முதல் பக்கம்

Mar 7, 2013

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்-விழிப்புணர்வுக் கருத்தரங்கம்


 உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கலை அறிவியல் கல்லூரியின் மகளிருக்கான நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அனுமந்தன்பட்டியில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மார்ச்,2, 2013 மாலை அறிவியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் முனைவர்.முகமது ஷரீப் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் சி.பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் பூமி சூடேறுதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்தும் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் அறிவியல் மனப்பான்மை குறித்தும் பேசினர். மேலும் கல்லூரியின் சார்பில் ஹபீப் முகமது மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் அருணாசுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment