முதல் பக்கம்

Nov 30, 2015

தேனி மாவட்ட குழந்தைகள் தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு

23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.27-29) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.. அதில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இளநிலை, முதுநிலை இரு பிரிவுகளில் தமிழகம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன. 

அதில் நம்முடைய தேனி மாவட்டத்திலிருந்து பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் கணிதமேதை சகுந்தலாதேவி துளிர் இல்ல மாணவி எ.பி.ஆர்த்திகா தலைமையிலான குழுவினரின் “நலிந்துவரும் தென்னை விவசாயத்தில் காலநிலையின் தாக்கம்” என்ற ஆய்வும் ஒன்று.. இக்குழந்தைகளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவரும் அனைவரின் பாசத்திற்குரிய விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் வருகின்ற 27-31 தேதிகளில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று தங்களது ஆய்வறிக்கையினைச் சமர்ப்பிக்க உள்ளனர்.. நம்முடைய நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்குவர்..



தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொள்ளக்குடிய குழந்தை விஞ்ஞானிகளையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் எஸ்.ஞானசுந்தரி மற்றும் எம்.கே.மணிமேகலை ஆகியோரையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் வி.வெங்கட் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகிறோம்..

Nov 15, 2015

23ஆவது குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகியவற்றுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக்கூடிய 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நவ.15 அன்று போடி பங்கஜம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் போடி ஒன்றியக் கிளைத் தலைவர் எஸ்.குமரேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அம்மையப்பன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆண்டிபட்டி, கம்பம், போடி, பெரியகுளம், கடமலைக்குண்டு, தேனி என மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்டு பள்ளி, துளிர் இல்லக்குழந்தைகள் தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். பேரா.சி.கோபி, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எஸ்.சேசுராஜ் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் இல.நாராயணசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.முத்துலட்சுமி, மா.வீரையா, போடி சி.பி.ஏ.கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் பேரா.ஆர்.பாண்டி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கலந்துகொண்டு ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்த அனைத்துக் குழந்தைகளுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாநிலச் செயலாளர் தே.சுந்தர் நிறைவுரையாற்றினார். போடி கிளைச் செயலாளர் ப.ஸ்ரீதர் நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மு.தெய்வேந்திரன், எம்.கே.மணிமேகலை, கொ.ஜெகதீசன், ஜி.பாண்டி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகள்:

தமிழ் முதுநிலை பிரிவில் லோயர்கேம்ப் சுப்ரமணிய சந்திரசேகர் துளிர் இல்ல மாணவர் பொ.தினேஷ்குமார் தலைமையிலான குழுவினரின் “மானாவாரி விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளும் பருவநிலை மாற்றமும்” என்ற ஆய்வும் தேனி இலட்சுமிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் எம்.கோகுலக் கண்ணன் தலைமையிலான குழுவினரின் “டெங்கு காய்ச்சல்” பற்றிய ஆய்வும் தும்மக்குண்டு அரசு உயநிலைப்பள்ளி மாணவி கா.ரோகரஞ்சனி தலைமையிலான குழுவினரின் “ காலநிலை மாற்றமும் மூலவைகை ஆற்றின் போக்கும்” என்ற ஆய்வும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.

தமிழ் இளநிலை பிரிவில் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளி மாணவர் எஸ்.முகமது வாஹித் தலைமையிலான குழு மேற்கொண்ட “இன்றைய விவசாயத்தில் நீர்ப்பாசனமுறையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்” என்ற ஆய்வும் டி.வாடிப்பட்டி சகுந்தலாதேவி துளிர் இல்ல மாணவி எ.பி.ஆர்த்திகா தலைமையிலான குழுவினரின் “நலிந்துவரும் தென்னை விவசாயத்தில் காலநிலையின் தாக்கம்” என்ற ஆய்வும் போடி ஒன்றியம் முந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் க.அசோக் தலைமையிலான குழுவினரும் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.


தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக்குழுவினர் நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 27,28,29 தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பிக்க உள்ளனர்.. மாநிலம் முழுவதுமிருந்து கலந்துகொள்ளும் சுமார் 250 ஆய்வுகளில் சிறந்த 30 ஆய்வுகள் டிசம்பர் 27-31 தேதிகளில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெறும் தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படுவர். தேசிய அளவில் கலந்துகொள்ளும் ஆய்வுக்குழு மாணவர்களுக்கு குழந்தை விஞ்ஞானி விருது வழங்கப்படும்..

Oct 24, 2015

எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு !! தேனி ஆசிரியர்கள் சாதனை !!

தேசிய அளவில் கடந்த 2003 முதல் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புக்களால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக 'செயல்பாடுகளின் மூலம் அறிவியல் கற்றல்,' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது. துணைப் கருப்பொருள்களாக செலவில்லாத மற்றும் புதுமையான கற்றல் கற்பித்தல் கருவிகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை பள்ளிகளில் இருந்து சமூகத்திற்கு கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள், சுயசார்பிற்கான அறிவியல், புதுமையான மதிப்பீட்டு உத்திகள், புதுமையான அறிவியல் தொழில்கல்வி ஆகியவை அறிவிக்கப்பட்டன.

இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டியில் நடுநிலை,உயர்நிலை,மேல்நிலை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள், ஆசிரிய பயிற்றுனர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டன.தேசிய அள்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டன.இதில் தமிழக அளவில் 14 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்ப்ட்டன. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை எம்.கே.மணிமேகலை அவர்களது கணிதம் கற்பித்தல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையும் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் பி.சங்கர நாராயணன் அவர்களது ஆய்வுக்கட்டுரையும் தேசிய அளவில் தேர்வாகி உள்ளது. வருகிற டிசம்பர் 17,18,19.,2015 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற உள்ள தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டில் இருவர்களும் தங்களது ஆய்வுக்கட்டுரையை நேரடியாக சமர்ப்பிக்க உள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் தேனி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் மாவட்டப் பொருளாளர்.எஸ்.ஞானசுந்தரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..

 
வி.வெங்கட்- மாவட்டச் செயலாளர்
அறிவியல் இயக்கம் தேனி,
தொடர்புக்கு: 9488683929

Aug 15, 2015

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின போட்டிகள்

கூடலூர், :ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலை ஆக்கத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், உலக ஒற்றுமைக்காகவும் மட்டுமே பயன்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: "அணுயுத்தத்தால் அகதிகளாய் குழந்தைகள்' என்ற தலைப்பில் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. "அணு ஆயுத குவிப்பால் அமைதி கிட்டுமா' என்ற தலைப்பில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, "அணு ஆயுத போருக்கு அசோகர் சாட்சியானால்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி நடைபெறும். சுயஉதவிக்குழு மற்றும் ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்காக "அணு ஆயுத போட்டியும் அன்றாட உணவுக்கான போராட்டமும்' என்ற தலைப்பில் கதைப்போட்டியும் நடைபெறும். படைப்புகளை ஆகஸ்ட் 22 க்குள் அனுப்பவேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசும் கலந்து கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் பாராட்டு சான்றும் வழங்கப்படும். படைப்புகளை வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சவுடம்மன் கோயில் தெரு, கூடலூர், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். விபரங்களுக்கு 94886 83929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Aug 10, 2015

10வது தேனி மாவட்ட மாநாடு- ஆக.9





தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 10வது தேனி மாவட்ட மாநாடு ஆக.9.2015 அன்று அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முற்பகல் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.ஸ்ரீதர் வரவேற்றார். மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் வி.வெங்கட்ராமன் கடந்த இரண்டாண்டுகள் நடைபெற்ற பணிகள் குறித்து செயலறிக்கையை சமர்ப்பித்துப் பேசினார். பொருளறிக்கையை மாவட்டப் பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி சமர்ப்பித்தார்.




அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. மாநிலக் கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் சமூக மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். சுருளிப்பட்டி க.மா.சிவாஜி தனது அறிவொளி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளராக வி.வெங்கட்ராமன், மாவட்டப் பொருளாளராக எஸ்.ஞானசுந்தரி ஆகியோரும் மாவட்டத் துணைத்தலைவர்களாக மா.மகேஷ், மா.சிவக்குமார், எஸ்.சேசுராஜ் மற்றும் ஜெ.மஹபூப் பீவி ஆகியோரும் மாவட்ட இணைச் செயலாளர்களாக ஆர்.அம்மையப்பன், எம்.கே.மணிமேகலை, மு.தெய்வேந்திரன் மற்றும் எஸ்.ராம்சங்கர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்கள் நாவலாசிரியர் காமுத்துரை மற்றும் ப.மோகன்குமாரமங்கலம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலாளர் அன்பழகன் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர் முத்தரசப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.




பிற்பகல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்ற அரசுப்பள்ளிகளுக்கான பாராட்டு விழாவிற்கு மாவட்டத் துணைத் தலைவர் செ.சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றுப் பேசினார். 


மாநிலச் செயலாளர் தே.சுந்தர் அரசுப் பள்ளிகளைக் கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்து அறிமுக உரையாற்றினார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அப்துல் ஜப்பார் தேனி மாவட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சிபெற்ற 35 அரசுப்பள்ளிகளுக்கான நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 



செயற்குழு உறுப்பினர்கள்: பேரா.ஜி.செல்வராஜ், பேரா.ஜி.கோபி, பேரா.கண்ணன், பேரா.முகமது செரீப், செ.சிவாஜி, ஹ.ஸ்ரீராமன், தே.சுந்தர், பெரோஸ், முத்துக்கண்ணன், ஜஸ்டின் ரவி, காளிதாஸ், சோமநாதன், ஸ்ரீதர், ஜெகநாதன், மனோகரன், ஜெயந்தி, அழகு கணேசன், சூரியபிரகாஷ், ரத்தினசாமி, மோகன், மொக்கராஜ்



பொதுக்குழு உறுப்பினர்கள்: இன்பசேகரன், ஜி.பாண்டி, தனசேகரன், சீனிவாசன், ராஜ்குமார், வளையாபதி, குமரேசன், வன்னியராஜன், போடி குமரேசன், ஜெகதீசன், ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், எஸ்.ஏ.செல்வராஜ், முருகேசன், சதீஸ், ஜான்சன், செந்தில்குமார், கருணாநிதி, பாலமுருகன், கரியன், நாகராஜ், பார்த்தசாரதி

Aug 7, 2015

கம்பம் ஒன்றிய அளவில் துளிர் அறிவியல் வினாடி வினா-2015

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் இன்று ஆகஸ்ட் 7 வெள்ளி அன்று துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான துளிர் அறிவியல் வினாடி வினாப் போட்டி கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது. இரண்டு பிரிவுகளில் இருபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் சார்பாக அறுபது மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் பங்கேற்றனர்.அறிவியல்,தமிழ் மற்றும் பொதுஅறிவு ஆகிய சுற்றுகளின் கீழ் வினாக்கள் கேட்கப்பட்டன.மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற பள்ளிகள்: துவக்க நிலை(ஐந்தாம் வகுப்பு)

முதலிடம்: அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி சுருளிப்பட்டி
இரண்டாமிடம்:கஸ்தூரிபாய் நடுநிலைப்பள்ளி-கே.கே.பட்டி
மூன்றாமிடம்: அரசு ஆரம்பப்பள்ளி-லோயர்கேம்ப


நடுநிலை(6,7,8 வகுப்பு)
முதலிடம்: அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளி- கம்பம்
இரண்டாமிடம்:இலாஹி ஓரியண்டல் அரபி உயர்நிலைப்பள்ளி-கம்பம்
மூன்றாமிடம்: ஸ்ரீ எம்.பி.எம்.உயர்நிலைப்பள்ளி-கம்பம்


பரிசளிப்பு விழா

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கம்பம் கிளைத்தலைவர் ஜி.பாண்டி தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலர்விழி முன்னிலை வகித்தனர்.கம்பம் கிளை இணைச்செயலாளர் எஸ்.சுரேஷ் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச்செயலாளர் தே.சுந்தர் துவக்கவுரை ஆற்றினார்.மருத்துவர் ஆர்.இன்பசேகரன் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.காளிதாஸ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.கம்பம் கிளை துணைத்தலைவர் அ.பெரோஸ் மற்றும் பாளையம் கிளைத்தலைவர் எ.வளையாபதி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் வாழ்த்திப் பேசினார்.கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



மேலும் தொடர்புக்கு: வி.வெங்கட் மாவட்ட செயலர்.9488683929

புகழஞ்சலி கூட்டம்



கூடலூர் : கூடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு புகழஞ்சலி கூட்டம் கிளைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

மக்கள் மன்ற நிர்வாகி கவிஞர் திராவிடமணி முன்னிலை வகித்தார். அப்துல்கலாம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது குறித்த தகவல்கள் கூறப்பட்டது. இணைச்செயலர்கள் பிரபாகரன், சரண்ராஜ், மாவட்ட செயலர் வெங்கட், மாநிலசெயலர் சுந்தர், ஆசிரியர் செல்வன் மற்றும் என்.எஸ்.கே. பி.,மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமலர்

Aug 3, 2015

போடி ஒன்றியக்கிளையின் நான்காவது மாநாடு

போடி ஒன்றியக்கிளையின் நான்காவது மாநாடு ஜூலை 30 2015 வியாழக்கிழமை அன்று மாலை மாலை 5 மணி அளவில் போடி மூட்டா அரங்கில் நடைப்பெற்றது. போடி கிளைத்தலைவர் ஆர்.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்.செ.சிவாஜி மற்றும் முனைவர் சி. கோபி முன்னிலை வகித்தனர். போடி கிளைச்செயலாளர் ப.ஸ்ரீதர் வரவேற்புரை ஆற்றி கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைப்பெற்றது. புதிய தலைவராக தலைமை ஆசிரியர் குமரேசன் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச்செயலாளராக ப.ஸ்ரீதர் ,பொருளாளராக பொ.ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக பாலமுருகன் மற்றும் கிளைத் துணைத்தலைவர்களாக முனைவர் சி.கோபி மற்றும் ஆசிரியை ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பதினெட்டு பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் எஸ்.தினகரன் சக்கை உணவுகளும் அதன் கார்ப்பரேட் அரசியலும் அனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.தேனி கிளைச் செயலர் மு.தெய்வேந்திரன் காளிதாஸ்,தலைமை ஆசிரியர் பழனிராஜா,கமல் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Jul 30, 2015

பெரியகுளம் ஒன்றியக்கிளை 3வது மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் ஒன்றியக்கிளை மாநாடு ஜூலை 29 2015 புதன்கிழமை அன்று மாலை மாலை 5 மணி அளவில் பெரியகுளம் நெல்லையப்பர் நடு நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை தாங்கினார். பெரியகுளம் கிளைச்செயலாளர் ஆர்.ராம்சங்கர் வரவேற்புரை ஆற்றி கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைப்பெற்றது. கிளையின் புதிய தலைவராக ஏ.எஸ்.பாலசுப்ரமணியம் அவர்களும் கிளைச்செயலாளராக ஆர்.ராம்சங்கர் ,பொருளாளராக எஸ்.ஏ.செல்வராஜ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக ஆர்.ஜெகநாதன் மற்றும் கார்த்திகேயன் அவர்களும் கிளைத் துணைத்தலைவர்களாக ஆர்.மனோகரன் மற்றும் கிருஷ்ணன் மற்றும் ஆர்.ரவிக்குமார் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். நிர்வாகக்குழுவை உள்ளடக்கி இருபது பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அம்மையப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கிளைப்பொருளாளர் எஸ்.ஏ.செல்வராஜ் நன்றி கூறினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மணிமேகலை மற்றூம் எஸ்.ஜெயந்தி ஆசிரியர் விஜயக்குமார் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தேனி ஒன்றியக்கிளை 3வது மாநாடு:

தேனி ஒன்றியக்கிளையின் மூன்றாவது மாநாடு ஜூலை 27 2015 திங்கள்கிழமை அன்று மாலை மாலை 5 மணி அளவில் தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது. ஆர் .அம்மையப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைப்பெற்றது. புதிய தலைவராக எஸ்.முருகேசன் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச்செயலாளராக ஈ.ஜெகநாதன், பொருளாளராக அ.சதீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக எஸ்.ஜேசுராஜ் மற்றும் கிளைத் துணைத் தலைவர்களாக ஆர்.அம்மையப்பன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பத்து பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத்தலைவர் பா.செந்தில் குமரன் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாவட்டப்பொருளாளர் ஜெ.மெஹபூப் பீவி போடி கிளைத்தலைவர் ஆர்.காளிதாஸ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்

May 30, 2015

கம்பம் ஒன்றியக்கிளை 4வது மாநாடு

கம்பம் ஒன்றியக்கிளை நான்காவது மாநாடு மே 29 வெள்ளிக்கிழமை அன்று மாலை மாலை 6 மணி அளவில் கம்பம் அக்குபஞ்சர் அகாடமியில் நடைப்பெற்றது. கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். பிறகு அறிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. புதிய தலைவராக ஆசிரியர் ஜி.பாண்டி தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச் செயலாளராக முத்துக்கண்ணன், பொருளாளராக மொ.தனசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இணைச்செயலாளர்களாக மொ.ஜெகநாதன் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக மருத்துவர் இன்பசேகரன் மற்றும் கம்பம் வேலி பெரோஸ் கான் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பதினைந்து பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச்செயலாளர் தே.சுந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூடலூர் நகரக்கிளைப்பெருளாளர் ஆர்.ராஜ்குமார் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை செய்து காட்டினார். பாளையம் கிளைத் தலைவர் வளையாபதி மற்றும் மாணவர் சரவணன் வைரவன் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

