தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஜூன், 10,2012 அன்று மாலை தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். நடைபெற்ற வேலைகள், மாவட்டப் பொதுக்குழு கூட்டம், குழந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் இல்லங்கள், அறிவியல் திருவிழா 100/100, வினாடி-வினா, இயக்கச்சுவடுகள், உபகுழுப் பணிகள் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன், மாவட்டச் செயற்குழு நண்பர்கள் மு.தெய்வேந்திரன், அ.முகமது ஆசிக், க.சரவணன், சி.பிரகலாதன், வி.வெங்கட்ராமன், க.முத்துக்கண்ணன், ஆர்.அம்மையப்பன், எஸ்.ராம்சங்கர், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment