தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பாக கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் சர்வதேச காடுகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு.ஆ.ஜெகநாதன் தலைமை தாங்கினார். தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளர் திரு. ச.சுருளிராஜ் வரவேற்றார். மரக் கன்றுகள் நடுவது மற்றும் வன நாள் தொடர்பான கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் ”எல்லா மரங்களும் போதி மரங்களே” எனும் தலைப்பிலும், மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் “காடும் நீரும்” எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கூடலூர் நகரக்கிளை செயலாளர் தி. சூர்யப் பிரகாஸ் நன்றி கூறினார்.
முதல் பக்கம்
Mar 22, 2014
மார்ச் 21 உலக வன நாள் நிகழ்ச்சி-1
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை சார்பாக கம்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வன நாள் கருத்தரங்கம் மற்றும் கவிதைப் போட்டி மார்ச் 21 அன்று காலை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. உபதி அந்தோனி அம்மாள் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றியக்கிளை செயலாளர் க. முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் அவர்கள் “ மரம் நமக்கு வரம்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். காடுகளின் முக்கியத்துவம் குறித்தும் உலக நாடுகளில் காடுகளின் பரவல் குறித்தும் படக்காட்சி திரையிடப்பட்டது. கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியை. திருமதி. கீதா அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.இறுதியில் பள்ளி ஆசிரியை மு.வேணி நன்றி கூறினார்.
Mar 14, 2014
மார்ச் 14 ஐன்ஸ்டின் பிறந்த நாள் விழா
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் முத்தலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐன்ஸ்டீன் பிறந்த நாள் விழா & கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு. வே.தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். திருமிகு..எஸ்.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஐன்ஸ்டீன் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் பா.சோமநாதன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியகிளைச் செயலாளர் திருமிகு. க.முத்துக்கண்ணன் ”ஐன்ஸ்டீன் வடித்த கண்ணீர்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கூடலூர் கிளை பொருளாளர் ரா.ராஜ்குமார் “ஐன்ஸ்டீன் வாழ்வும் பணிகளும்” எனும் தலைப்பில் பேசினார். ஐன்ஸ்டீன் வாழ்வு மற்றும் சாதனைகள் தொடர்பான படக்காட்சிகள் திரையிடப்பட்டன. துளிர் இல்ல மாணவர் மு. கோபி நன்றி கூறினார். பள்ளி ஆசிரியர்கள் , 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)