நேசத்துக்குரியவர்களே.. இன்று நாம் உயிர் வாழ காரணியான,சுவாசிக்கும் ஆக்சிஜன் தனிமத்தை, கண்டு பிடித்த ஜோசப் பிரிஸ்டலி என்ற ஆங்கிலேய வேதியலாளரின் பிறந்ததினம். Joseph Priestley, FRS (13 March 1733 (O.S.) – 6 February 1804)..
வேதியலுக்கு அடித்தளம் போட்டவர்களுள் முக்கியமானவர். கிரிகேரியன் காலண்டர் அறிமுகத்துக்கு வருமுன்னே இந்த உலகை தரிசித்தவர்.ஜோசப் 6 குழந்தைகள் உள்ள தனதுகுடும்பத்தில் மூத்தவர். இவரின் தந்தை ஜோனாஸ் பிரிஸ்டலி, ஆடைகள் தயாரித்துவிற்பனை செய்பவர், தாய் மேரிஸ்விப்ட் ஒரு சாதாரண விவசாயின் மகள்.தனது தாய்அவரது 7ம் வயதில் இறந்த பின் மகப்பேறு இல்லாத தனது அத்தையின் வீட்டிலேயேவளர்ந்தார். இளவயதிலேயே கல்வியிலும் கணிதத்திலும், அறிவியலிலும் மிகுந்தஆர்வம் கொண்டவர்.இவர் தனது இளமையில் பள்ளியில் அறிவியல் மொழியான லத்தீனும்,கிரேக்கமும் பயின்றார்.
ஆனால் பள்ளிப் பருவத்தில் இவரது நுரையீரலை காசநோய்மிகவும் தாக்கியதால், தொடர்ந்து பள்ளியில் படிக்க முடியாமல், பள்ளிப் படிப்பைஇடைவிட்ட மாணவரானார்பின்னர் நோய் சரியானதும், தானாகவே,பிரெஞ்சு,இத்தாலியன்,ஜெர்மன், சால்டியன், சிரியன் மற்றும் அரபி போன்றமொழிகளைப் பயின்றார். .ஜோசப் இயற்பியல், தத்துவம்,அல்ஜீப்ரா, கணிதம் மற்றும் நிறைய மொழிகளில் திறமை மிக்கவர். .ஜோசப் கிட்டத்தட்ட 150 அறிவியல் சார்ந்த கட்டுரைகளையும், அது தொடர்பான ஆராய்ச்சிகளையும் செய்தவர்.இருப்பினும் கூட,வாயு நிலையிலுள்ள ஆக்ஸிஜனை ஆகஸ்ட் மாதம் 1744 ம் ஆண்டு கண்டுபிடித்தமைக்காகமட்டுமே மிகவும் போற்றப் படுகிறார். அவர் தன வாழ்நாளில் பீர் தயாரிக்கும்போது, அதன் மேல்மட்டத்தில் உருவான சோடாநீரை கண்டுபிடித்தத்தில் பெருமைசேர்த்தவர்.மேலும் துவக்கக் காலத்தில் மின்னியல் தொடர்பான ஆராய்ச்சிகள் செய்துகட்டுரைகளையும் எழுதியவர்.
ஜோசப் தனது வாழ்நாளில் முக்கிய வாயுக்களான சல்பர் டைஆக்சைடு,அம்மோனியா,நைட்ரஸ் ஆக்சைடு,கார்பன் மோனோ ஆக்சைடு போன்ற வாயுக்களைக்கண்டுபிடித்த வேதியலின் அசுரர்..அசகாய பிரம்மாண்டத்தை உருவாக்கியவர்.அறிவியல் உலகில் வேதியல் புரட்சியை செய்த அற்புத மனிதர்.பிரெஞ்சுப் பிரத்சியில்ஈடுபட்டவர்.தன வாழ்நாளின் இறுதிவரை விஞ்ஞானியாக, தத்துவஞானியாக,ஆசிரியராகவேவாழ்ந்த மாமேதை. கற்றலின் கலையை (pedagogy..it is a science & art of education ) சொல்லித் தந்தவர்..ஆனால் கடவுள் நம்பிக்கை(theism),பொருள்முதல்வாதம்(materialism ) மற்றும் நியதி(determinism ) மூன்றையும்ஒன்றாக இணைக்க முயற்சி செய்தார்.
--
Prof.Mohana
No comments:
Post a Comment