முதல் பக்கம்

Jul 7, 2012

சூரியனைக் கடந்தது வெள்ளி: தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் மாணவர்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு

கம்பம், ஜூன். 6: சூரியினை நேர்கோட்டில் வெள்ளி கடக்கும் அரிய காட்சியை தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்களும், பொதுமக்களும் புதன்கிழமை கண்டு ரசித்தனர்.சூரியனை நேர்கோட்டில் வெள்ளி 121.5 ஆண்டுகளுக்கு பின்னர், வரக்கூடிய அடுத்த 8 ஆண்டு இடைவெளியில் வெள்ளி இரண்டு முறை சூரியனைக் புதன்கிழமை கடந்தது. இதேபோன்ற நிகழ்வு 1882 டிசம்பர் 6-ம் தேதி 2004 ஜூன் 8-ம் நாள் சூரியக் கடப்பு நிகழ்வு நடைபெற்றது. அதைபோல் நிகழ்வு புதன்கிழமை காலை 6.30 மணியிலிருந்து காலை 10.20 வரை நடந்தது. இதன் பிறகு 2117-ம் ஆண்டு டிசம்பர் 11 நாளும், 2125 டிசம்பர் 8 நாளும்தான் இந்த அரிய சூரிய கடப்பு நிகழ்வு நடைபெறும் என்பதால் இந்த நூற்றாண்டில் முக்கியத்துவமான நிகழ்வகாக கருதப்பட்டது.தமிழ்நாடு அறிவில் இயக்கத்தின் சார்பில், மாவட்டத்தில் கூடலூரில் 2 இடங்களிலும், கருநாக்கமுத்தன்பட்டி ராமன் துளிர் இல்லம், சுருளிப்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி, நாராயணத்தேவன்பட்டி பெயர்டு துளிர் இல்லம், போடி-சிலைமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் சூரியனை வெள்ளி கடக்கும் நிகழ்வை காணவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து என்பதால் சூரியக் வடிகட்டி கண்ணாடி, தொலை நோக்கி (டெலோஸ் கோப்), முகம்பார்க்கும் கண்ணாடி, ஊசித் துளை கேமரா உள்ளிட்ட சாதனங்களை கொண்டு மாணவர்களுக்கும், பொதுமக்களும் பார்த்து ரசித்தனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி மறைப்பு குறித்து கருத்துரைகள், படக்காட்சி, விளக்கம், போஸ்டர் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர்களான வெங்கட்ராமன், முத்துக்கண்ணன், தெய்வேந்திரன், சிவாஜி, ஜெகதீசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்வை ஆயிரக்கணக்காண மாணவர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.
DINAMANI

கருத்தரங்கம்


தினமலர் : 9 ஜூன், 2012: கூடலூர்: 
 
விண்ணில் நிகழ்ந்த வெள்ளி கிரக இடைமறிப்பு பற்றிய விளக்க கருத்தரங்கம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய பூங்கா நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்தது.

பள்ளித்தலைமை ஆசிரியை மெர்சி தலைமையில், அறிவியல் இயக்க கம்பம் கிளை செயலாளர் முத்துக்கண்ணன் வரவேற்றார். வெள்ளி இடைமறிப்பு பற்றிய விளக்க கையேடு வழங்கப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்ட கருத்தாளர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் சுருளிராஜ், கஸ்தூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

பெரியகுளத்தில் அறிவியல் திறனறிதல் தேர்வு

பெரியகுளம், ஏப். 19-
 தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் திறனறிதல் தேர்வு 2012 நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கிளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முத்துச்சாமி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் புஷ்பராஜ் சேவியர், அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ராம்சங்கர் வரவேற்று பேசினார். விழாவில் நூறு மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பெரியகுளம் நகரசபை தலைவர் ராஜா, மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
விழாவில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜிந்தா மதார்மைதீன், மேற்பார்வை யாளர் விஜயகுமார், கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், ஸ்டேட் வங்கி மேலாளர் வெங்கட்ராமன், டாக்டர் செல்வராஜ், கிளை துணைத் தலைவர் செல்வராஜ், முத்துமணிகண்டன்,
மாங்கனி அரிமா சங்கத் தலைவர் சிவபாலு, ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவினை கார்த்திகேயன், ஆனந்த குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழா முடிவில் கிளை துணை செயலாளர் மனோகரன் நன்றி கூறினார். 
-MALAIMALAR