முதல் பக்கம்

Aug 21, 2012

நாகையில் துளிர், ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி


First Published : 19 Aug 2012 01:34:35 PM IST

நாகப்பட்டினம், ஆக. 18: தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்டக் கிளை சார்பில் மாவட்ட அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டிகள் நாகை, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

அறிவியல் இயக்க பொதுச் செயலர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன், மாவட்டத் துணைச் செயலர் ஆவராணி ஆனந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) மீனா, அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் இரா. பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றியப் போட்டிகளில் முதல் 2 இடங்களில் தேர்ச்சி பெற்ற 65 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டச் செயலர் சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

துளிர் அறிவியல் போட்டியில் வென்ற பள்ளிகள்: 6, 7, 8 வகுப்பு: புஷ்பவனம் உதவிபெறும் பள்ளி, குத்தாலம் கணபதி தேசியப்பள்ளி, ஓரடியம்பலம் ஊராட்சி ஒன்றியப்பள்ளி. 9,10-ம் வகுப்பு: வலிவலம் தேசிகர் பள்ளி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பள்ளி,புறாகிராமம் அரசுப்பள்ளி. 11, 12-ம் வகுப்பு: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபள்ளி, வலிவலம் தேசிகர் பள்ளி, ஆயக்காரன்புலம் நடேசனார் அரசுப்பள்ளி.

ஜந்தர் மந்தர் வினாடி வினா:6, 7, 8-ம் வகுப்பு: சீர்காழி எஸ்.எம்.எச். மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி, நாகை நகராட்சி மகளிர் பள்ளி. 9,10-ம் வகுப்பு: நாகை நகராட்சி மகளிர் பள்ளி, சீர்காழி எஸ்.எம்.எச் மெட்ரிக் பள்ளி, நாகை தூய அந்தோனியார் பள்ளி. 11, 12-ம் வகுப்பு: நாகை தேசிய பள்ளி, சீர்காழி எஸ்.எம்.எச் மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி.

போட்டிகளில் வென்றோருக்கு, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மார்த்தாள் பிரபாவதி சுழற்கேடயங்களை வழங்கினார்.பள்ளித் துணை ஆய்வாளர் ராமநாதன், நாகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமலிங்கம், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கீழ்வேளூர் உதவி தொடக்கக் கல்வி அலுவர் மணிகண்டன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

நன்றி: தினமணி

வினாடி, வினா : மாதம்பட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்

பதிவு செய்த நேரம்:2012-08-13 10:01:37

தொண்டாமுத்தூர்,: கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி, வினா போட்டி எஸ்என்ஆர் கல்லூரியில் நடந்தது. தொண்டாமுத்தூர் ஒன்றிய அளவிலும், கோவை மாவட்ட அளவிலும் 6,7,8 நடுநிலைபள்ளி பிரிவில், 9 மற்றும் 10 வகுப்புகள் பிரிவில் மாதம்பட்டி பள்ளிகள் முதலிடம் பெற்றன. இதை தொடர்ந்து 6 மாணவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள வினாடி, வினா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் புரட்சிதம்பி பரிசு வழங்கினார். விழாவில், தென்கரை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குருபுத்திரன், தலைமை ஆசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினகரன்

தேவகோட்டையில் விநாடி வினா

First Published : 13 Aug 2012 10:06:18 AM IST


  தேவகோட்டை, ஆக. 12: தேவகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், துளிர் விநாடி வினா போட்டிகள் லோட்டஸ் வெங்கடாச்சலம் செட்டியார் பள்ளியில் நடைபெற்றன.  மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 29 பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜசேகரன், ரேணுகா, ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர்.

இதில் 6,7,8 வகுப்பு பிரிவில் நானாக்குடி ஆர்.சி நடுநிலைப்பள்ளி முதலிடமும், தேவகோட்டை முத்தாத்தாள் பள்ளி இரண்டாமிடமும், 9,10 வகுப்பு பிரிவில் நகரத்தார் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.  11, 12 வகுப்பு பிரிவில் பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளி முதலிடமும், நகரத்தார் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் முனைவர் குமரப்பன் தலமைமையில் செயலாளர் எட்வின், பள்ளி முதல்வர் ராஜீ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பீட்டர் லெமாயூ ஆகியோர் வழங்கினர். இதில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

மூலம்: தினமணி