அன்புடையீர்
வணக்கம்.
அறிவியல்… அறிவியல்… அறிவியல்… என தனது அனைத்துச் செயல்பாடுகளிலும் அறிவியல் பரப்புவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வ அமைப்பே தமிழ்நாடு அறிவியல் இயக்கமாகும்..
விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், படித்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என ஆர்வமுள்ள அனைவரும் உறுப்பினராகலாம். கருத்தாளராக, ஒருங்கிணைப்பாளராக, அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளராக ஆர்வமுள்ள யாரும்/நீங்களும் செயல்படலாம்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு, துளிர் அறிவியல் வினாடி-வினா, துளிர் அறிவியல் திருவிழாக்கள், எளிய அறிவியல் பரிசோதனைகள், கருவிகள் செய்வதற்கான பயிற்சிகள், மெட்ரிக் மேளாக்கள் என ஆண்டு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
அத்துடன் புத்தக விற்பனை என்பது வர்த்தகம் அல்ல! மாறாக மக்களின் அறிவைத் துலங்கச் செய்யும் அற்புதச் செயல்.. சேவை…! என்னும் இறையன்பு அவர்களின் சிந்தனைக்கேற்ப நல்ல பல அறிவியல் செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக சிறந்த புத்தகங்களையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டு வருகின்றது. அதற்காக UGC-ன் ஹரிஓம் விருதையும் பெற்றுள்ளது.
நண்பர்களே… ஒரு நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம் என்கிறார் ஐசக் நியூட்டன்! புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது என்கிறார் பிளேட்டோ.! இருட்டறைக்குள் இருக்கின்ற நமக்கு வெளிச்சத்தை விநியோகிப்பவை புத்தகங்களே என்கிறார் இறையன்பு! உங்கள் வீட்டை அழகுபடுத்துவதற்கு புத்தகங்களை விட சிறந்த பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார் அறிஞர் கார்லைல். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கித்தருகின்ற மிகச் சிறந்த பரிசு புத்தகங்களே என்கிறார் சர்ச்சில்..!
புத்தகங்கள்…..
இதயங்களை இணைக்கின்ற நட்புப்பாலம்!
புத்தகங்கள்….
அறியாமை இருளை விரட்டும் சூரியன்!
புத்தகங்கள்….
அறிவுத்தாகத்தை தணிக்கும் அதிசய நீரூற்று!
புத்தகங்கள்….
அண்டவெளிகள் கடந்தும் ஆழ்கடல் நுழைந்தும் நம்மை
அழைத்துச் செல்லும் விநோதக் கப்பல்கள்!
வாசிப்போம்! அதுவே மனிதனின் சுவாசிப்பு!
No comments:
Post a Comment