May 19, 2015

கூடலூர் நகரக்கிளை இரண்டாவது மாநாடு

கூடலூர் நகரக்கிளை இரண்டாவது மாநாடு மே 17 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் கூடலூர் குரு டிரெய்னிங் அகாடமியில் நடைப்பெற்றது. கிளைத் தலைவர் கு.மோகன் அவர்கள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் என்.கண்ணன் முன்னிலை வகித்தார். கிளைச்செயலாளர் தி.சூரியபிரகாஷ் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். பொருளாளர் ராஜ்குமார் பொருள் அறிக்கை சமர்ப்பித்தார். பிறகு அறிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது. புதிய தலைவராக ஆசிரியர் வே.சீனிவாசன் தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச்செயலாளராக ஆசிரியர் தி.சூரியபிரகாஷ், பொருளாளராக ஆர்.ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக போ.பிரபாகரன் மற்றும் ப.சரண்ராஜ் ஆகியோரும் கிளைத் துணைத்தலைவர்களாக ஆசிரியர் மொ.செளந்திரராஜன் மற்றும் சுருளிராஜ் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பதினைந்து பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் மாநிலச்செயலாளர் தே.சுந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளைப்பெருளாளர் ஆர்.ராஜ்குமார் இறுதியில் நன்றி கூறினார்.முப்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Apr 6, 2015

மாவட்ட செயற்குழு கூட்டம்-8

ஏப்ரல் 4 தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார். தேனி கிளை செயலாளர் தெய்வேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு பிறகு மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலைகளை மாவட்ட செயலர்.வி.வெங்கட் எடுத்துரைத்தார். கிளை செயற்குழு கூடுவதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கிளை மாநாடுகள், மாவட்ட மாநாடுகள் நடத்தும் தேதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான் புத்தகங்கள் கிளை வாரியாக பிரித்து தரப்பட்டது. ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை கொண்டாடும் வழிமுறைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Mar 8, 2015

பெரியகுளத்தில் தேசிய அறிவியல் தின விழா



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியகுளம் கிளை சார்பில் மார்ச் 6 பெரியகுளம் டிரயெம்ப் நடு நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா நடைப்பெற்றது.பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.கிளைச் செயலாளர் ஆர்.ராம்சங்கர் வரவேற்றார். நடு நிலைப்பள்ளி மாணவர்கள் அள்வில் மாணவர்களூக்கு ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைப்பெற்றன.ஒன்றிய அளவில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் திருமிகு தியாகராஜன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.

Feb 28, 2015

கம்பத்தில் தேசிய அறிவியல் தினவிழா…

உலகப்புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் தன்னுடைய புகழ்பெற்ற இராமன் விளைவை 1928 ஆம் வருடம் பிப்ரவரி 28 ஆம் நாள் உலகிற்கு நிருபித்தார்.அவரது சாதனையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் பிப்ரவரி27,வெள்ளிக்கிழமை அன்று கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது.கல்வி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.துவக்கநிலை, நடுநிலை,உயர்நிலை என மூன்று பிரிவுகளில் மாணவ-மாணவியர் பல்வேறு அறிவியல் தலைப்புகளில் பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகளில் பங்கேற்றனர். 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹா.ஸ்ரீராமன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டசெயற்குழு உறுப்பினர் க.பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் மற்றும் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.குழந்தைகளுக்கான மந்திரமா? தந்திரமா? மேஜிக் நிகழ்ச்சியினை ஆசிரியர் ராஜ்குமார் செய்து காட்டினார்.கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் நன்றியுரை வழங்கினார்.அறிவியல் தின விழாவை ஆசிரியர்கள் சுரேஸ்கண்ணன்,நந்தகுமார்,செல்லப்பாண்டி மற்றும் சோமநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 
போட்டிகளில் வெற்றி பெற்றோர் விவரம் பின்வருமாறு:
பேச்சுப்போட்டி:  துவக்கநிலை(4,5 ஆம் வகுப்பு):

முதலிடம்: எஸ்.இன்சமாம் உல் ஹக் (என்.எஸ்.கே.பி.காமட்சியம்மாள் துவக்கப்பள்ளி,கூடலூர்)
இரண்டாமிடம்: அ.ஆப்ரினா பாத்திமா (ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்:சி.ஜனனி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.கீழக்கூடலூர்)


நடுநிலை(6,7,8 ஆம் வகுப்பு):
முதலிடம்:என்.பவித்ரா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.சுருளிப்பட்டி)
இரண்டாமிடம்:தா.கோகிலா (ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்:ரா.இலக்கியா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. கீழக்கூடலூர்)

உயர்நிலை(9,10 ஆம் வகுப்பு):
முதலிடம்: இ.ஜனத்துல் பிர்தொளஸ்(நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி.கம்பம்)
இரண்டாமிடம்:கே.சுகைனா(நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி.கம்பம்)
மூன்றாமிடம்:எஸ்.அனவர் அப்சல்(இலாஹி உயர்நிலைப்பள்ளி,கம்பம்)

