முதல் பக்கம்

Mar 17, 2013

ஆசிரியர் இணையக்கூட்டம்




தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்ட கல்வி உபகுழுவின் சார்பில் மார்ச்,16, 2013 மாலை தேனி கர்ணா பயிற்சி மையத்தில் ஆசிரியர் இணையக்கூட்டம் நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். கல்வி உபகுழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றார்





  
அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன்  துவக்கிவைத்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப்பொருளாளரும் கல்வியாளருமாகிய எஸ்.சுப்ரமணி இன்றைய கல்விச்சூழலில் நாம் கவனம் செலுத்தவேண்டிய, ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய கல்விசார் பிரச்சினைகளை முன்வைத்துப் பேசினார். ஆசிரியர் இணைய தென்மண்டல ஒருங்கிணைப்பாள்ர் தே.சுந்தர் நிறைவுரையாற்றினார். ஆசிரியர் இணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஆசிரியை ஞானசுந்தரி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளராக எஸ்.சூரியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் நன்றி கூறினார். சுமார் 25 ஆசிரிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment