பகுத்தறிவுச் செயல்பாட்டாளரான நரேந்திர தபோல்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஆகஸ்ட்-20ஐ தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிக்க அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கம் அறைகூவல் விடுத்தது. எனவே அந்நாளை அறிவியல் மனப்பான்மை தினமாக அறிவிக்க அரசுகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட்த்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜெகநாதன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்..
முதல் பக்கம்
Aug 26, 2019
May 23, 2019
தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்டம்
உத்தமபாளையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை அமைப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கிளை அமைப்பாளர் ச.அருணா வரவேற்றார். மாநில செயலாளர் தே.சுந்தர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்நோக்கங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் கிளை தலைவராக சி.முகமது இப்ராகீம், செயலாளராக செ.முத்துப்பாண்டி, பொருளாளராக இரா.சத்யா, துணைத் தலைவர்களாக ஜாக்குலின், வளை யாபதி, இணை செயலாளர்களாக அருணா, ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட இணைசெயலாளர் ஜெகநாதன் வாழ்த்தினர். உத்தமபாளையம் பகுதியில் விஞ்ஞானிகள் சந்திப்பு, மந்திரா தந்திரமா போன்ற நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
நன்றி: தினமலர் நாளிதழ்
Sep 1, 2018
சுருளிப்பட்டியில் துளிர் திறனறிதல் தேர்வு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (செப்.1) மாநிலம் முழுவதும் சுமார் 60,000 குழந்தைகள் வரையிலும் பங்கேற்ற துளிர் அறிவியல் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இளநிலை, உயர்நிலை மற்றும் முதுநிலை ஆகிய மூன்று நிலைகளில் குழந்தைகளின் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த அறிதலைச் சோதிக்கும் விதமான கேள்விகள் இடம்பெற்றன. தேனி மாவட்டத்தில் 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1000 குழந்தைகள் 11 மையங்களில் தேர்வு எழுதினர். நமது கம்பம் பகுதியில் சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று முற்பகல் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயரூபி, அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் துணைத்தலைவர் பாண்டியன், செயலாளர் சுரேஷ்கண்ணன் மற்றும் அறிவியல் ஆசிரியர் செந்தில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
Subscribe to:
Posts (Atom)