தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப்பொதுக்குழு கூட்டம் அக்டோபர்,7,2012 அன்று மாலை அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார்.
நடைபெற்ற வேலைகள், எதிர்காலத்திட்டமிடல், மாநிலப்பொதுக்குழு பங்கேற்பு ஆகிய தலைப்புக்களில் விவாதிக்கப்பட்டது. அஞ்சலித்தீர்மானம் மற்றும் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிளைவாரியாக செயலறிக்கையினை முறையே கம்பம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி செயலாளர்களும் உபகுழு அறிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற செயல்பாடுகளின் தொகுப்பினை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்தார்.
வி.வெங்கட்ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (கல்வி), எஸ்.சேசுராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (சமம்), மு.மணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (வளர்ச்சி), ஹ.ஸ்ரீராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (வெளியீடு), க.முத்துக்கண்ணன், கிளைச்செயலாளர், கம்பம், எஸ்.குமரேசன், கிளை அமைப்பாளர், உத்தமபாளையம், மொ.தனசேகரன், கிளைப்பொருளாளர், கம்பம், ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், கிளைத்தலைவர், பெரியகுளம், எஸ்.ராம்சங்கர், கிளைச்செயலாளர், பெரியகுளம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள், எஸ்.மனோகரன், க.நந்தகுமார், மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன், மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment