முதல் பக்கம்

Mar 25, 2014

நிர்வாகக் குழு கூட்டம்: 3

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மார்ச் 24 திங்கள்கிழமை மாலை 6 மணி அளவில் தேனி அல்லி நகரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட இணைச்செயலர் திருமிகு ஜேசுராஜ் தலைமை தாங்கினார்.மாநிலச் செயலர் திருமிகு தியாகராஜன் மற்றும் திருமிகு.தே.சுந்தர்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி, ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பொறுப்பு கிளைகள் உடனடியாக கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

Mar 23, 2014

மார்ச்-22 சர்வதேச தண்ணீர் தினம்

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பாளையம் ஒன்றியக்கிளைக்கு உடபட்ட அணைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மார்ச் 22 அன்று சர்வதேச தண்ணீர் தின கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு பாளையம் ஒன்றியக்கிளைத் தலைவர் திருமிகு வளையாபதி தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு.சத்யா முன்னிலை வகித்தார்.உடற்கல்வி ஆசிரியரும் தமிழ் நாடு அறிவியல் இயக்க ஆர்வலருமான திருமிகு. நவீன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் ராமன் கல ந்து கொண்டு நீர் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் நீர் நிலைமைகளின் நிலை குறித்தும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கருத்துரை வழங்கினார்.படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.

Mar 22, 2014

மார்ச் 21 உலக வன நாள் நிகழ்ச்சி-2

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பாக கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் சர்வதேச காடுகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு.ஆ.ஜெகநாதன் தலைமை தாங்கினார். தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளர் திரு. ச.சுருளிராஜ் வரவேற்றார். மரக் கன்றுகள் நடுவது மற்றும் வன நாள் தொடர்பான கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் ”எல்லா மரங்களும் போதி மரங்களே” எனும் தலைப்பிலும், மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் “காடும் நீரும்” எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கூடலூர் நகரக்கிளை செயலாளர் தி. சூர்யப் பிரகாஸ் நன்றி கூறினார்.

மார்ச் 21 உலக வன நாள் நிகழ்ச்சி-1


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை சார்பாக கம்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வன நாள் கருத்தரங்கம் மற்றும் கவிதைப் போட்டி மார்ச் 21 அன்று காலை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. உபதி அந்தோனி அம்மாள் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றியக்கிளை செயலாளர் க. முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் அவர்கள் “ மரம் நமக்கு வரம்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். காடுகளின் முக்கியத்துவம் குறித்தும் உலக நாடுகளில் காடுகளின் பரவல் குறித்தும் படக்காட்சி திரையிடப்பட்டது. கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியை. திருமதி. கீதா அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.இறுதியில் பள்ளி ஆசிரியை மு.வேணி நன்றி கூறினார்.

Mar 14, 2014

மார்ச் 14 ஐன்ஸ்டின் பிறந்த நாள் விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் முத்தலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐன்ஸ்டீன் பிறந்த நாள் விழா & கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு. வே.தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். திருமிகு..எஸ்.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஐன்ஸ்டீன் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் பா.சோமநாதன் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியகிளைச் செயலாளர் திருமிகு. க.முத்துக்கண்ணன் ”ஐன்ஸ்டீன் வடித்த கண்ணீர்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். கூடலூர் கிளை பொருளாளர் ரா.ராஜ்குமார் “ஐன்ஸ்டீன் வாழ்வும் பணிகளும்” எனும் தலைப்பில் பேசினார். ஐன்ஸ்டீன் வாழ்வு மற்றும் சாதனைகள் தொடர்பான படக்காட்சிகள் திரையிடப்பட்டன. துளிர் இல்ல மாணவர் மு. கோபி நன்றி கூறினார். பள்ளி ஆசிரியர்கள் , 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.