ஜனவரி,25,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா, போடி, தேனி, ஆண்டிபட்டி கிளைகள் அமைத்தல், டார்வின்-200 நிகழ்ச்சி, ஆசிரியர் இணையம், துளிர் இல்லம் ஆகிய தலைப்புகளில் பேசப்பட்டது. பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, ப.வாஞ்சிநாதன், பி.பிரேம்குமார், மு.பாலகிருஷ்ணகுமார், எம்.சரவணன், ப.மோகன்குமாரமங்கலம், ராஜ மகேந்திரன், தே.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் திருமிகு.அ.அமலராஜன் பங்கேற்றார்.