முதல் பக்கம்

Jul 5, 2016

100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளுக்கு தேனியில் பாராட்டு விழா

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் பத்து, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளுக்கான பாராட்டு விழா நேற்று (04.07.2016) தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது..
கல்வியில் ஆண்டுக்காண்டு தனியார் மயமும், ஆங்கில மோகமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.. அதன் விளைவாய் மக்களும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றாக தனியார் பள்ளிகளையெ தேர்வு செய்கின்றனர்.. இதனால் அரசு துவக்கப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே பயின்று வரக்கூடிய சூழல் உருவாகிறது.. நாளடைவில் அடைக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது..

அரசுப் பள்ளிகளால் மட்டுமே அனைவருக்கும் தரமான சமமான கல்வியை வழங்க முடியும்.. பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்திற்கான அடையாளமாக அரசுப்பள்ளிகளே திகழ்கின்றன.. அரசுப்பள்ளிகள் நமது பள்ளிகள், அரசுப்பள்ளிகள் மக்களுடைய பள்ளிகள்.. அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.. பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசுப்பள்ளிகள் பாதுகாப்பிற்காக கையெழுத்து இயக்கம், ஆய்வுகள் என பலகட்ட முயற்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேற்கொண்டு வருகின்றது.. அதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற சுமார் 1500 அரசுப்பள்ளிகளுக்கான பாராட்டு விழாக்களை நடத்தி வருகின்றது..
தேனியில் நடைபெற்ற விழாவிற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார்.. மாவட்டத்துணைத் தலைவர்கள் அம்மையப்பன், சேசுராஜ், மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார்.. அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் துவக்கவுரையாற்றினார்..

தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம். வாசு அவர்கள் சிறப்புரையாற்றினார்.. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பாலுமுத்து, பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் இராகவன், பள்ளித் துணை ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 100% தேர்ச்சி பெற்ற சுமார் 65 பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப்பரிசினை வழங்கினர்.. அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் ஞானசுந்தரி நன்றி கூறினார்..
10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 65 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / உதவி ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் பாண்டி, ஸ்ரீதர், ஜெகநாதன், முருகேசன், ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..



Jun 9, 2016

கம்பம் கிளை செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளைச் செயற்குழு கூட்டம் ஜூன் 9 அன்று மாலை ஆறு மணி அளவில் கம்பம் கோட்டை மைதானத்தில் நடைப்பெற்றது. கம்பம் கிளைத்தலைவர் திருமிகு.ஜி.பாண்டி தலைமை தாங்கினார். பெருளாளர் மொ.தனசேகரன் வரவேற்றார். கிளையின் கட ந்த கால பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிளையின் இணைச்செயலாளர் திருமிகு சுரேஷ் கண்ணன் அவர்களது பள்ளீயில் நடைப்பெற்ற மேம்பாட்டு பணிகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி ஓவியப்பணியில் ஈடுபட்ட கிளைத்தலைவர் ஜி.பாண்டி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அடுத்த கட்ட பணிகளாக துளிர் இல்ல மாண்வர்களூக்கான அறிவியல் படங்கள் திரையிடல், துளிர் இல்ல மாணவர்களுக்கான அறிவியல் நாடக பயிற்சி மற்றும் கம்பம் கிளை அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி குறித்து விவாதிக்கப்பட்டது.. மாவட்ட செயலாளர் வெங்கட், மாநிலச் செயலாளர் தே.சுந்தர் மற்றும் சோமனாதன் சரவணன் உட்பட செயற்குழுஉறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

May 15, 2016

தரமான கல்வி சமமாக வேண்டும் - வேட்பாளர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு சார்பில் தரமான கல்வி சமமாக வேண்டும் எனும் முழக்கத்தோடு மே 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களை சந்தித்து நமது கோரிக்கை மனுக்களை அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களையும் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த பிரச்சார இயக்கத்தில் மாநிலச்செயலர் தே.சுந்தர் மாவட்ட செயலர் வி.வெங்கட் மற்றும் மாவட்ட இணைச்செயலர் தெய்வேந்திரன் கம்பம் கிளைத்தலைவர் ஜி.பாண்டி கூடலூர் கிளைத்தலைவர் சீனிவாசன் கிளை இணைச்செயலர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நமது கோரிக்கைகள் அடங்கிய புதிய ஆசிரியன் மே இதழ் 150 பெறப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது