முதல் பக்கம்

Mar 25, 2013

அன்னஞ்சி-உயர்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச்,22 அன்று மாலை தேனி-அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினார். ஆசிரியர் சுமன் நன்றி கூறினார். சுமார் 200 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

சர்வதேச தண்ணீர் தின கருத்தரங்கம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச்,22 அன்று பிற்பகல் தேனி-ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மீனாட்சி தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் நன்றி கூறினார். சுமார் 100 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.
 
 

போடியில் தண்ணீர் தினக் கருத்தரங்கம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போடி வட்டாரக்கிளையின் சார்பில் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச்,22 அன்று முற்பகல் போடி பங்கஜம் நடுநிலைப் பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் தண்ணீரின் முக்கியத்துவம், இன்றைய பிரச்சனைகள் குறித்து கருத்துரை வழங்கினார். போடி கிளையின் செயலாளர் ப.ஸ்ரீதர் நன்றி கூறினார். இயற்கை வளங்களைக் காப்பதன் அவசியம் குறித்து மாணவர்களின் நாடகம் அரங்கேறியது. 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

பெரியகுளம்-வனதினக் கருத்தரங்கம்





உலக வன நாளை (மார்ச்,21) முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வளர்ச்சி உபகுழுவின் சார்பில் மார்ச்,21 பிற்பகல் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வனதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க ஆர்வலர் ஜெ.மகபூப் பீவி ஆசிரியர் தலைமை வகித்தார். வளர்ச்சி உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பேரா.சோ.மோகனா அவர்கள் வனதினக் கருத்துரை வழங்கினார். அதில் மேற்குத்தொடர்ச்சி மலையின் சிறப்புகள், உயிர்ச்சூழல் குறித்துப் பேசினார். அறிவியல் ஆசிரியர் எஸ்.பிரேமா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்துகொண்டனர். அனைவரும் வனப்பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

வனதினக் கருத்தரங்கம்



உலக வன நாளை (மார்ச்,21) முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வளர்ச்சி உபகுழுவின் சார்பில் மார்ச்,21 முற்பகல் தேனி-அன்னஞ்சி அரசு கள்ளர் உயர் நிலைப்பள்ளியில் வனதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சுமன் வரவேற்றார். மாவட்டக் கல்வி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முனைவர்.வனராசா இதயகீதன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பேரா.சோ.மோகனா அவர்கள் வனதினக் கருத்துரை வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை வளர்ச்சி உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன் ஒருங்கிணைத்தார்.

Mar 22, 2013

சூரியனின் சாவும், பிரபஞ்சத்தின் பிறந்த தினமும்

உயிர்கள் – உருவாவது, வளர்வது, நகர்வது, வயதாவது, சிதைவது இறப்பது போலவே வான்பொருட்களும் முக்கியமாக விண்மீன்களும் பிறந்து, வளர்ந்து, தேய்ந்து, வயதாகி இறந்து போகின்றன. நாம் தான் இவற்றைக்கண்டு கொள்வதே இல்லை, நமக்குத் தெரிவதும் இல்லை. உலகிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் ஆக்கம், வளர்ச்சி, அழிவு உண்டே. நம் குடும்பத் தலைவனான சூரியன் இன்னும் 600 கோடி ஆண்டுகளில் இல்லாமல் போகப் போகிறது என்பது தெரியுமா? நம் பூமியும் சூரியனைச் சார்ந்துள்ள செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனியெல்லாம் எங்கே போகும்? அப்போது அது சுற்றுமா, சுற்றாதா? அது நடக்க சுமார் 700 கோடி தலைமுறைகள் ஆகலாம், நம் வால் போக (அதாவது நம் முன்னோரான குரங்காரிடமிருந்து நமது வால் போன கதைதாங்க) சுமார் அரை கோடி ஆண்டுகள் ஆயினவே. 600 கோடி ஆண்டுகளில் மனிதன் என்னவாக மாறியிருப்பானோ? இதற்கிடையில் சூரியனின் கிழட்டுப்பருவம் வந்த பின் சக்தி இல்லாத நிலையறிந்தும் விஞ்ஞானிகள் நம்மை வேறு ஒரு சூரிய மண்டலத்திற்கு கொண்டு செல்லலாம்.

பிரபஞ்சத்தின் பிறந்த தினம்

 பிரபஞ்சம், இது ஒரு தனிமைமிக்க இடம் தான். பிரபஞ்சவெளி மிகமிகப்பெரியது, சூனியமானது. பிரபஞ்சம் இடைவிடாமல் விரிந்துகொண்டே செல்கிறது. இது எப்போது பிறந்தது? பிறந்திருக்கவே வேண்டியது இல்லை என சில வானியலாளர்கள் கருதுகின்றனர். பிரபஞ்சத்தின் உருவம் எப்படி? நீங்கள் ஒரு கண்ணாடி முன் நிற்கிறீர்கள். அதனுள்ளே உங்கள் உருவம் தெரிகிறது. அதற்குள் இன்னொரு கண்ணாடி. அங்கும் உங்கள் உருவம். அதற்குள்ளும் இன்னொரு கண்ணாடி. இன்னொரு கண்ணாடி, இப்படியாக போயக்கொண்டே இருந்தால்... என்ன தலை சுற்றுகிறதா நண்பரே! இதுதான் பிரபஞ்சம். ஒவ்வொரு நாளும் விண்மீன்களில் உருவெடுக்கும் ஹைட்ரஜன் பிரபஞ்சத்தை நிறைத்துக்கொண்டேயிருக்கிறது. இது விண்மீன்களுக்கிடையே பரவுகிறது. இடை இடையே அண்டங்கள் வயதாகி இறக்கின்றன; விலகியும் செல்கின்றன; தொடர்ந்து புதிய அண்டங்கள் பிறந்துகொண்டேயிருக்கின்றன பில்லியன் கணக்கில். என்ன சொல்லலாம் இதை? ஒவ்வொரு நாளும் பிரபஞ்சத்தின் பிறந்த நாள் தான்..
-Prof.Mohana

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Mar 18, 2013

துளிர் இல்லக் குழந்தைகளுக்கு பாராட்டு



மார்ச்,10,2013 அன்று காலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திறனறிதல் தேர்வு எழுதிய துளிர் இல்லக் குழந்தைகளுக்கு பாராட்டு விழா கூடலூரில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் வாழ்த்திப்பேசினார். துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.