தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவரும் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியருமான திருமிகு. பா.செந்தில்குமரன் அவர்களுக்கு ஆசிரியர்களை சிறந்த முறையில் ஒருங்கிணைத்துப் பணியாற்றியதற்காக மாவட்ட அளவில் கல்வித்துறைக்கான நற்பணி விருது தேனி மாவட்ட ஆட்சியர் திருமிகு.எஸ்.பழனிச்சாமி அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு.சி.ராமசாமி அவர்களும் உடனிருந்தார்.
நண்பர்.பா.செந்தில்குமரன் பணிபுரியும் பள்ளியில் கிராமப்புற மாணவர்களே அதிகம் பயில்கின்றனர். இருந்தபோதும் தொடர்ச்சியாக கடந்த நான்கு கல்வியாண்டுகளாக பத்தாம் வகுப்பில் 100 விழுக்காடு மாணவர்களைத் தேர்ச்சியடையச் செய்து சாதனை படைத்திருக்கிறார்.
மேலும் RMSA பயிற்சிகளில் கருத்தாளராகவும், கள்ளர் சீரமைப்புத் துறையில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான பணியிடைப் பயிற்சி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள SCERT மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நமது அறிவியல் இயக்கத்திலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்டப்பொறுப்பும் வகித்து ஒரு கருத்தாளராகவும் மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறார். அவருடைய நற்பணிகள் மென்மேலும் சிறக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.. அவருடைய அலைபேசி எண்: 9942112203
(நம்முடைய அறிவியல் இயக்க தேனி மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ஜெ.முருகன் அவர்களும் SCERT மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் நமது வாழ்த்துகள்! அலைபேசி எண்: 9486373538)
(நம்முடைய அறிவியல் இயக்க தேனி மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ஜெ.முருகன் அவர்களும் SCERT மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் நமது வாழ்த்துகள்! அலைபேசி எண்: 9486373538)
No comments:
Post a Comment