2019 டிசம்பர் 26ஆம் தேதி வளைய சூரிய கிரகண நிகழ்வை தேனி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.. குறிப்பாக கம்பம் வ.உ.சி. திடலில் பனியாரம் சாப்பிட்டுக் கொண்டே நூற்றுக்கும் மேற்பட்டோர் கிரகணம் கண்டு மகிழ்ந்தனர்.. மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார இயக்கமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.. மாநிலச் செயலாளர் சுந்தர் ஏற்பாடுகள் செய்திருந்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீராமன், பாண்டி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.. தேனி முல்லை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டு மகிழ்ந்தனர். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன் ஒருங்கிணைப்பில் கிளை நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
முதல் பக்கம்
Dec 27, 2019
மாவட்டத்தில் தெளிவாக தெரிந்தது: சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
பதிவு: டிசம்பர் 27, 2019 03:45 AM
கம்பம்
தேனி மாவட்டத்தில் சூரிய கிரகணத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேனி அருகே முல்லை நகர், கம்பம், போடி உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. இதனால் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
முல்லைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர். சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் பிரத்ேயக கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர். கிரகணம் பார்க்க வந்த மக்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பில் பனியாரம் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தேனி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சூரிய கிரகணத்தையொட்டி தெருவில் உலக்கையை நிறுத்தி வைத்து பொதுமக்கள் சோதித்து பார்த்தனர். கிரகணம் நடந்த நேரத்தில் உலக்கை சரியாமல் நேராக நின்றது. இதை மக்கள் வியந்து பார்த்தனர்.
சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கிரகண நேரம் முடிந்த பின்னரே கோவில் நடை திறக்கப்பட்டது. தேனியில் காலை 10.30 மணி வரை கிரகணம் தெளிவாக தெரிந்தது.
இதேபோல் கம்பம் வ.உ.சி. திடலில் சூரிய கிரகணத்தை பார்வையிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோமநாதன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த தொலை நோக்கி மற்றும் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர்.
நன்றி : தினத்தந்தி நாளிதழ்
Dec 26, 2019
சூரிய கிரகணம் பார்க்க அழைப்பு
கம்பத்தில் வளைய சூரிய கிரகணம் பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.இன்று காலை 8:06 மணி முதல் மதியம் 11:12 மணிவரை வானில் வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனை சூரிய கண்ணாடிகள் மூலம் பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கம்பம் வ.உ.சி. திடலில் 'வாங்க கிரகணம் பார்க்கலாம். பார்த்துகிட்டே பணியாரம் சாப்பிடலாம். வளைய சூரிய கிரகணம் வானில் ஒரு நிழல் விளையாட்டு,' என, பிரசாரம் செய்து அழைப்பு விடுத்தனர்.
நன்றி: தினமலர் நாளிதழ்
Dec 8, 2019
இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா
தேனி, டிச. 8-
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தேனியில் ஜான் பென்னிகுயிக் படிப்பகத்தில் - மாநில அள வில் தேர்ச்சிபெற்ற நாளைய விஞ்ஞானிகள் - தேசிய அள வில் பங்குபெறும் இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா 29.11.2019 மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க தேனி மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் மாநில செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், தலைமை ஆசிரியர்கள் கே. ஜே.கோபிநாத் - வெங்கடேசன் - குப்புசாமி - கவிஞர்கள் கவிக் கருப்பையா கழகப் பொதுக் குழு உறுப்பினர் மு.அன்புக்கர சன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்: ரியாஜில்ராசித், சந்துரு இருவரும் தேசிய அளவில் பங்குபெறும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் பெரிய குளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கள் மற்றும் தேனி கம்மானுர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள்: முகமது அப்துல்காதர் ஜெய் லானி, கார்த்திகேயன், ரூ.ஜர்ப்ரின், ப.ஸிரின், கே.பாண்டி மீனா, வி.ஸ்ரீபுவியா ஆகியோர் மாநில அளவில் தேர்ச்சிபெற்ற நாளைய விஞ்ஞானிகள் - அரிமா. பெரிய சாமி நினைவு பரிசுகள் வழங் கினார். செட் பவுண்டேஷன் நித்தியானந்தம் நன்றி கூறினார்.
நன்றி: விடுதலை.இன்
Subscribe to:
Posts (Atom)