தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மார்ச்,5, 2013 அன்று மாலை மாயா புத்தக மையத்தில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். உறுப்பினர் சேர்க்கை, மாநாடுகள், ஆசிரியர் இணையம், காட்கில்-மேற்குத்தொடர்ச்சி மலை குறித்த விவாதம், துளிர் இல்லங்கள் பதிவு & மாநாடு, மாநில தகவல்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்பட்டது. மு.தெய்வேந்திரன், மு.தியாகராஜன், தே.சுந்தர் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment