் சமையல் குறிப்புகள் உள்ள தகவல்களே காணப்படுகிறன. முன்றிலும் மொத்தமாக 35 வகையான சமையல் குறிப்புகள் உள்ளன. . இவை பழைய பாபிலோனிய காலத்தின் இடைப்பகுதியில் தொகுக்கப் பட்டதாகும்.இதுதான் உலகிலேயே மிகப் பழமையான சமையல் கலை புத்தகம்.இதன் வயது சுமார்3 ,710 ஆண்டுகள்     இந்த களிமண் சமையல் புத்தகத்திலுள்ள விஷயங்களை மாற்றி எழுதி, மொழியாக்கம் செய்தவர், ஜீன் போட்டாரோ மற்றும் தெரசா லேவாண்டர் பாகன் ஆவார்கள். இதனை கடந்த 2004 ல், மெசபடோமிய சமையல் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது.காரணம் என்ன தெரியுமா? இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் உண்மையாகவே, அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் ஏதும் அறிய மாட்டோம்.அதிலுள்ள சமையல் முறை என்பது. சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு எனபதும் அதில் காணவில்லை. ஆனாலும் கூட, அந்த குயூனிபாரம் எழுத்துக்களைப் படித்து அதன் பொருளும் உணர்ந்து சமைத்தும் பார்த்துவிட்டனர். இப்போதுள்ள நமது சமையல் வல்லுநர் குயூநிபாரம் உணவு வகைகளை இப்போது கிடைக்கும் கோழியில் முயற்சியும்  செய்து பார்த்தார்.

செல்வசெழிப்பை பறைசாற்றும்..சமையல் ..!
   அந்த சமையல் குறிப்புகளிலிருந்து அங்கு நிலவிய செல்வசெழிப்பும் , துல்லியமாக திட்டமிட்டு உட்பொருள்கள் இணைத்து சமைக்கப்பட்டதும், திறமையாக சமையல் செய்யப்பட்டதும்  தெளிவாகத் தெரிய வருகிறது.. இவையெல்லாம் நம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயங்கள்தான். இதில் முக்கியமாக, 4,000 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு பொருட்கள் சேர்த்து சமைத்தனரா என்பதும நமது கற்பனைக்குகூட  எட்டாத விஷயமாகவே உள்ளது. நம்மை வியக்க வைக்கிறது. அனைத்து சமையல் குறிப்பிலும் பூண்டு, வெங்காயம், வெந்தயம் சேர்த்திருக்கின்றனர். பழங்கால சமையல் குறிப்புகளில், வாசனைக்காக, கடுகு, சீரகம், மல்லி, புதினா, சைப்ரஸ் காய்கள், சேர்த்திருக்கின்றனர்.  கொஞ்சம் கெட்டியாக இருப்பதற்கு மாவுப் பொருள்கள், அரைத்த பார்லி, மெதுவான தன்மைக்கு நீர் சேர்ப்பது என்ற அனைத்து வகை கலைகளிலும் கை தேர்ந்தவராக இருக்கின்றனர். சிலசமயம், உணவு மெதுவாக இருக்க, பால், பீர் மற்றும் இரத்தம் போன்றவற்றையும்  சேர்த்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. .

பெரும்பாலும்..மாமிசமே..!
    மெசபடோமியாவியால் கிடைத்துள்ள மூன்று களிமண் பலகைகளில்  25 வகையான சமையல் குறிப்புகள் இருக்கின்றன. இவற்றில் 21 வகை மாமிச உணவு தயாரிப்பது பற்றியும், மீதமுள்ள 4 வகைகளே, தாவர உணவு தயாரிப்பது தொடர்பான பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பில் அதில் சேர்க்கப்பட்ட பொருள்களின் பட்டியலும் அழகாக குறித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் எதனை முதலில் போடவேண்டும், எத்தனைப் பின்னால்  போடவேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவற்றி அளவோ, சமைக்கும் நேரமோ போடப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும்போது, அவை கை தேர்ந்த சமையல்களை வல்லுநரால்தான் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதும் தெரிய வருகிறது.

  இந்தியாவில்..இல்லையா சமையல்?
  அதெல்லாம் சரி. இப்படிப்பட்ட சமையல் கலை கண்டுபிடிப்பு மெசபடோமியாவில்தான்  இருந்திருக்க வேண்டுமா? நம் இந்தியாவிலும் மக்கள் வாழ்ந்தனரே.. அவர்களும் க்கூட இதனைக் கண்டுபிடித்திருக்கமல்லவா என நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது. உண்மைதான். கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் பதிவுகள் இல்லையே..நண்பா..! வரலாற்றுப் பதிவின் படி.. பாபிலோனிய சமையல் களிமண் ப்லகைப் புத்தகம்தான் உலகின் முதல் சமையல்கலை பதிவு..
  புதிய.. கண்டுபிடிப்பு..நீர் .. சமையலும்.. சுவையும்.. ! நண்பா அதில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் ,எல்லா உணவிலும் கறி, கோழி,காய்கள்,தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. உங்களுக்கெல்லாம் ஒரு அற்புதமான,  ஆச்சரியமான, சுவையான விஷயம் சொல்லலமா. அதுதான் நீரில் சமைப்பது.? இது என்னப்பா அதிசயம். நாம் சாதரணமாய் செய்வது தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. நீரில் சமைப்பது என்பது, சமையல் அறிவியலில் புதுமை கலந்த ஓர் முக்கியமான மைல் கல். அதுவரை மக்கள், நேரடியாய் நெருப்பில் போட்டு சமைத்தனர்; பின், சுட்டனர் ; பிறகு பாத்திரத்தில் போட்டு வதக்கினர் ;பாத்திரத்தில் போட்டு, வறுத்தனர். ; , நெருப்பு தணல்/ தீயில் வாட்டினர்;லேசாக புரட்டி புரட்டி வாட்டினர். இதெல்லாம் போக நீரில் போட்டு சமைப்பது, சுவையான , வசதியான சமையலாகும். நீரில் போடு வதன் மூலம், உணவின் சுவை கூடுகிறது. அதன் மணத்தை அதிகரிப்பதும் , சமையலை வளமாக்குவதும், பல வகை உணவுகள் செய்வதும் இதன் மூலம் அதிகரிக்கின்றது. இந்த சுவையை வறுத்தல் சுடுதல், புரட்டுதல் மூலம் செய்ய முடியாது. எனவே நண்பர்களே,, தண்ணீரில் உணவுக்கான பொருட்களை போட்டு , வேக வைத்து உண்பது என்பது நவீன புதிய முறை. இதனை பாபிலோனியர்கள், தான் துவக்கி வைத்ததுடன், மறக்காமல், வெகு புத்திசாலித் தனத்துடன் சுட்ட களிமண் பலகையில் பதிவும் செய்துள்ளனர் என்றால் பாராட்டும் அம்சம்தானே.
   
.24வது களிமண் பலகையில் உள்ள  உணவு வகை பலதரப்பட்டதாக உள்ளது..அதிலுள்ள உணவுகள்:

  1. சாறு & தேனி (12 வகைகள்)
  2. எண்ணெய்& கொழுப்பு வகைகள் (53வகைகள்)
  3. நறுமண்ப்பொருட்கள்(1, மற்ற பலகையிலும் உள்ளது )
  4. கொட்டைகள் (12 வகைகள்()
  5. பால் பொருட்கள்..(34)
  6. தானியங்கள் (8)
  7. எம்மர் & கோதுமை(10)
  8. பார்லி(67)
  9. ஸ்ட்ரா (10)
  10. பழங்கள் (30)
  11. உப்பு & இனிப்பு வகைகள் (12)
  12. தர்ப்பூசணி & பூசணி (8)







கட்டுரையாளர்: பேரா.சோ.மோகனா

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI