தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு சார்பில் தரமான கல்வி சமமாக வேண்டும் எனும் முழக்கத்தோடு மே 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களை சந்தித்து நமது கோரிக்கை மனுக்களை அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களையும் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த பிரச்சார இயக்கத்தில் மாநிலச்செயலர் தே.சுந்தர் மாவட்ட செயலர் வி.வெங்கட் மற்றும் மாவட்ட இணைச்செயலர் தெய்வேந்திரன் கம்பம் கிளைத்தலைவர் ஜி.பாண்டி கூடலூர் கிளைத்தலைவர் சீனிவாசன் கிளை இணைச்செயலர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நமது கோரிக்கைகள் அடங்கிய புதிய ஆசிரியன் மே இதழ் 150 பெறப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது
முதல் பக்கம்
May 15, 2016
தரமான கல்வி சமமாக வேண்டும் - வேட்பாளர் சந்திப்பு
May 9, 2016
புதன் இடை மறிப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கூடலூர் நகரக்கிளை சார்பில் மே 9 அன்று மாலை 5 ,மணிக்கு குரு டிரெயினிங் அகாடமியில் நடைப்பெற்றது.கூடலூர் கிளை இணைச்செயலாளர் போ.பிரபாகரன் மற்றும் பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் கருத்தாளராக கல ந்து கொண்டு புதன் இடைமறிப்பு குறித்து விளக்கம் அளித்தார். சரவணன் குழந்தைகளுடன் உரையாடினார். இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்
May 6, 2016
கூடலூர் நகரக்கிளை கூட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கூடலூர் நகரக்கிளைக் கூட்டம் மே 6 அன்று மாலை 5 மணி அளவில் கூடலூர் குரு டிரெயினிங் அகாடமியில் நடைப்பெற்றது. கிளைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார் கிளைச்செயலாளர் சூரியபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு முடிவுகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஆண்டிபட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து நமது கோரிக்ககை மனுக்கள் அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. மே 9 நடைபெற உள்ள புதன் இடைமறிப்பு நிகழ்ச்சியை குரு டிரெய்னிங் அகாடமியில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. மாநிலச்செயலர் தே.சுந்தர் மாவட்ட செயலர் வி,வெங்கட் கமபம் கிளை செயலர் க.முத்துக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை இணைச்செயலர் பிரபாகரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)