முதல் பக்கம்

Mar 17, 2013

ஆசிரியர் இணையக்கூட்டம்




தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு சார்பில் ஆசிரியர் இணையக்கூட்டம் மார்ச்,8 மாலை 4 மணிக்கு பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றுப் பேசினார். கல்வியாளர் மொ.பாண்டியராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவெங்கட்ராமன் ஆகியோர் ஆசிரியர் இணையத்தின் அவசியம் குறித்துப் பேசினர். மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் ஆசிரியர்களின் வாசிப்பு மேம்படவேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். ஆசிரியை மகபூப் பீவி குழந்தைகள் அறிவியல் மாநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கிளைச்செயற்குழு உறுப்பினர் .ரமேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment