முதல் பக்கம்

Mar 1, 2013

அறிவியல் தினம்- நிகழ்ச்சிகள்



பிப்ரவரி,28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 28ஆம் தேதி பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளையின் சார்பில் சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளியில் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.. அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் கருத்தாளர் எஸ்.தேவராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மேஜிக் நிகழ்ச்சிகளை செய்துகாட்டினார். அறிவியல் இயக்க மாவட்டச்செயலாளர் தேசிய அறிவியல் தினம் குறித்த அறிமுக உரையாற்றினார். 120 குழந்தைகள் பங்குபெற்றனர். நிகழ்ச்சியை கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் ஒருங்கிணைத்தார்.

மாலை 3 மணிக்கு சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.. கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் அறிவியல் தினம் குறித்த அறிமுக உரையாற்றினார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் கருத்தாளர் எஸ்.தேவராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மேஜிக் நிகழ்ச்சிகளை செய்துகாட்டினார். பள்ளியின் சார்பில் அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பலரும் செய்து கொண்டு வந்த எளிய அறிவியல் கருவிகளின் கண்காட்சி நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் ரமேஷ், ராஜேஷ் மற்றும் செந்தில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

1 comment:

  1. மிகவும் அற்புதம்
    sura

    ReplyDelete