முதல் பக்கம்

Mar 14, 2013

பெண்ணுரிமை பாதுகாப்பு கருத்தரங்கு

தேனி,
First Published : 11 March 2013 12:34 AM IST
 
தேனி அருகே வீரபாண்டி சௌராஷ்டிரா கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க உப குழு சார்பில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பெண்ணுரிமை பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சூரியன் தலைமை வகித்தார். விரிவுரையாளர் செல்வி வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநிலச் செயலர் டி.சாந்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலர் சுந்தர், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் கே.வி. முத்துமணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment