By
மேட்டுப்பாளையம்,
நன்றி: தினமணி
First Published : 18 March 2013 02:24 AM IST
மேட்டுப்பாளையம்- ஜடையம்பாளையம் சாலையில் உள்ள ஹோலி
ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரியில், உலக மகளிர் தினம் மற்றும் உலக நுகர்வோர்
தினவிழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கோவை மாவட்டக் கிளை, நுகர்வோர் பாதுகாப்பு
மற்றும் மகளிர் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,
மாவட்டக் கருவூல முன்னாள் அலுவலர் ராஜாமணி தலைமை வகித்தார். கல்லூரி
முதல்வர் ஜலஜாதேவி வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் முகமது பாதுஷா, மாவட்டச்
செயலாளர் ரிஷி சரவணன், நகரச் செயலாளர் செல்வமுருகேசன் ஆகியோர் மகளிர்
பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தும், நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு
குறித்தும் பேசினர்.
அறிவியல் இயக்க நீலகிரி மாவட்டச் செயலாளர் கே.ஜே.ராஜு பேசுகையில்,
நுகர்வோரின் பாதுகாப்பு, தகவல் பெறுவது, தேர்ந்தெடுப்பது, முறையிடுவது,
நிவாரணம் பெறுவது, நுகர்வோரின் கல்வி, உரிமைகளை சரியான முறையில் மகளிர்
பயன்படுத்துவது குறித்தும் பேசினார்.
மகளிர் பாதுகாப்பு குறித்து மாணவிகள் காயத்ரி, கோகிலாமணி ஆகியோர் பேசினர். உதவிப் பேராசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment