முதல் பக்கம்

Mar 17, 2013

கல்விக்கருத்தரங்கம்





தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- கல்வி உபகுழு சார்பில் மார்ச்,16,2013 அன்று முற்பகல் ஆண்டிபட்டி நாடார் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சாமுவேல் மோகன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் இயக்க அறிமுக உரையாற்றினார்.  



அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன், மாவட்டக் கல்வி வளர்ச்சி பாதுகாப்பு நலச்சங்க மாவட்டச்செயலாளர் முனைவர்.வனராசா இதயகீதன், தமுஎகச ஆசிரியர் கிளைச்செயலாளர் .மோகன் குமாரமங்கலம், பள்ளி இணைச் செயலாளர் எஸ்.மாதவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்



 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப்பொருளாளரும் கல்வியாளருமாகிய எஸ்.சுப்ரமணி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்வி உபகுழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் நன்றி கூறினார். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த சுமார் 80 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

No comments:

Post a Comment