முதல் பக்கம்

Mar 17, 2013

மகளிர் தினத்தை முன்னிட்டுக் கருத்தரங்கம்


 
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் உபகுழுவின் சார்பில் -மார்ச்,8-பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வியியல் கல்லூரியில் பெண்ணுரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திருமிகு,எஸ்.சூரியன் தலைமை வகித்தார். விரிவுரையாளர் எ.துளசிமணி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலச்செயலாளர் திருமிகு.டி.சாந்தி கருத்துரையாற்றினார்.


விரிவுரையாளர் எஸ்.கலையரசி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், பத்திரிக்கையாளர் ஜி.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.முத்துமணிகண்டன் நன்றி கூறினார். சமம் உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

No comments:

Post a Comment