ஓவியப்போட்டி:  துவக்கநிலை(4,5 ஆம் வகுப்பு):
முதலிடம்: க.ரம்யா(அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி,கே.எம் பட்டி)
இரண்டாமிடம்:டி.தனலட்சுமி((ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்:அ. நித்தீஸ் குமார் (திருவள்ளூவர் துவக்கப்பள்ளி.கூடலூர்)

 நடுநிலை(6,7,8 ஆம் வகுப்பு):
முதலிடம்: ஜி.ஹரிகர சுதன்( ஸ்ரீ முத்தையா பிள்ளை உயர்நிலைப்பள்ளி,கம்பம்)
இரண்டாமிடம்: எம்.வினோஸ் ( நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி,கம்பம்)
மூன்றாமிடம்: எஸ். நாகராஜா (ஸ்ரீ முத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி ,கம்பம்)


உயர்நிலை(9,10 ஆம் வகுப்பு):
முதலிடம்:எம்.அஜய் (நாலந்தா மெட்ரிக் பள்ளி.கம்பம்)
இரண்டாமிடம்:ஜெ.விஷ்னு(((ஸ்ரீ முத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி, கம்பம்)
மூன்றாமிடம்:ஹ.அப்துல் மனாப் (இலாஹி உயர்நிலைப்பள்ளி,கம்பம்.



தொடர்புக்கு:வி.வெங்கட்ராமன் மாவட்டச் செயலாளர் 9488683929

Feb 22, 2015

தேவாரம் நியூட்ரினோ கருத்தரங்கில் கேள்விகளுக்கு பதில் அளித்த விஞ்ஞானி ; வாக்குவாதம் செய்த மக்கள்



தேவாரம் : தேவாரத்தில் நடைபெற்ற "நியூட்ரினோ' நோக்கு கூடம் குறித்த கருத்தரங்கில் பொதுமக் களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காததால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(டி.என்.எஸ்.எப்.,) சார்பில், "நியூட்ரினோ'-அறிவியலும், அவசியமும் குறித்து விழிப்புணர்வு கூட்டம் தேவாரத்தில் நடந்தது. டி.என்.எஸ்.எப்., மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சுந்தர் துவக்கி வைத்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை முதன்மை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் பங்கேற்றார். நியூட்ரினோ நோக்கு கூடம் அமைவதன் அவசியம் குறித்து சுந்தர் விளக்கமளித்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்காமல், நியூட்ரினோ ஆய்வகம் அமைவதன் பயன் குறித்து விளக்க மளித்ததால் பொதுமக்கள் கூச்சலிட்டனர். நியூட்ரினோ என்றால் என்னவென்று முதலில் விளக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில், ""பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில்,"மியூவான் நியூட்ரினோ' ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது, இயற்பியல் துறையில் மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆராய்ச்சி, வேதியல் பொருட்கள் பயன்படுத்த போவதில்லை. பால்வெளி வீதி தோன்றிய காலத்திலேயே நியூட்ரினோ உற்பத்தி துவங்கி விட்டது. இந்த அடிப்படை துகளை குறித்த ஆராய்ச்சி இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

குணசேகரன், தேவாரம்: ஆய்வகம் அமைக்க துளையிடப்படும் பாறை எந்த வகையை சேர்ந்தது. இத்தகைய பாறை இங்கு மட்டும் உள்ளது என்பதற்கு என்ன உத்தரவாதம். இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகள், ஆய்வு மேற்கொள்ளும் போது ஆபத்து ஏற்பட்டால் எதிர்ப்போம் என தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞானி: "நியூட்ரினோ' ஆய்வகம் அமைக்க மேற்குவங்க மாநிலத்தில் உள்ள இமயமலை பகுதி, ஊட்டி சிங்காரா வனம், பொட்டிப்புரம் ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன. ஜியாலஜிக்கல் சர்வே படி அம்பரப்பர் மலை அடுக்குகளற்ற ஒரே பாறை என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டது. திட்டத்தினால் எந்த ஆபத்தும் இல்லை.

செல்வராஜ், டி.புதுக்கோட்டை: ஆய்வகம் அமைந்த பின் அப்பகுதியில் உள்ள மக்கள் குடி யிருப்பு காலி செய்யப் படுமா. வாழ்வாதாரமாக உள்ள ஆடு, மாடு மேய்த்தலுக்கு இடையூறு ஏற்படுமா.

விஞ்ஞானி: திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 66 ஏக்கரில் மட்டுமே பணிகள் நடக்கும். விவசாய நிலமோ, மக்கள் குடி யிருப்பு பகுதியோ கையகப்படுத்தப்படாது.

