முதல் பக்கம்

Mar 17, 2013

மாவட்டச் செயற்குழு கூட்டம்

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஜூன், 3,2012 அன்று மாலை தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுக்குழு கூட்டம், தொண்டர்கள் பயிற்சி முகாம், மாநிலச் செயற்குழு மீள்பார்வை, குழந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் இல்லங்கள், வெள்ளி இடைநகர்வு ஆகிய தலைப்புக்களில் விவாதிக்கப்பட்டது. குழந்தைகள் அறிவியல் மாநாடு- மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மு.தெய்வேந்திரன், ஆய்வு ஒருங்கிணைப்பாளராக முனைவர்.எஸ்.கண்ணன், பயிற்சி ஒருங்கிணைப்பாளராக விவெங்கட்ராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வளர்ச்சி உபகுழு ஒருங்கிணைப்பாளராக மு.மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மு.தெய்வேந்திரன், மு.மணிகண்டன், க.முத்துக்கண்ணன், வி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment