ஏப்ரல்,20,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் தேனி,பொம்மைய கவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட இணைச்செயலாளர் பேரா.மு.முகமது ஷெரீப் தலைமை வகித்தார். அமைப்பு மாநாடு-புதிய கிளைகள் மற்றும் உலக புத்தக தினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட மாநாட்டை ஜூன் மூன்றாவது வாரம் தேனியில் நடத்துவது எனவும் வாய்ப்புள்ள இடங்களில் புத்தக தின நிகழ்ச்சி நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. மாநிலச் செயலாளர் திருமிகு.அ.அமலராஜன் முன்னிலை வகித்தார். பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, பேரா.ஆர்.பாண்டி, ப.வாஞ்சிநாதன், பி.பிரேம்குமார், சி.உதயக்குமார், கே.பெரியசாமி, ப.செந்தில்மணி, கா.தேவன், மு.பாலகிருஷ்ணகுமார், பி.தனசேகரன், மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment