முதல் பக்கம்

Mar 12, 2013

வால்மீன் பான்ஸ்டார்ஸ்



தற்போது வடகோளத்தில் C/2011 L4 என்ற வால்மீன் பிரவேசிக்க ஆரமித்துள்ளது. ஆனால் தொடர்ந்து அடிவானில் மேகமும் பனியும் காணபடுவதால் நம்நாட்டிலிருந்து இதை இன்னும் பார்த்ததாக செய்தி ஏதும் வரவில்லை. இதை இன்றோ அல்லது நாளையோ காணும் வாய்ப்புள்ளது.

எங்கே எப்போது காண்பது?

சூரியன் மறையும்போது மாலை சுமார் 5.45 மணிக்கு வானில்சூரியன் இருக்கும் இடத்தை குறித்துக்கொள்ளுங்கள். அதற்கு சற்று வடக்கே ( ஒரு சூரியன் விட்ட தூரத்தில் ) 6.45லிருந்து - 7 மணிக்குள் உற்று நோக்கினால் வால்மீன் தெரியும். அந்திவெளிச்சத்தில் இன்னும் நன்கு காணவேண்டுமானால் ஒரு பைனாக்குலர் அவசியம். ( எச்சரிக்கை: உங்கள் கண்கள் பாதிப்படையாமல் இருக்க, சூரியன் மறைந்த பிறகே அப்பகுதியை பைனாக்குலர் கொண்டு பார்க்கவும்.)


மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேற்கு மாவட்டங்களில் இதைக்காண்பது கடினம். மேலே கூறியவாறு உங்கள் பகுதியிலிருந்து 5.45 மணிக்கு சூரியனை பார்க்கமுடிந்தால் வால்மீனையும் உங்கள் பகுதியிலிருந்து காண இயலும்.

நாளை ( மார்ச் 13) மாலை, பிறை நிலவிற்கு சற்று கீழே தென்மேற்கில் இந்த வால்மீன் தெரியும். எனவே புதன் அன்று அதை வானில் கண்டுபிடிப்பது சற்று எளிது.

பார்பதற்கு வால்மீன் எப்படி இருக்கும்?


இதோ நேற்று ஆஸ்திரேலியாவிலிருந்து எடுத்த புகைப்படம். தமிழ்நாட்டில் படத்தில் உள்ளவாறு இல்லாமல் இன்னும் சற்று அடிவானத்திற்கு பாதிதூரத்தின் அருகே தோன்றும்.

மேற்குஅடிவான் மேகம், பனி போன்றவை இல்லாமல் வால்மீனை தெளிவாகக் காண்பதற்கு வாழ்த்துக்கள்!



--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

No comments:

Post a Comment