தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பாக கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் சர்வதேச காடுகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு.ஆ.ஜெகநாதன் தலைமை தாங்கினார். தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளர் திரு. ச.சுருளிராஜ் வரவேற்றார். மரக் கன்றுகள் நடுவது மற்றும் வன நாள் தொடர்பான கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன் ”எல்லா மரங்களும் போதி மரங்களே” எனும் தலைப்பிலும், மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் “காடும் நீரும்” எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கூடலூர் நகரக்கிளை செயலாளர் தி. சூர்யப் பிரகாஸ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment