முதல் பக்கம்

Feb 21, 2012

கிராமக்கல்விக்குழு பயிற்சியும் பரிசீலனையும்..

சமுதாயப் பங்களிப்பு என்ற மைய நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் கல்வி இயக்கமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து கடந்த வாரம் கிராமக் கல்விக்குழு பயிற்சியினை தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் வருகை தந்த 6 பேர் வீதம் சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு அளித்தது. -பிப்ரவரி,20-அன்று அப்பயிற்சி குறித்து பரிசீலனைக்கூட்டம் கம்பத்திலுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.. கருத்தாளர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களின் அடிப்படையில்...

சென்னையில் கடந்த ஜனவரி,24,25 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஆனந்தராஜ், ஆசிரியர் பயிற்றுநர் முத்துராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனவரி,27ஆம் தேதி தேனி முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதுமிருந்து உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். கிராமக்கல்விக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதியும் கலந்துகொண்டார். நமது அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன் குமார மங்கலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனை அடுத்து ஜனவரி,30,31 தேதிகளில் தேனி வட்டார வளமையத்தில் மாவட்ட அளவில் வட்டாரக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர் ஸ்ரீதேவி அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கிச் சென்றார். மாவட்டக்கருத்தாளர்கள் தே.சுந்தர், ஆனந்தராஜ், முத்துராஜ் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

பிப்ரவரி,1,2 தேதிகளில் வட்டார அளவிலான பள்ளித்தொகுப்பு மைய கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார அளவிலான பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்களோடு இணைந்து அறிவியல் இயக்க நண்பர்கள் டி.கருணாநிதி-ஆண்டிபட்டி, குமரேசன்-தேனி, வி.ரமேஷ்-பெரியகுளம், ரதன் ஜிந்தாபாத்-மயிலை, ப.ஸ்ரீதர்-போடி, தங்கராஜ்-சின்னமனூர், எஸ்.தேவராஜன்-உத்தமபாளையம், க.முத்துக்கண்ணன்-கம்பம் பயிற்சியளித்தனர். மாவட்டச் செயலாளர்/கருத்தாளர்  தே.சுந்தர் கம்பம், உத்தமபாளையம், தேனி, ஆண்டிபட்டி ஆகிய வட்டாரங்களில் கருத்துரை வழங்கினார்..

பிப்ரவரி 6 முதல் கருத்தாய்வு மைய அளவில் கிராமக்கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி துவங்கியது.. அறிவியல் இயக்க கருத்தாளர்கள்-வி.ரமேஷ்-பெரியகுளம் எட்வர்டு பள்ளி, எஸ்.கார்த்திகேயன் -10வது வார்டு பள்ளி ஆகிய இடங்களுக்கும் சின்னமனூர் தங்கராஜ் அப்பிபட்டி, கருக்கட்டாங்குளம், காலனி, சங்கராபுரம், அய்யம்பட்டி, ஓடைப்பட்டி ஆகிய இடங்களில் நடந்த பயிற்சிகளில் கலந்துகொண்டார். போடி.ஸ்ரீதர் கள்ளர் பள்ளி கிழக்கு, 10வது வார்டு பள்ளி,மேலச்சொக்கநாதபுரம், சிலமலை, ராசிங்காபுரம், 15ஆவது வார்டு  நகராட்சி பள்ளி ஆகிய இடங்களுக்குச் சென்றார். போடி.ராமதாஸ் கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை, கள்ளர் பள்ளி மேற்கு, 7வது வார்டு மற்றும் 10வது வார்டு பள்ளிகளில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துகொண்டார். உத்தமபாளையத்தில் எஸ்.தேவராஜன் பஜார், கரிமேட்டுப்பட்டி, இராயப்பன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துகொண்டு பயிற்சியளித்துள்ளார். தேனியில் குமரேசன் லட்சுமிபுரம் பள்ளியில் கலந்துகொண்டார். கம்பம் முத்துக்கண்ணன் மேலக்கூடலூர், க.புதுப்பட்டி, சுருளிப்பட்டி, கம்பம்-பார்க், கம்பம்-மெயின், எம்.எ.புரம் ஆகிய இடங்களுக்கும் இராஜசேகர் கம்பம்-சுங்கம், சுருளிப்பட்டி, க.புதுப்பட்டி, கம்பம்-மெயின், மேலக்கூடலூர் ஆகிய இடங்களுக்கும் கோபு பிரசன்னா மேலக்கூடலூர், சுருளிப்பட்டி, க.புதுப்பட்டி, கீழக்கூடலூர் ஆகிய இடங்களுக்கும் வெங்கடேசன் கே.கே.பட்டி, சின்னமனூர் காலனி, கருக்கட்டாங்குளம், முத்துலாபுரம் ஆகிய இடங்களுக்கும் சென்று பயிற்சியளித்தனர். மாவட்டக் கருத்தாளர் தே.சுந்தர் சுருளிப்பட்டி, முத்துலாபுரம் ஆகிய இடங்களில் கலந்துகொண்டு பயிற்சியளித்தார்.

