கம்பம் ஒன்றியக்கிளை நான்காவது மாநாடு மே 29 வெள்ளிக்கிழமை அன்று மாலை மாலை 6 மணி அளவில் கம்பம் அக்குபஞ்சர் அகாடமியில் நடைப்பெற்றது. கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். பிறகு அறிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. புதிய தலைவராக ஆசிரியர் ஜி.பாண்டி தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச் செயலாளராக முத்துக்கண்ணன், பொருளாளராக மொ.தனசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இணைச்செயலாளர்களாக மொ.ஜெகநாதன் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக மருத்துவர் இன்பசேகரன் மற்றும் கம்பம் வேலி பெரோஸ் கான் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பதினைந்து பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச்செயலாளர் தே.சுந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூடலூர் நகரக்கிளைப்பெருளாளர் ஆர்.ராஜ்குமார் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை செய்து காட்டினார். பாளையம் கிளைத் தலைவர் வளையாபதி மற்றும் மாணவர் சரவணன் வைரவன் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment