முதல் பக்கம்

Oct 24, 2015

எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு !! தேனி ஆசிரியர்கள் சாதனை !!

தேசிய அளவில் கடந்த 2003 முதல் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புக்களால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக 'செயல்பாடுகளின் மூலம் அறிவியல் கற்றல்,' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது. துணைப் கருப்பொருள்களாக செலவில்லாத மற்றும் புதுமையான கற்றல் கற்பித்தல் கருவிகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை பள்ளிகளில் இருந்து சமூகத்திற்கு கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள், சுயசார்பிற்கான அறிவியல், புதுமையான மதிப்பீட்டு உத்திகள், புதுமையான அறிவியல் தொழில்கல்வி ஆகியவை அறிவிக்கப்பட்டன.

இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டியில் நடுநிலை,உயர்நிலை,மேல்நிலை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள், ஆசிரிய பயிற்றுனர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டன.தேசிய அள்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டன.இதில் தமிழக அளவில் 14 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்ப்ட்டன. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை எம்.கே.மணிமேகலை அவர்களது கணிதம் கற்பித்தல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையும் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் பி.சங்கர நாராயணன் அவர்களது ஆய்வுக்கட்டுரையும் தேசிய அளவில் தேர்வாகி உள்ளது. வருகிற டிசம்பர் 17,18,19.,2015 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற உள்ள தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டில் இருவர்களும் தங்களது ஆய்வுக்கட்டுரையை நேரடியாக சமர்ப்பிக்க உள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் தேனி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் மாவட்டப் பொருளாளர்.எஸ்.ஞானசுந்தரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..

 
வி.வெங்கட்- மாவட்டச் செயலாளர்
அறிவியல் இயக்கம் தேனி,
தொடர்புக்கு: 9488683929