பரீசலனையின் போது கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சியினை விட சிறப்பான அளவில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் பயிற்சியின் பெரும்பாலான நேரத்தை அறிவியல் இயக்க நண்பர்களே நடத்தியுள்ளனர்-மிகச் சிறப்பாக நடத்தியுள்ளனர். மக்களும் பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். பெருமாபாலான இடங்களில் மதியத்தோடும் சில இடங்களில் மாலை 4 மணி வரையிலும் பயிற்சி நடைபெற்றுள்ளது. ஆசிரியர் பயிற்றுநர்களும் பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் முயற்சி செய்திருந்தால் மக்களை இன்னும் கூடுதலாக பங்கேற்க வைத்திருக்கலாம். கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையான பள்ளிகளில் மக்கள் பங்கேற்பு-பள்ளி மேலாண்மைக்குழு-பள்ளி முழு வளர்ச்சித் திட்டம் ஆகிய அம்சங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.. மாநிலத்தில்-மாவட்டத்தில்-வட்டார அளவில்- கருத்தாய்வு மைய அளவில் பயிற்சியின் மைய நோக்கமும் செயல்பாடுகளும் சிதைந்து கொண்டே வந்ததையும் காண முடிந்தது. பயிற்றுநர்களும் ஆசிரியர்களும் இதுவும் ஒரு பயிற்சி என்ற மனநிலையில் இருந்து மாறி-மக்களை பள்ளியின்பால் ஈர்ப்பதற்கும்-பள்ளிக்குத் தேவையான வளங்களைப்பெற்று வளர்ச்சியடையச் செய்வதற்கும்-மாணவர் எண்ணிக்கையை உயர்த்தவும்-தங்கள் பணியிடங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் ஏற்பாடு என்ற புரிதலோடு செயல்பட்டால் இந்த பயிற்சி  மட்டுமல்ல எந்த பயிற்சியும் பயன்தரும். அரசுப்பள்ளிகள் என்பவை மக்கள் பள்ளிகளே.. அவர்களின் பங்கேற்பின் மூலமே அவற்றைக் காப்பாற்ற முடியும்.. அவர்களை உள்ளே விட்டால் தங்களுக்குத் தொந்தரவு, ஆபத்து என்று ஆசிரியர்கள் கருதும்வரை அது சாத்தியமாகாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே கருதுகிறேன்..
தேனி.தே.சுந்தர்


