ஆகஸ்ட்,26,2007 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் போடி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ்.எம்.சௌகத் அலி, பேரா.ஆர்.பாண்டி, பேரா.எஸ்.ராஜா, ஹ.ஸ்ரீராமன், எஸ்.சிவாஜி, தே.சுந்தர், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல் பக்கம்
Aug 26, 2007
Aug 19, 2007
கம்பம் கிளைச் செயற்குழுக் கூட்டம்
ஆகஸ்ட்,19,2007 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச்செயற்குழுக் கூட்டம் நாராயணத்தேவன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மா.வைரமுத்து தலைமை வகித்தார். நடைபெற்ற பணிகள் குறித்து கிளைச் செயலாளர் தே.சுந்தர், எதிர்காலப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஹ.ஸ்ரீராமன் ஆகியோர் பேசினர். 11 பேர் கலந்து கொண்டனர்.
Aug 13, 2007
14வது மாநில மாநாடு-விழுப்புரம்
ஆகஸ்ட்,10,11,12 தேதிகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 14வது மாநில மாநாடு விழுப்புரம் வி.வி.ஆறுமுகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேனி மாவட்டத்திலிருந்து மாநில மாநாட்டிற்கான பிரதிநிதிகளாக ஹ.ஸ்ரீராமன், எஸ்.சரவணன், மு.பாலகிருஷ்ணகுமார், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Aug 4, 2007
6வது மாவட்ட மாநாடு-ஆகஸ்ட்,4,2007
தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆறாவது மாவட்ட மாநாடு, போடி தென்றல் நகர், சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேரா.கே.பத்ருதீன் தலைமை வகித்தார். போடி ஒன்றிய கிளைச்செயலாளர் மு.பாலகிருஷ்ணகுமார் வரவேற்றார். இயக்கத்தின் செயல்பாட்டறிக்கையை மாவட்டச் செயலாளர் ஹ.ஸ்ரீராமன் சமர்ப்பித்துப் பேசினார். மாவட்டப் பொருளாளர் வி.பழனிராஜ் வரவு செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் முனைவர்.எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் பூமி வெப்பமடைதல் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.அ.அமலராஜன், பி.எஸ்.என்.எல். துணைக்கோட்ட அதிகாரி திருமிகு.என்.ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவாஜி நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள்: மாவட்டத் தலைவராக பேரா.கே.பத்ருதீன், மாவட்டச் செயலாளராக ஹ.ஸ்ரீராமன், மாவட்டப் பொருளாளராக எஸ்.சிவாஜி ஆகியோரும் மாவட்டத் துணைத் தலைவர்களாக பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, பேரா.எஸ்.ராஜா, கே.ராமகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர்களாக எஸ்.சரவணன், ராம்குமார், பேரா.மு.முகமது ஷெரீப், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக டி.ராஜேந்திரன்-ஆண்டிபட்டி, வி.பழனிராஜ்-போடி, வி.எஸ்.நாகராஜ்-பெரியகுளம், தே.சுந்தர்-கம்பம், மு.பாலகிருஷ்ணகுமார்-போடி ஆகியோரும் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக பேரா.அஜ்மீர் காஜா-போடி, மா.வைரமுத்து-கம்பம், இராஜமகேந்திரன்-ஆண்டிபட்டி, மலைச்சாமி-தேனி, பிரேம்குமார்-தேனி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக ஜூலை,19,2007 அன்று சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் கம்பம் வட்டாரக்கிளை மாநாடு நடைபெற்றது. மாவட்டச் செயலாலர் ஹ.ஸ்ரீராமன் கலந்துகொண்டார். கிளைத்தலைவராக பிரபு அலெக்ஸாண்டர், செயலாளராக தே.சுந்தர், பொருளாளராக லோகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் ஜெயமுருகன், மோகன்குமாரமங்கலம், செந்தில்வேல், நாகரத்தினம், மா.ராஜேஷ், ஓவியாதனசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.
போடி வட்டாரக்கிளை மாநாட்டில் தலைவராக சரவணன், செயலாளராக மு.பாலகிருஷ்ணகுமார், பொருளாளராக ரட்சகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச்செயலாளர் ஹ.ஸ்ரீராமன், எஸ்.சிவாஜி உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.
Jul 19, 2007
கம்பம் வட்டாரக்கிளை மாநாடு
ஜூலை,19,2007 அன்று சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் கம்பம் வட்டாரக்கிளை மாநாடு நடைபெற்றது. மாவட்டச் செயலாலர் ஹ.ஸ்ரீராமன் கலந்துகொண்டார். கிளைத்தலைவராக பிரபு அலெக்ஸாண்டர், செயலாளராக தே.சுந்தர், பொருளாளராக லோகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் ஜெயமுருகன், மோகன்குமாரமங்கலம், செந்தில்வேல், நாகரத்தினம், மா.ராஜேஷ், ஓவியாதனசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)