முதல் பக்கம்

Nov 28, 2008

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

நவம்பர்,28,2008 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை, வட்டாரக்கிளைகள், கல்லூரிக்கிளைகள் அமைத்தல், குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு, பெற்றோர்-ஆசிரியர் இணையம், துளிர் இல்லங்கள் அமைத்தல், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் மாநாடு-ஜார்கண்ட், புத்தக விற்பனை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, எஸ்,சிவாஜி, மு.பாலகிருஷ்ணகுமார், மலைச்சாமி, தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்

Nov 1, 2008

மாவட்ட செயற்குழு கூட்டம்

நவம்பர்,1,2008 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலை அறிக்கை, எதிர்காலப் பணிகள், முன்மொழிவுகள் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. பேரா.மு.முகமது ஷெரீப் தலைமை வகித்தார். 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் நடைபெற்ற வேலைகள் குறித்துப் பேசினார். எதிர்காலப் பணிகளாக துளிர் இல்லக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம், பூமி மேளா ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. 

மாநிலச் செயலாளர் திருமிகு.அ.அமலராஜன் முன்மொழிய தே.சுந்தர் மாவட்டச் செயலாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். பேரா.எஸ்.எம்.எஸ்.சௌகத் அலி, பேரா.ஆர்.பாண்டி, பேரா.எஸ்.ராஜா, ஜெயமுருகன், எஸ்.சரவணன், மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Oct 12, 2008

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

அக்டோபர்,12,2008 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் போடி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, மாவட்டச்செயலாளர் ஹ.ஸ்ரீராமன், மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவாஜி, பேரா.ஆர்.பாண்டி, ப.வாஞ்சிநாதன், எஸ்.சரவணன், ராஜாராம், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் பங்கேற்று வழிகாட்டினார்.

Jun 14, 2008

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

ஜூன்,14,2008 அன்று போடி-சூலப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. வினாடி-வினா மற்றும் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலச்செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன், தே.சுந்தர், எஸ்.சிவாஜி, எஸ்.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Mar 6, 2008

தேனி கிளை அமைப்பு

மார்ச்,6,2008 அன்று தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு தேனி கிளை அமைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைத்தலைவராக பா.செந்தில்குமரன், செயலாலராக கே.பெரியசாமி, பொருளாளராக ப.செந்தில்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் மாநிலச்செயலாளர்கள் திருமிகு. மு.தியாகராஜன், திருமிகு.அ.அமலராஜன், கவிஞர்.இதயகீதன், பேரா.ஆர்.பாண்டி, மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவாஜி, மாவட்டக் கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் மு.பாலகிருஷ்ணகுமார், ப.மோகன்குமாரமங்கலம், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.