முருகன், கோம்பை:நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வாங்கும் போது, அணு கழிவு மேலாண்மை என்று கூறப்பட்டுள்ளது. அம்பரப்பர் மலை அணு கழிவுகளை கொட்டி பாதுகாக்கும் புதைகுழியா. உடைத் தெடுக்கப்படும் கிரானைட் பாறைகள் "டாமின்' மூலம் விற்பனை செய்யப்படும் என்றால், பாறைகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தற்போதுள்ள பாதையை பயன் படுத்தூர்களா.

விஞ்ஞானி: இந்தியாவில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தவறுதலாக அணுகழிவு மேலாண்மை என்ற பட்டியலில் அனுமதி கோரப்பட்டது. பின்னர் திருத்தி வெளியிடப்பட்டது.
 

'நியூட்ரினோ' தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்; கருத்தரங்கில் தகவல்



தேவாரம் : “ஐ.என்.ஓ., திட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் உபகரணங்களைமட்டும் பயன்படுத்துவதால், 'நியூட்ரினோ' தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்,” என மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை முதன்மை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 'நியூட்ரினோ' ஆய்வகம் அமைக்க ரூ.ஆயிரத்து 580 கோடி மத்திய அரசு அனுமதித்துள்ளது.ஆய்வகம் அமையவுள்ள தேவாரம் பகுதி மக்களுக்கு 'நியூட்ரினோ' குறித்த சந்தேகங்களை போக்கி, தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து எழுந்தது.இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேவாரத்தில், நியூட்ரினோ ஆய்வகம் குறித்த விஞ்ஞான விளக்க கருத்தரங்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை முதன்மை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது. அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்விகளை எழுப்பினர்.

அவற்றிற்கு விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் பதில் அளித்து பேசியதாவது: அம்பரப்பர் மலையில் அமைக்கப்படும் பாதாள சுரங்கத்தில், 'மியூவான் நியூட்ரினோ' குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது. பாறையை உடைக்க உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் அதிர்வை 500 மீ., க்கு அப்பால் உணர முடியாது. கிரானைட் பாறைகளை அறுத்தெடுக்க ஏராளமான தண்ணீர் பயன்படுத்தபடும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். முன்னுாறு குடும்பங்கள் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தப்படும். இதனால் நீர் வளம் பாதிக்கபடும் என்ற அச்சம் தேவையில்லை. ஐ.என்.ஓ., மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. திட்டம் முழுமையடையும் போது 'நியூட்ரினோ' தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும், என்றார்.

Feb 21, 2015

கம்பம் கிளைச்செயற்குழு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளைச் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 20 மாலை ஆறு மணி அளவில் கம்பம் கோட்டை மைதானத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத்தலைவர் திருமிகு.மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.பெருளாளர் மொ.தனசேகரன் வரவேற்றார்.பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.மாவட்ட செயலாளர் வெங்கட் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார்,ஓவியர் பாண்டி உட்பட செயற்குழுஉறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 20, 2015

கிளைச்செயலர்கள் ச ந்திப்பு: 1

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் பிப்ரவரி 19 வியாழன் தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது. கிளைச் செயலாளர்கள் தெய்வேந்திரன்,ஸ்ரீதர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜேசுராஜ் மாவட்ட செயலர் வெங்கட் மற்றும் மாநிலச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஐ மாவட்டம் முழுவதும் கிளைகள் சார்பில் சிறப்பாக கொண்டாட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

மாவட்ட நிர்வாகக் குழு,கிளைச்செயலர்கள் ச ந்திப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் பிப்ரவரி 19 வியாழன் தேனி புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.கிளைச் செயலாளர்கள் தெய்வே ந்திரன்,ஸ்ரீதர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜேசுராஜ் மாவட்ட செயலர் வெங்கட் மற்றும் மாநிலச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஐ மாவட்டம் முழுவதும் கிளைகள் சார்பில் சிறப்பாக கொண்டாட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Feb 13, 2015

டார்வின் தினம்


கூடலூர் நகரக் கிளை சார்பில் பிப்ரவரி 12 டார்வின் தினம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.கூடலூர் நகரக்கிளை பொருளாளர் திருமிகு ராஜ்குமார் பங்கேற்று குழ ந்தைகளூக்கான மந்திரமா? த ந்திரமா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.ஜெகநாதன் மற்றும் ஆசிரியர் சுருளிராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Jan 29, 2015