Feb 17, 2012

பெரியகுளத்தில் கருத்தரங்கம் மற்றும் வான்நோக்கல் நிகழ்ச்சி

பெரியகுளம், தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பில் 2012,பிப்ரவரி,1 அன்று டிரையம்ப் நடுநிலைப்பள்ளியில் வானவியல் தொடர்பான கருத்தரங்கமும் எட்வர்டு பள்ளியில் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநிலத் துணைத்தலைவரும், கருத்தாளருமான பேரா.சோ.மோகனா அவர்களின் அனுபவப்பகிர்வு...
  • பெரியகுளம் அறிவியல் இயக்க நண்பர்களுக்கும அங்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும்  சிறப்பான பாராட்டுக்கள்..
  • அந்த பள்ளி அரசு நடுநிலைப் பள்ளி என்பதும், அவர்களுக்குத்தான் அறிவியல் இயக்க செய்திகள் சென்றடைவதும சிறப்பும், மகிழ்ச்சியுமாகும்.
  • இன்னொரு சிறப்பு தகவல் என்னவென்றால், பெரியவர்களே குறிப்பு எடுக்கத் தயங்கும் காலகட்டத்தில், அந்த பிஞ்சுகள் நோட்டில், நான் பேசும் தகவல்களை குறிப்பு எடுத்தனர். 
  • சுமார் 400 மாணவர்கள் என்றார் தலைமை ஆசிரியரும், பெரியகுளம் அறிவியல் இயக்க செயலருமான திருமிகு.ராம்சுந்தர். அனைவரும் கட்டுக்கோப்புடன், ஈடுபாட்டுடன் PPT  ஐ கவனமாக   கவனித்தனர் என்பது ஆச்சரியமான விஷயமே. 
  • வானவியல் கதையைப் பேசி முடித்ததும், நிறைய வினாக்கள் கேட்டனர். ஆனால் 8 ம வகுப்புகுட்பட்ட  குழந்தைகளே. 
  • நான் வானில் படம் எடுத்து இணைத்திருந்த நிலா, வியாழன்,வெள்ளி படங்களைப் பார்த்து இந்த கோள்களை ராக்கெட்டில் சென்றா. அல்லது விமானத்தில் சென்று படம் எடுத்தீர்களா என்றும் கேட்டனர். 
  • வீட்டுக்குச் செல்லும்போது, ஒவ்வொருவரும் நெருங்கி வந்து மெதுவாக, ரொம்ப நல்லா இருந்துச்சி மிஸ் , interesting ஆ இருந்ததுச்சி, ரொம்ப நன்றி, ரொம்ப தேங்க்ஸ், திரும்ப வருவீங்களா என்றனர்.. அரசுப் பள்ளி குழந்தைகள் . 
  • நலல விஷயங்களை, நன்றி சொல்லும் உணர்வு ஏற்படும்படி, ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு சொல்லிதந்திருக்கின்றனர்.  கற்றுக்கொடுத்த ஆசான்களுக்கு,  பாராட்டுக்கள்.
  • மனசுக்கு ரொம்பவே நிறைவாக இருந்தது. அவர்களின் செயலும், ஈர்ப்பும், கட்டுப்பாடும், ஆர்வமும். 
  • அதன்பின், மதுரை அறிவியல் இயக்க,சிறகு பொறுப்பாளர் திருமிகு. நாராயணசாமி உதவியுடன் இரவு வான் நோக்கல்  நிகழ்வு எட்வர்ட் நடுநிலைப் பள்ளியில்சிறப்பாக  நடந்தது. 
  • நாராயணசாமி தொலைநோக்கி மூலம் வியாழன்,வெள்ளி கோள்களையும், நிலாவையும் காண்பித்தார். 
  • நான் வானில் தெரியும் விண்மீன்களைக் பச்சை லேசர் உதவியுடன் காண்பித்து அவற்றின் பின்னணி, தொலைவு, வெப்பம், அளவு போன்றவற்றை சொன்னேன்.
  • பொதுவாக வானில் 20 பிரகாசமான விண்மீன்கள் உண்டு.அவற்றில் 9 விண்மீன்களை 01 .02 .12 அன்று இரவு பார்த்தோம். 
  • வேட்டைக்காரன்,பெரிய நாய், சிறிய நாய், ரிஷப விண்மீன் படலம், மிதுன விண்மீன் படலம், கார்த்திகை கன்னிகள், அகஸ்தியர், திருவாதிரை, மிருகசீரிஷம், ரைகல், பெல்லாட் ரிக்ஸ்,லீபஸ்,பெரும் சதுரம் எல்லாம் பார்த்தோம். 
  • நிலவின் ஒளி அதிகம் இருந்ததால், மேஷம் தெரியவில்லை.
  • எத்தனை பேர் வந்தனர் தெரியுமா? யாரும் மயக்கம் போட்டு விழுந்துவிட வேண்டாம்.சுமார் 900 பேர் வந்தனர். பெற்றோரும்,ஆசிரியர்களும் வந்தனர்.
  • அனைவரையும், கட்டுக்கோப்புடன் தொலை நோக்கி பார்க்க வைத்தார், திரு. ராம்சுந்தர் அவர்கள்.சபாஷ் சாரே  ..!
  • அவருக்கு சிறப்பான பாராட்டுக்கள். நண்பரே, உங்களின் உதவியுடன், இயக்கம் மேலும் செழிக்கும்,,உங்களின் குழந்தைகளும்,, எளிதில் வளையக்கூடியவர்களாய்  இருக்கின்றனரே..குழந்தைகளின் நெஞ்சில் வாழ்கிறீர்கள் என்பது நிதர்சனமாய் தெரிந்தது..இதோ பிடியுங்கள்..இன்னும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை.. தங்களின் குழுவுக்கும், மணிகண்டன்,ஆண்டவர், ஆனந்த கிருஷ்ணன் போன்றோருக்கும்.   மற்றும் அங்கிருந்த அனைவருக்கும்..
  • நண்பர்களே.. மீண்டும், மீண்டும் மிக்க நன்றியும், மகிழ்ச்சிப் பகிர்வும் பெரியகுளம் டீமுக்கும், அவர்களை வழி நடத்தும் தேனி மாவட்ட செயலர் சுந்தருக்கும். 
  • நன்றி..நன்றி..நன்றி..மனதுக்கு மகிழ்வும், நிறையும் தந்தமைக்கும், அன்பான, ஆர்வம் மிக்க கட்டுக்கோப்பான குழந்தைகளை உருவாக்கியதற்கும்   .
என்றும் அன்புடன்,
மோகனா

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

நாட்டுநலப்பணித்திட்டமுகாமில் கருத்தரங்கம்


இன்று-பிப்ரவரி,17,2012- சுருளிப்பட்டி தெற்கு சமுதாயக்கூடத்தில் உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் முனைவர். மு.முகமது ஷெரீப் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவாஜி கருத்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் அறிவியல் பாடத்திற்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் இடையிலான வேறுபாட்டை செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். திட்ட அலுவலர் எஸ்.முகமது ராவுத்தர் நன்றி கூறினார். கல்லூரி மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்..--

SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI