முதல் பக்கம்

Mar 7, 2016

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக மகளிர் தின போட்டிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் போட்டிகள்...


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் உலகம் முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. குடும்பம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு தினமும் மனதில் நினைத்து போற்றுதலுக்குரியது. உலகம் பெண்களால் இயங்குகிறது என்பது புதுமொழி.பெண்களின் பெருமைகளை போற்றும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போட்டிகளை அறிவித்துள்ளது...

அதன் விவரம் பின்வருமாறு...

கட்டுரைப்போட்டி
6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள்-தலைப்பு:கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்..

கவிதைப்போட்டி
9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள்
தலைப்பு: அணைகளை உடையுங்கள், ஆறுகள் பாடட்டும்..

கவிதைப்போட்டி
ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள்
தலைப்பு: புவியை பொதுவில் நடத்து....

கதைப்போட்டி
எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள்
தலைப்பு: பறக்க மறந்த பறவை ..


சிறந்த படைப்புகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.. மேற்கண்ட தலைப்புகளில்


படைப்புகள் மார்ச் 20 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டிய முகவரி: வி.வெங்கட், மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 6/10வார்டு, சௌடம்மன் கோயில் தெரு, கூடலூர்-625518, தேனி மாவட்டம், மேலும் தொடர்புக்கு அலைபேசி: 9488683929

Mar 6, 2016

குழந்தைகள் வாசிப்பு முகாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் தேனி ஒன்றியக்கிளை சார்பாக குழந்தைகளுக்கான வாசிப்பு முகாம் நிகழ்ச்சி தேனி ஒன்றியம் லட்சுமிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் மார்ச் 5 சனி அன்று நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட இணைச்செயலர் எஸ்.தெய்வேந்திரன் கிளை செயற்குழு உறுப்பினர் கரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கொ.ம.க இளங்கோ அவர்கள் எழுதிய சிறுவர் இலக்கிய வரிசை புத்தகங்கள் வாசிப்பிறகு எடுத்துக்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி கிளைச் செயலர் திருமிகு.ஜெகநாதன் செய்திருந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Nov 30, 2015

தேனி மாவட்ட குழந்தைகள் தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு

23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.27-29) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.. அதில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இளநிலை, முதுநிலை இரு பிரிவுகளில் தமிழகம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன. 

அதில் நம்முடைய தேனி மாவட்டத்திலிருந்து பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் கணிதமேதை சகுந்தலாதேவி துளிர் இல்ல மாணவி எ.பி.ஆர்த்திகா தலைமையிலான குழுவினரின் “நலிந்துவரும் தென்னை விவசாயத்தில் காலநிலையின் தாக்கம்” என்ற ஆய்வும் ஒன்று.. இக்குழந்தைகளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவரும் அனைவரின் பாசத்திற்குரிய விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் வருகின்ற 27-31 தேதிகளில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று தங்களது ஆய்வறிக்கையினைச் சமர்ப்பிக்க உள்ளனர்.. நம்முடைய நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்குவர்..



தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொள்ளக்குடிய குழந்தை விஞ்ஞானிகளையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் எஸ்.ஞானசுந்தரி மற்றும் எம்.கே.மணிமேகலை ஆகியோரையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் வி.வெங்கட் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகிறோம்..