நியூட்ரினோ-பொது வெளி அரங்கு நிகழ்ச்சி


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் சார்பில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்த விஞ்ஞான விளக்க கருத்தரங்கம் தேவாரத்தில் ஜனவரி 28 மாலை 5 மணி அளவில் காமராஜர் அரங்கில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் திருமிகு.சிவாஜி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேரா.முகமது ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் வரவேற்புரை ஆற்றினார். மா நிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் அறிமுகவுரை ஆற்றினார். மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்து விளக்கம் அளித்தார்.தமிழ் நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் திருமிகு ராஜப்பன் விவசாயிகள் சார்பில் பங்கேற்று கேள்விகளை எழுப்பினார்.பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நண்பர்கள் மாற்று அமைப்பினர் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.போடிக்கிளை செயலாளர் திருமிகு,ஸ்ரீதர்,பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி ஓவியர் பாண்டி,குமரேசன்,ஓவியா தனசேகரன்,கூடலூர் கிளை ராஜ்குமார்,மோகன் உள்ளிட்ட அறிவியல் இயக்க மாவட்ட மற்றும் கிளைப்பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அறிவியல் ஆசிரியர்களுக்கான விளக்கக்கூட்டம்


ஜனவரி 28 காலை 10 மணி அளவில் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளீயில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் ஆசிரியர்களுக்கான நியூட்ரினோ குறித்த விஞ்ஞான விளக்க கருத்தரங்கம் நடைப்பெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமிகு பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார். தேனி கிளைத்தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் திருமிகு வெங்கட் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச் செயலர் தே.சுந்தர் கலந்டு கொண்டு சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு வாசு அவர்கள் கலந்து கொண்டு துவக்கவுரை ஆற்றினார். பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலர் திருமிகு நாகராசு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்து விளக்கம் அளித்தார். 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.

Jan 28, 2015

நியுட்ரினோ விஞ்ஞான விளக்கக் கூட்டம்


ஜனவரி 27 நியூட்ரினோ விஞ்ஞான விளக்க பிரச்சாரம் கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி,உத்தம பாளையம் முகமது பாத்திமா பெண்கள் உயர் நிலைப்பள்ளி,குண்டல்னாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி நடைப்பெற்றது.கம்பத்தில் நடைப்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு என்.எம்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார்.கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.பாளையம் பாத்திமா பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் விளக்கம் பெற்றனர்.குண்டல் நாயக்கன்பட்டியில் நடைப்பெற்ற பிரச்சார கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டி விளக்கம் பெற்றனர்.ஒரே நாளில் மூன்று இடங்களில் நிகழ்ச்சி சிறப்பாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

Jan 15, 2015

நிர்வாகக் குழு கூட்டம்: 4

விரிவடைந்த மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் 2015 ஜனவரி 14 தேனி ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் திருமிகு பா.செந்திலகுமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அம்மையப்பன் முன்னிலை வகித்தார். நியூட்ரினோ விளக்க கூட்டமாகவும் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நியூட்ரினோ பிரச்சரம் குறித்து திட்டமிடும் கூட்டமாகவும் நடைப்பெற்றது.மாநிலக் கருத்தாளர் முனைவர் தினகரன் கலந்து கொண்டு நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்து விளக்கம் அளித்தார்.. மாநிலச் செயலாளர்கள் திருமிகு.தியாகராஜன் மற்றும் சுந்தர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்


விரிவடைந்த மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் ஜனவரி 14 தேனி ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் நடைப்பெற்றது.மாவட்டத் தலைவர் திருமிகு பா.செந்திலகுமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அம்மையப்பன் முன்னிலை வகித்தார். நியூட்ரினோ விளக்க கூட்டமாகவும் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நியூட்ரினோ பிரச்சரம் குறித்து திட்டமிடும் கூட்டமாகவும் நடைப்பெற்றது.மாநிலக் கருத்தாளர் முனைவர் தினகரன் கலந்து கொண்டு நியூட்ரினோ நோக்குக்க்கூடம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இருபதுக்கும் க்கும் மேற்பட்ட நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Jan 10, 2015

இளம் விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா


2014 ஆம் ஆண்டிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பெங்களூரில் நடைப்பெற்றது.இதில் தேனி மாவட்டத்தின் சார்பில் பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மாணவர்கள் குழு தேர்வு பெற்றது. சிறப்பான ஆய்வினை மேற்கொண்டு தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஜனவரி 9 வெள்ளி அன்று ஊர் பொதுமக்கள் சார்பில் நடைப்பெற்றது.உதவித்தொடக்க க்ல்வி அலுவலர் திலகவதி கல் ந்து கொண்டு இளம் விஞ்ஞானிகளை வாழ்த்திப்பேசினார்.மாவட்ட இணைச்செயலர் திருமிகு.ஞானசுந்தரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் மணிமேகலை மற்றும் ஜெயந்தி மாநிலச்செயலர் தியாகராஜன் மாவட்ட செயலர் வெங்கட் பெரியகுளம் கிளைச்செயலர் ராம்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.