முதல் பக்கம்

May 19, 2015

கூடலூர் நகரக்கிளை இரண்டாவது மாநாடு

கூடலூர் நகரக்கிளை இரண்டாவது மாநாடு மே 17 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் கூடலூர் குரு டிரெய்னிங் அகாடமியில் நடைப்பெற்றது. கிளைத் தலைவர் கு.மோகன் அவர்கள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் என்.கண்ணன் முன்னிலை வகித்தார். கிளைச்செயலாளர் தி.சூரியபிரகாஷ் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். பொருளாளர் ராஜ்குமார் பொருள் அறிக்கை சமர்ப்பித்தார். பிறகு அறிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது. புதிய தலைவராக ஆசிரியர் வே.சீனிவாசன் தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச்செயலாளராக ஆசிரியர் தி.சூரியபிரகாஷ், பொருளாளராக ஆர்.ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக போ.பிரபாகரன் மற்றும் ப.சரண்ராஜ் ஆகியோரும் கிளைத் துணைத்தலைவர்களாக ஆசிரியர் மொ.செளந்திரராஜன் மற்றும் சுருளிராஜ் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பதினைந்து பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் மாநிலச்செயலாளர் தே.சுந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளைப்பெருளாளர் ஆர்.ராஜ்குமார் இறுதியில் நன்றி கூறினார்.முப்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Apr 6, 2015

மாவட்ட செயற்குழு கூட்டம்-8

ஏப்ரல் 4 தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார். தேனி கிளை செயலாளர் தெய்வேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு பிறகு மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலைகளை மாவட்ட செயலர்.வி.வெங்கட் எடுத்துரைத்தார். கிளை செயற்குழு கூடுவதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கிளை மாநாடுகள், மாவட்ட மாநாடுகள் நடத்தும் தேதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான் புத்தகங்கள் கிளை வாரியாக பிரித்து தரப்பட்டது. ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை கொண்டாடும் வழிமுறைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Mar 8, 2015

பெரியகுளத்தில் தேசிய அறிவியல் தின விழா



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளை சார்பில் மார்ச் 6 பெரியகுளம் டிரயெம்ப் நடு நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா நடைப்பெற்றது.பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.கிளைச் செயலாளர் ஆர்.ராம்சங்கர் வரவேற்றார். நடு நிலைப்பள்ளி மாணவர்கள் அள்வில் மாணவர்களூக்கு ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைப்பெற்றன.ஒன்றிய அளவில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.