முதல் பக்கம்

Mar 17, 2013

மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்


தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செப்டம்பர், 10,2012 அன்று மாலை மதுரை காமராஜர் பல்கலை கல்வி மையத்தில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். குழந்தைகள் அறிவியல் மாநாடு-பயிற்சி முகாம், வினாடி-வினா, திறனறிதல் தேர்வு, குழந்தைகள் அறிவியல் திருவிழா, கிளைச் செயல்பாடுகள், புதிய முயற்சிகள் ஆகிய தலைப்புக்களின் கீழ் விவாதம் நடந்தது. எஸ்.சிவாஜி, மு.மணிகண்டன், மு.தெய்வேந்திரன், எஸ்.சேசுராஜ், தே.சுந்தர், மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment